பெர்ரி-ஓபெர்டைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெர்ரி-ஓபெர்டைட்டு
Ferri-obertiite
கனிமத்தின் நெருக்கமான ஒரு காட்சி
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுNa(Na2)(Mg3Fe3+Ti)(Si8O22)O2

பெர்ரி-ஓபெர்டைட்டு (Ferri-obertiite) என்பது Na(Na2)(Mg3Fe3+Ti)(Si8O22)O2.[1] என்ற வேதி வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். இக்கனிமம் ஆம்பிபோல் குழுவைச் சேர்ந்த்தென 2015 ஆம் ஆண்டு முறையாக அனைத்துலக கனிமவியல் சங்கம் அங்கீகரித்தது.

பெர்ரி-ஓபெர்டைட்டு கனிமம் உயர் உவர்தன்மை கொண்ட கனிமமாகும். குறிப்பாக ஐதராக்சில் குழுவுக்குப் பதிலாக ஆக்சிசன் முன்னிலையில் இது அடையாளப்படுத்தப்படுகிறது. அல்லது டபிள்யூ தளத்தில் புளோரின் முன்னிலையில் அடையாளப்படுத்தப்படுகிறது. இத்தளத்தில் பெரிக் இரும்பும் தைட்டானியமும் இருப்பதால் நிலவும் உயர் நேர்மின் சுமையை புளோரின் ஈடு செய்கிறது. பல ஆம்பிபோல் குழு கனிமங்கள் போல பெர்ரி ஓபெர்டைட்டும் ஒற்றைச் சரிவச்சும் C2/m இடக்குழு அமைப்பும் கொண்டுள்ளது[1][2].

இத்தாலியின் பவியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் இராபர்ட்டா ஒபெர்டியின் நினைவாக கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Ferri-obertiite: Ferri-obertiite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-04.
  2. 2.0 2.1 Oberti, R., Boiocchi, M., Hawthorne, F.C., Ball, N.A., and Blass, G., 2015. Ferri-obertiite, IMA 2015-079. CNMNC Newsletter No. 28, December 2015, page ; Mineralogical Magazine 79, 1859–1864
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்ரி-ஓபெர்டைட்டு&oldid=3938651" இலிருந்து மீள்விக்கப்பட்டது