செட்டிகள்ளி ரோசரி தேவாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடக்குப் புறத் தோற்றம்.

செட்டிகள்ளி தேவாலயம் (Shettihalli Rosary Church) என்பது கர்நாடகாவின் செட்டிகள்ளியில் இருந்து 2 கி.மீ தொலைவில்Shettihalli உள்ளது. இது 1860ஆம் ஆண்டு பிரஞ்சு மிஷனரிகளால், கோத்திக் கட்டிடக்கலையில் கட்டப்பட்டது.[1] 1960களில் ஹேமாவதி அணை கட்டிய பிறகு இத்தேவாலயம் கைவிடப்பட்டது.[2] பருவமழை காலங்களில் நீரில் பாதி மூழ்கிக் காணப்படும் இத்தேவாலயத்தைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதனால் இது மூழ்கிய தேவாலயம் அல்லது மிதக்கும் தேவாலயம் என்று அழைக்கப்படுகிறது.[2]

செட்டிகள்ளி ரோசரி தேவாலயம்
தேவாலயத்தின் அழகான பிரஞ்சு வளைவு
ஹேமாவதி அணையில் இருந்து பார்க்கும்போது செட்டிகள்ளி தேவாலயத்தின் தோற்றம்

காண உகந்த காலம்[தொகு]

இந்த தேவாலயத்தின் முழு அழகைக் காண வருடத்தில் இரு முறை பயணிக்க வேண்டி உள்ளது. ஜூலை முதல் அக்டோபர் மாதத்தில் நீரில் பாதி மூழ்கி காட்சியளிக்கிறது. டிசம்பர் முதல் மே வரை நீர் வடிந்து முழுத்தோற்றம் காட்சி அளிக்கிறது.

பயண வழி[தொகு]

சாலை வழி: பெங்களூருவில் இருந்து 200 கிமீ தொலைவில் செட்டிகள்ளி உள்ளது. இரயில் வழி : யஷ்வந்பூரிலிருந்து கர்நாடகாவின் காசனுக்கு இரயில் செல்கிறது. காசனில் இருந்து செட்டிகள்ளி 40 கி.மீ தொலைவில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]