பென்சிலிடின் சேர்மங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குளுக்கோசின் பென்சிலிடின் அசிட்டால்

பென்சிலிடின் சேர்மங்கள் (Benzylidene compounds) என்பவற்றை முறையாகச் சொல்வதென்றால், சில சேர்மங்கள் கார்பீனிலிருந்து தயாரிக்கப்பட்டாலும் இவற்றை பென்சிலிடின் வழிப்பெறுதிகள் என்று கூறலாம். PhCH(OR)2 என்ற வடிவத்தில் செயற்கையாகத் தயாரிக்கப்படும் கரிமச் சேர்மங்களில் பென்சிலிடின் அசிட்டால் ஒரு பாதுகாப்புக்குழுவாக்க் கருதப்படுகிறது. உதாரணமாக 4,6-ஆர்த்தோ-பென்சிலிடின்- குளுக்கோபைரனோசு என்பது ஒரு குளுக்கோசு வழிப்பெறுதியாகும். PhCHX2 மற்றும் PhCH= பதிலிகள் (Ph = C6H5) வகையான சேர்மங்களுக்கு பென்சிலிடின் என்ற சொல் ஒரு தொன்மையான சொல்லாகும். உதாரணமாக (PhCH=CH)2CO என்ற சேர்மம் டைபென்சிலிடின் அசிட்டோன் என்ற பெயராலும், பென்சால் எனப்படும் PhCHCl2 என்ற சேர்மம் பென்சிலிடின் குளோரைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகின்றன.

C6H5CH என்பது பென்சிலிடின் மூலக்கூறு ஆகும். இது கார்பீனின் (சி.ஏ.எசு RN 3101-08-4) மும்மை ஆகும்.பீனைல் ஈரசோமெத்தேனை கதிர்வீச்சுக்கு உட்படுத்தி இதைத் தயாரிக்கிறார்கள்[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. Platz, Matthew S. (1995). "Comparison of Phenylcarbene and Phenylnitrene". Accounts of Chemical Research 28: 487-92. doi:10.1021/ar00060a004. 

புற இணைப்புகள்[தொகு]