பிமோலா குமாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாரங்பம் பிமோலா குமார்
Sarungbam Bimola Kumari Devi
பிமோலா குமாரி பத்ம சிறீ விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்சியிடமிருந்து பெறுகிறார்.
பிறப்புமணிப்பூர், இந்தியா
பணிமருத்துவர்
செயற்பாட்டுக்
காலம்
1979 முதல்
அறியப்படுவதுகிராமப்புற மருத்துவ சேவை
விருதுகள்பத்மசிறீ
டாக்டர் அம்பேத்கார் அனைத்துலக விருது

சாரங்பம் பிமோலா குமாரி தேவி (Sarungbam Bimola Kumari Devi) என்பவர் ஓர் இந்திய மருத்துவர் ஆவார். இவர் இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்திலுள்ள இம்பால் நகரின் மேற்கு மண்டலத்தின் முதன்மை மருத்துவராகப் பணியாற்றினார்.[1][2]. மணிப்பூர் மாநிலத்தில் 1979ஆம் ஆண்டு முதல் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். பெரும்பாலும் இவர் கிராமப்புறங்களிலே மருத்துவ சேவையாற்றியுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் மாநிலத்திற்கு வருகை தந்தபோது இரண்டு முறையும் இவரே பிரதமரின் உணவு பாதுகாப்பு பிரிவின் தலைவராக இருந்தார்.[3]. 2014ஆம் ஆண்டில் டாக்டர். பி. ஆர். அம்பேத்கார் அனைத்துலக விருது பிமோலா குமாரிக்கு வழங்கப்பட்டது.[3]. மேலும் 2015ஆம் ஆண்டு இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மசிறீ விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "India Medical Times". India Medical Times. 26 January 2015. Archived from the original on 23 ஏப்ரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 20 February 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "DNA India". DNA India. 25 January 2015. பார்க்கப்பட்ட நாள் 20 February 2015.
  3. 3.0 3.1 "State doctor to be conferred Padma Shri". Imphal Free Press. 2015 இம் மூலத்தில் இருந்து 18 அக்டோபர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181018082653/https://www.ifp.co.in/page/items/25084/state-doctor-to-be-conferred-padma-shri. பார்த்த நாள்: 20 February 2015. 
  4. "Padma Awards". Padma Awards. 2015. Archived from the original on 26 January 2015. பார்க்கப்பட்ட நாள் 16 February 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிமோலா_குமாரி&oldid=3587573" இலிருந்து மீள்விக்கப்பட்டது