எம். கே. எம். அப்துல் சலாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். கே. எம். அப்துல் சலாம் (M. K. M. Abdul Salam) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், அன்றைய சென்னை மாகாணத்தின் (இன்றைய தமிழ்நாடு), திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதியிலிருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1957 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாக போட்டியிட்டு, இந்திய மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

பிறப்பு[தொகு]

இவர் திருச்சியில் உள்ள பாலக்கரையில், பிப்ரவரி 26, 1921 ஆம் ஆண்டு எம். கே. முகம்மது இப்ராகிம் என்பவருக்கு மகனாக பிறந்தார்.

கல்வி[தொகு]

இவர் புனித சூசையப்பர் கல்லூரியில் கல்வி பயின்றார்.

வகித்த பதவிகள்[தொகு]

  • தொழிலதிபர் (தோல் பதனிடுதல்- கட்டுமானம்)
  • திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கவுன்சிலர்
  • திருச்சிராப்பள்ளி மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர்
  • திருச்சிராப்பள்ளி மாவட்ட நூலக கமிட்டி உறுப்பினர்
  • மெட்ராஸ் பிளையிங் கிளப்பின் நிர்வாக உறுப்பினர்
  • சென்னை மாகாண கவுன்சில் உறுப்பினராக 1952 - 1956 ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்தார்.

குடும்பம்[தொகு]

ஈ.ஏ.ஜி. ஹபிபுன்னிசா பேகம் என்ற மனைவியும், இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]