நீனா வரகில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீனா வரகில்
2017
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியன்
பிறப்பு2 மே 1991 (1991-05-02) (அகவை 32)[1]
மெப்பாயூர், கோழிக்கோடு
உயரம்1.70 மீ[2]
எடை52 கி.கி
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுதடகள விளையாட்டு
நிகழ்வு(கள்)நீளம் தாண்டுதல்
சாதனைகளும் விருதுகளும்
தனிப்பட்ட சாதனை(கள்)6.66மீ, பெங்களுரு (11/7/2016)
பதக்கத் தகவல்கள்
27 August 2018 இற்றைப்படுத்தியது.

நீனா வரகில் (Neena Varakil) என்பவர் ஓர் இந்திய தடகள விளையாட்டு விரராவார். இவ்வீராங்கனை நீளம் தாண்டும் போட்டியில் பங்கேற்று விளையாடுவார். 1991 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் நாள் இவர் பிறந்தார். 2016 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் பெங்களுரில் நடைபெற்ற போட்டியில் இவர் 6.6 மீட்டர் நீளம் தாண்டி வெற்றி பெற்றார். இதுவே நீனா வரகிலின் தனிப்பட்ட சாதனையாகும்[1].

சீனாவின் இயாசிங் நகரில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கிராண்டு பிரிக்சு தடகள சந்திப்புப் போட்டியில் நீனா 6.37 மீட்டர் நீளத்தைத் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார்[3].

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன் பட்டப் போட்டியில் நீனா வெள்ளிப் பதக்கமும், ஒரே நாட்டைச் சேர்ந்த நயானா இயேம்சு வெண்கலப் பதக்கமும் பெற்றனர்[4].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Neena Varakil[தொடர்பிழந்த இணைப்பு], All-Athletics, Retrieved 13 July 2017
  2. "2018 CWG bio". Archived from the original on 29 ஏப்ரல் 2018. பார்க்கப்பட்ட நாள் 28 April 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Asian Grand Prix: Neena Varakil wins gold in women's long jump, javelin thrower Neeraj Chopra qualifies for World Championships, 27 April 2017, ZeeNews.india.com, Retrieved 13 July 2017
  4. "Asian Athletics Championships 2017: List of all medal winners for India". 2017-07-10. https://www.sportskeeda.com/athletics/asian-athletics-championships-2017-list-all-medal-winners-india. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீனா_வரகில்&oldid=3733015" இலிருந்து மீள்விக்கப்பட்டது