நான்காம் மிண்டோ பிரபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிண்டோ பிரபு

நான்காம் மிண்டோ பிரபு, கில்பர்ட் ஜான் எலியட்-முறே-கினின்மௌன்டு (Gilbert John Elliot-Murray-Kynynmound, 4th Earl of Minto, 1845 - 1914), ஐக்கிய இராச்சியத்தின் தலைமைப் படைத்தலைவர்களில் ஒருவரான இவர், பிரித்தானிய இந்தியாவின் 17-வது வைஸ்ராயாக 18 நவம்பர் 1905 முதல் 23 நவம்பர் 1910 முடிய பணியாற்றியவர். மேலும் இவர் கனடாவின் 8-வது தலைமை ஆளுநராக 12 நவம்பர் 1898 முதல் 10 டிசம்பர் 1904 வரை பணியாற்றியவர். [1]

மிண்டோ-மார்லி சீர்திருத்தங்கள்[தொகு]

1909ல் மிண்டோ-மார்லி ஆகியவர்களின் பரிந்துரைகளின் படி இயற்றப்பட்ட இந்திய அரசுச் சட்டம், 1909 [2], இந்திய மாகாணச் சட்டமன்றங்களுக்கு, இந்திய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க தேர்தல் முறை முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் சட்டமன்றங்களும், உள்ளாட்சி அமைப்புகளும் விரிவுபடுத்தப்பட்டு இந்திய உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. சட்டமன்றங்களிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் முசுலிம்களுக்கு தனி இடங்கள் (25%) ஒதுக்கப்பட்டன. முசுலிம் உறுப்பினர்களை முசுலிம்களே தேர்ந்தெடுக்க தனித்தொகுதிகளும் உருவாக்கப்பட்டன. தலைமை ஆளுனர் மற்றும் மாநில ஆளுனர்களின் நிருவாகக் குழுக்கள் விரிவுபடுத்தப்பட்டு அதில் சில இந்தியர்களுக்கும் இடமளிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Gilbert John Elliot-Murray-Kynynmound, 4th earl of Minto
  2. The Government of India Act 1919

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்காம்_மிண்டோ_பிரபு&oldid=3146669" இலிருந்து மீள்விக்கப்பட்டது