அருண் பிரசாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அருண் பிரசாத் சுப்பிரமணியன் (Subramanian Arun Prasad) ஓர் இந்திய சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் 1988 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் நாள் தமிழ்நாட்டிலுள்ள சேலம் மாவட்டத்தில் பிறந்தார். 2004 ஆம் ஆண்டு ஈரான் நாட்டின் தலைநகரான தெகுரானில் நடைபெற்ற 16 வயதுக்கு உட்பட்டோர்களுக்கான ஆசிய சதுரங்க சாம்பியன் பட்டப்போட்டியில் இவர் வெற்றி பெற்றார். அப்போட்டியின் இறுதியில் வியட்நாமைச் சேர்ந்த கிராண்டு மாசுட்டர் லீ குவாங் லைமானை சமநிலை போட்டியில் வீழ்த்தி இவ்வெற்றியைப் பெற்றார்[1][2]. இவ்வெற்றி அருண் பிரசாத்திற்கு பிடே மாசுட்டர் பட்டத்தைப் பெற்றுத் தந்தது. அதே ஆண்டில் இந்தியாவின் பிகானேர் நகரில் நடைபெற்ற இளையோருக்கான ஆசிய சதுரங்கச் சாம்பியன் பட்டப் போட்டியிலும் வெற்றி பெற்றார். இப்போட்டியின் இறுதியில் இவர் தீபன் சக்ரவர்த்தியை சமநிலைப் போட்டியில் வென்றார்[3].

2008 ஆம் ஆண்டில் இந்தியாவின் 18 வது சதுரங்க கிராண்டு மாசுடர் என்ற தகுதியைப் பெற்றார். 2009 ஆம் ஆண்டில் இசுகாட்லாந்தின் எடின்பர்க் நகரில் நடைபெற்ற இசுகாட்டிசு சதுரங்க சாம்பியன் பட்டப்போட்டியில் வெற்றி பெற்று அப்போட்டியில் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ஈட்டினார் [4]. 2010 ஆம் ஆண்டில் துருக்கியிலுள்ள புர்சாவில் நடைபெற்ற உலக சாம்பியன் பட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற இந்திய அணியில் அவர் பங்கு பெற்றிருந்தார். அப்போட்டியில் 5 ஆவது பலகைக்கான தனிநபர் வெண்கலப் பதக்கம் இவருக்கு வழங்கப்பட்டது [5]. 2011 இல் பாரிசு சதுரங்க சாம்பியன் பட்டமும் [6] , 2015 ஆம் ஆண்டில் வாசிங்டன் ஓபன் சதுரங்கப் போட்டித் தொடரில் மூன்றாவது இடமும் அருண்பிரசாத ஈட்டிய பிற வெற்றிகளாகும். வாசிங்டன் ஓபன் சதுரங்கப் போட்டியின் இறுதியில் அமெரிக்க கிராண்டு மாசுட்டர் கடா காம்சுகியைக் காட்டிலும் ஒரு புள்ளி மட்டுமே பின் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும் [7].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Arun Prasad, Vinuthna strike gold". The Hindu. 2004-04-09. http://www.thehindu.com/2004/04/09/stories/2004040903621800.htm. 
  2. Crowther, Mark (2004-04-12). "TWIC 492: Asian Boys and Girls Championships". The Week in Chess. பார்க்கப்பட்ட நாள் 2016-07-08.
  3. Rao, Rakesh. "Fortune favours Arun Prasad". The Hindu: pp. 17 இம் மூலத்தில் இருந்து 2005-05-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050513130653/http://www.hindu.com/2004/12/31/stories/2004123101561700.htm. 
  4. "Scottish Chess Championship". www.chessscotland.com. பார்க்கப்பட்ட நாள் 2016-05-01.
  5. "Arun Prasad guides India to victory". NDTVSports.com. Archived from the original on 2013-11-22. பார்க்கப்பட்ட நாள் 2016-05-01.
  6. "GM Arun Prasad Champion of Paris". Chessdom. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2016-05-01.
  7. "Gata Kamsky dominant in Washington". Chess News. ChessBase. 2015-08-16. பார்க்கப்பட்ட நாள் 2016-05-01.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருண்_பிரசாத்&oldid=3541705" இலிருந்து மீள்விக்கப்பட்டது