அக்டாக்சைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்டாக்சைட்டு
Aktashite
சாம்பல்நிற அக்டாக்சைட்டு அச்சு வார்ப்பில் அதிக அளவில் சிதறியுள்ளது.
பொதுவானாவை
வகைசல்போவுப்பு
வேதி வாய்பாடுCu6Hg3As4S12
இனங்காணல்
மோலார் நிறை1667.51 கி/மோல்
படிக அமைப்புமுக்கோணம்
மேற்கோள்கள்[1][2]

அக்டாக்சைட்டு (Aktashite) என்பது Cu6Hg3As4S12 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஆர்சனிக் சல்போவுப்புக் கனிமம் என்று இக்கனிமம் வகைப்படுத்தப்படுகிறது. தாமிரம் பாதரசம் ஆகியத் தனிமங்கள் அக்டாக்சைட்டு கனிமத்தின் பகுதிக்கூறுகளாக உள்ளன. சல்போவுப்புகளில் இக்கனிமம் மட்டுமே அத்தியாவசியமான தாமிரம் மற்றும் பாதரசத்தைப் பெற்றுள்ள கனிமமாக இதுவரை அறியப்பட்டுள்ளது. நீர்வெப்பச் சுழற்சி காரணமாக இக்கனிமம் தோன்றுகிறது. அனைத்துலக கனிமவியல் கூட்டமைப்பின் புதிய கனிமங்கள் பெயரிடல் மற்றும் வகைப்படுத்தல் ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமலேயே அக்டாக்சைட்டு கனிமம் வெளியிடப்பட்டது, ஆனால் ஒரு பயனுள்ள கனிம இனம் என்று இதே அமைப்பின் சல்போவுப்புத் துணைக் குழு 2008 ஆம் ஆண்டு அங்கீகரித்துள்ளது[1][2][3][4][5].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 http://www.mindat.org/min-74.html Mindat
  2. 2.0 2.1 http://www.handbookofmineralogy.org/pdfs/aktashite.pdf பரணிடப்பட்டது 2022-07-09 at the வந்தவழி இயந்திரம் Handbook of Mineralogy
  3. Fleischer, Michael (1973). "New Mineral Names". American Mineralogist 58: 562. http://www.minsocam.org/ammin/AM58/AM58_560.pdf. 
  4. Fleischer, Michael (1971). "New Mineral Names". American Mineralogist 56: 358–359. http://www.minsocam.org/ammin/AM56/AM56_358.pdf. 
  5. Gruzdev, V. S.; Chernitsova, N. M.; Shumkova, N. G. (1972). "Aktashite, Cu6Hg3As4S12, new data" (in Russian). Doklady Akademii Nauk SSSR 206: 694–697. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்டாக்சைட்டு&oldid=3592334" இலிருந்து மீள்விக்கப்பட்டது