3,3'-டைகுளோரோபென்சிடின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
3,3'-டைகுளோரோபென்சிடின்[1]
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
3,3'-டைகுளோரோ[1,1'-பைபீனைல்]-4,4'-டையமீன்
வேறு பெயர்கள்
4-(4-அமினோ-3-குளோரோபீனைல்)-2-குளோரோ அனிலின்
4,4'-ஈரமினோ-3,3'-இருகுளோரோஇருபீனைல்
o,o'-இருகுளோரோபென்சிடீன்
3,3'-இருகுளோரோஇருபீனைல்-4,4'-ஈரமீன்
3,3'-இருகுளோரோ-4,4'-இருபீனைலீரமீன்
3,3'-இருகுளோரோ-4,4'-ஈரமினோஇருபீனைல்
இனங்காட்டிகள்
91-94-1
ChEMBL ChEMBL314470 Y
ChemSpider 6803 Y
InChI
  • InChI=1S/C12H10Cl2N2/c13-9-5-7(1-3-11(9)15)8-2-4-12(16)10(14)6-8/h1-6H,15-16H2 Y
    Key: HUWXDEQWWKGHRV-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C12H10Cl2N2/c13-9-5-7(1-3-11(9)15)8-2-4-12(16)10(14)6-8/h1-6H,15-16H2
    Key: HUWXDEQWWKGHRV-UHFFFAOYAF
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C19225 Y
பப்கெம் 7070
SMILES
  • Clc2cc(c1ccc(N)c(Cl)c1)ccc2N
பண்புகள்
C12H10Cl2N2
வாய்ப்பாட்டு எடை 253.13 கி/மோல்
தோற்றம் சாம்பல் அல்லது ஊதா நிற படிகத்திண்ம்ம்
உருகுநிலை 132 முதல் 133 °C (270 முதல் 271 °F; 405 முதல் 406 K)
கொதிநிலை 402 °C (756 °F; 675 K)
0.07% (15°செல்சியசு)[2]
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் புற்று நோயூக்கி[2]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
carcinogen[2]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
Ca[2]
உடனடி அபாயம்
Ca [N.D.][2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

3,3'-டைகுளோரோபென்சிடின் (3,3'-Dichlorobenzidine) என்பது (C6H3Cl(NH2))2 அல்லது C12H10Cl2N2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். தூய்மையான நிலையில் இச்சேர்மம் வெளிர் மஞ்சள் நிறத்துடன் காணப்படுகிறது. வர்த்தக மாதிரி உப்புகள் பெரும்பாலும் வண்ணங்களாகக் காணப்படுகின்றன. அரிதாக இச்சேர்மம் தண்ணீரில் கரைகிறது. ஈரமுள்ள ஒரு பசையாக பெரும்பாலும் இது வழங்கப்படுகிறது. அச்சு மைகள் தயாரிக்கப் பயன்படும் டையரைலைடு மஞ்சள் எனப்படும் ஈரரைலைடு மஞ்சள் என்ற சாயத்தைத் தயாரிப்பதற்கு 3,3'-டைகுளோரோபென்சிடின் சேர்மம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. புற்றுநோய் அச்சம் காரணமாக சாயங்கள் தயாரிக்கும் தொழிலில் இச்சேர்மத்தைப் பயன்படுத்துவது கைவிடப்பட்டுள்ளது.

தயாரிப்பு[தொகு]

நைட்ரோகுளோரோபென்சீன் சேர்மத்திலிருந்து இரண்டு படிநிலைகளில் 3,3'-டைகுளோரோபென்சிடின் தயாரிக்கப்படுகிறது. முதல் படிநிலையில் காரத்திலுள்ள துத்தநாகத்தைப் பயன்படுத்தி ஒடுக்கவினை நிகழ்த்தி 3,3'-டைகுளோரோடைபீனைலைதரசீன் என்ற இடைநிலை சேர்மம் தயாரிக்கப்படுகிறது. இவ்விடைநிலை பென்சிடின் மறுசீரமைப்பு வினைக்கு உட்பட்டு 3,3'-டைகுளோரோபென்சிடின் சேர்மத்தைத் தருகிறது [3].

வினைகள்[தொகு]

3,3'-டைகுளோரோபென்சிடினின் நீரிய கரைசல் ஒளியினால் தரங்குறைந்து மோனோகுளோரோ வழிப்பெறுதியைக் கொடுக்கிறது. இது குளோரினேற்றத்திற்கு உட்பட்டு டெட்ராகுளோரோ வழிப்பெறுதியைத் தருகிறது.

3,3'-டைகுளோரோபென்சிடினின் மிகப்பரவலாகப் பயன்படுத்தப்படும் வினை ஈரசோனியமாக்கல் வினையாகும். இந்த பிசு(ஈரசோ) இடைநிலை பின்னர் பிணைப்பு வினைக்கு உட்பட்டு அசிட்டோ அசிட்டைலமினோபென்சீன் (CH3C(O)CH2C(O)NHAr) வழிப்பெறுதிகளைக் கொடுக்கிறது. இவ்வழிமுறையில் மஞ்சள் சாயம் 12, மஞ்சள் சாயம் 13, மஞ்சள் சாயம் 14, மஞ்சள் சாயம் 17, மஞ்சள் சாயம் 83 போன்ற வர்த்தக முறை மஞ்சள் சாயங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன[3]

வர்த்தக முக்கியத்துவமிக்க டையரைலைடு சாயம் எனப்படும் மஞ்சள் சாயம் 12. ஈரசோனியம் வழிப்பெறுதியான 3,3'-டைகுளோரோபென்சிடின் சேர்மத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது

.

முற்காப்பு[தொகு]

3,3'-டைகுளோரோபென்சிடின் சேர்மம் புற்று நோயை உருவாக்கும் வேதிச்சேர்ம்மாகக் கருதப்படுகிறது [1]. விலங்குகளில் புற்றுநோய் கட்டிகள் உருவாக்கும் நிகழ்வை இச்சேர்ம்ம் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது [4]. ஏனெனில் பென்சிடின் என்ற புற்றுநோய் ஊக்கியுடன் கட்டமைப்பு ரீதியாக இது ஒத்துள்ளது. மனிதர்களிலும் சிறுநீர்ப்பை புற்றுநோயை ஏற்படுத்துவதில் இதேபோன்ற வழிமுறையை இச்சேர்ம்ம் பகிர்ந்து கொள்ளலாம் என நம்பப்படுகிறது [4].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Dichlorobenzidine - Compound Summary, PubChem.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0191". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  3. 3.0 3.1 Schwenecke, H. (2005). "Benzidine and Benzidine Derivatives". Ullmann’s Encyclopedia of Industrial Chemistry. Wiley-VCH. DOI:10.1002/14356007.a03_539. 
  4. 4.0 4.1 "3, 3'-Dichlorobenzidine". U.S. Environmental Protection Agency, Integrated Risk Information System. 7 March 2011. Accessed 3 May 2011.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=3,3%27-டைகுளோரோபென்சிடின்&oldid=3362683" இலிருந்து மீள்விக்கப்பட்டது