கார்ட்டோசாட்-2சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்ட்டோசாட்-2சி
திட்ட வகைபுலங்காணல்
இயக்குபவர்தேசிய தொலை உணர்வு மையம்[மேற்கோள் தேவை]
காஸ்பார் குறியீடு2016-040A
சாட்காட் இல.41599
இணையதளம்PSLV-C34 webpage
திட்டக் காலம்திட்டமிடப்பட்டது: 5 ஆண்டுகள்
திட்ட எடுத்த நேரம் 11 மாதம், 7நாள்கள்
விண்கலத்தின் பண்புகள்
விண்கல வகைபுவி கவனிப்பு செயற்கைக்கோள்
தயாரிப்புஇந்திய விண்வெளி ஆய்வு மையம்
ஏவல் திணிவு727.5 kg (1,604 lb)[1]
திறன்986 வாட்சு
சுற்றுப்பாதை அளபுருக்கள்
சுற்றுவெளிசூரிய ஒளியின் சுற்றுப்பாதை
அண்மைவட்டணைப்புள்ளி497 km (309 mi)
சாய்வு97.4581°
சுற்றுக்காலம்94.72 நிமிடம்

கார்ட்டோசாட்-2சி (Cartosat-2c) என்பது சூரிய ஒளியின் சுற்றுப்பாதை பாதையில் வலம்வரும் கார்ட்டோசாட்-2 தொகுதியின் நான்காவது புவி கவனிப்பு செயற்கைக்கோள் ஆகும். இந்தச் செயற்கைக்கோளினை அகமதாபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மையத்தில் தயாரிக்கப்பட்டது. மேலும் இதனைப் பராமரித்து , விண்ணில் செலுத்தியது இந்திய விண்வெளி ஆய்வு மையம் ஆகும். இந்த செயற்கைக்கோள் சூன் 22, 2016 இல் விண்ணில் செலுத்தப்பட்டது.[2]

தாங்குசுமை[தொகு]

இந்தச் செயற்கைக்கோள் மின்காந்த கதிர்வீச்சின் விபரிப்பான மின்காந்த நிழற்பட்டையினை கருப்பு வெள்ளைப் படமாக எடுக்கக்கூடிய பன்னிற ஒளிப்படக்கருவியினை தாங்கிச் செல்கிறது. மேலும் உயர்தர பிரிதிறன் கொண்ட பன்நிறமாலைப் பிரிதிறன் கொண்ட ஒளிப்படக் கருவியினையும் தாங்கிச் செல்கிறது.[3] இந்தச் செயற்கைக்கோள் 0.6 மீ புறவெளி பிரிதிறன் கொண்டுள்ளது.[2] நிலையான் இடத்தில் சுமார் 1 நிமிடம் வரையிலான காட்சிகளை நிகழ்படமாக எடுக்கும் திறன் கொண்டுள்ளது.[4]

ஏவுதல்[தொகு]

இந்தச் செயற்கைக் கோளினை சூன் 20, 2016 இல் விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால் வாயுக் கசிவின் காரணமாக இரு முறை தாமதமானது.[5] பின் சூன் 22, 2016 இல் சதீஸ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது திண்டில் இருந்து ஏவப்பட்டது. இத்துடன் சிறிய செயற்கைக் கோள்களான லபான்-ஏ3, பைரஸ், ஸ்கைசேட், ஜென்2-1 மற்றும் நுண்ம செயர்கைக்கோள்களான ஜிஎச்ஜிசேட்-டி மற்றும் எம்3எம்சேட் மற்றும் நுண்னுட்ப செயர்கைக் கோள்களான ஸ்வயம் மற்றும் சத்யபாமா சேட் ஆகியவை இத்துடன் இணைத்து அனுப்பப்பட்டன.

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "PSLV-C34: Cartosat Brochure" (PDF). Indian Space Research Organisation. Archived from the original (PDF) on 30 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 19 June 2017.
  2. 2.0 2.1 "ISRO to focus on R&D, industries’ space pie to be scaled up". Press Trust of India. The Hindu. 5 August 2013. http://www.thehindu.com/todays-paper/tp-national/2016-set-to-lift-isro-towards-heavy-missions/article8032709.ece. பார்த்த நாள்: 9 February 2016. 
  3. "Satellite:Cartosat-2C". wmo-sat.info. பார்க்கப்பட்ட நாள் 9 February 2016.
  4. "Indian Space Research Organisation (ISRO) India's Gateway Into the Future". Archived from the original on 2017-03-05.
  5. "పిఎస్‌ఎల్‌వి-34 ప్రయోగం వాయిదా". Andhrabhoomi. http://www.andhrabhoomi.net/content/nation-628. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்ட்டோசாட்-2சி&oldid=3580680" இலிருந்து மீள்விக்கப்பட்டது