டொலோனியம் குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டொலோனியம் குளோரைடு
பெயர்கள்
IUPAC பெயர்
(7-அமினோ-8-மெதில்- பினோதையசீன்-3-யிலைடீன்)- டைமெதில்-அம்மோனியம்
இதர பெயர்கள்
டொலுயிடீன் நீலம் O
Identifiers
3D model (JSmol)
ChEBI
ChEMBL
ChemSpider
ECHA InfoCard 100.001.952
MeSH Tolonium+chloride
PubChem <abbr title="<nowiki>Compound ID</nowiki>">CID
UNII
Properties
C15H16N3S+
வாய்ப்பாட்டு எடை 270.374 கி/மோல்
Except where otherwise noted, data are given for materials in their standard state (at 25 °C [77 °F], 100 kPa).
☒verify (what is ☑Y☒N ?)
Infobox references

டொலோனியம் குளோரைடு (Tolonium chloride) டொலுயிடீன் நீலம் அல்லது டி.பி.ஓ எனவும் அழைக்கப்படும் ஒரு நேரயனியைக் கொண்ட காரச் சாயமாகும். இந்த சாயம் இழையவியலிலும் சில நேரங்களில் மருத்துவச சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகிறது.

லிக்னினுக்கான சோதனை[தொகு]

டொலுயிடீன் நீலக்கரைசலானது, தாவரங்களில் செல் சுவர்களில் காணப்படும் மாவிய இழைகளை ஒன்றோடு ஒன்று பிணைக்கும் சிக்கலான கரிம மூலக்கூறான லிக்னின் எனும் சேர்மத்தைக் கண்டறிய உதவுகிறது. டொலுயிடீன் சோதனையானது நீலத்திலிருந்து இளஞ்சிவப்பிற்கு மாற்றமடைவது நேர்மறையான முடிவாகும். இதே போன்ற சோதனையானது, புளோரோகுளூசினால்-ஐதரோகுளோரிக் மிலக் கரைசல் சிவப்பாக மாறுவதாகும்.

இழையவியல் துறையில் இதர பயன்கள்[தொகு]

டொலுயிடீன் நீலமானது, பெரும்பாலும் எப்பாரின் என்ற தகுதியினால் அவைகளின் சைட்டோபிளாசக் குறுமணிகளில் காணப்படும் அடிநாட்டக்கல செல்களை அடையாளம் காணப் பயன்படுத்தப்படுகிறது,[1] இது குருத்தெலும்பு போன்ற திசுக்களில் காணப்படும் புரோட்டியோகிளைக்கான்கள் மற்றும் கிளைகோசமினோகிளைக்கான்களை நிறமேற்ற பயன்படுத்தப்படுகிறது. அடிநாட்டக்கல செல்கள் மற்றும் குருத்தெலும்பு ஆகியவற்றின் வலுவான அமிலத்தன்மையுடைய பெருமூலக்கூற்று கார்போஹைட்ரேட்டுகள் நீல நிறச் சாயத்தின் காரணமாக சிவப்பு நிறமாக மாற்றமடையும் நிகழ்வானது மெட்டாகுரோமேசியா என அழைக்கப்படுகிறது.

டொலுயிடீன் நீலத்தின் காரக்கரைசல்கள் பொதுவாக பிசின்-உட்பொதிக்கப்பட்ட திசுக்களில் காணப்படும் பகுதியளவு மெல்லிய (0.5 முதல் 1 மைக்ரோமீட்டர்) பகுதிகளைத் சாயமேற்ற பயன்படுத்தப்படுகின்றன. உயர் pH இல் (சுமார் 10) இச்சாயமானது நியூக்ளிக் அமிலங்கள் மற்றும் அனைத்து புரதங்களோடும் இணைகிறது. திசுக்கள் அனைத்தும் சாயமேற்றப்பட்டாலும், பிரிவுகளின் மெல்லிய தன்மை காரணமாக கட்டமைப்பு விவரங்கள் தெளிவாகத் தெரிகின்றன. பகுதியளவு-மெல்லிய பிரிவுகள் அவற்றைக்காட்டிலும் மேலதிக மெல்லிய பிரவுகளோடு இணைந்து காணப்படும் நேர்வில் அவை எதிர்மின்னி நுண்நோக்கி மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன.

மருத்துவ சிகிச்சையில் பயன்பாடுகள்[தொகு]

இந்த சாயம் சில நேரங்களில் அறுவைசிகிச்சைகளில் புற்றுநோய்க்கு முந்தைய நிலையிலுள்ள உருக்குலைவுகளில் (உ.ம்:வெண்படல் ) மெல்லிய சவ்வுகளில் காணப்படும் இயல்புப்பிறழ்ந்த வளர்ச்சிப் பகுதிகளை அடையாளம் காட்டுவதற்காக அல்லது பிற பகுதிகளிலிருந்து தனித்துத் தெரியும்படி காட்டுவதற்காக மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது. சாதாரணத் திசுக்களை விட இத்தகைய திசுக்கள் இந்த நிறமேற்றியை நன்றாக எடுத்துக் கொள்கின்றன.[2]உருக்குலைந்த திசுக்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றும்போது அறுவை சிகிச்சையின் மீதமுள்ள விளிம்புப்பகுதியில் உள்ள திசுக்களை நீக்குவதா? அல்லது அவ்விடத்தில் விட்டு விடுவதா? என்பதைத் தீர்மானிக்கவும் உயிர்த்திசுச்சோதனைக்காக மாதிரி சேகரிக்கும் போது புற்றுக்கட்டியின் சரியான முடிவைத் தரும் பகுதியைத் தேர்ந்தெடுக்கவோ இச்சாயம் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Carson, Freida L; Hladik, Christa (2009). Histotechnology: A Self-Instructional Text (3 ). Hong Kong: American Society for Clinical Pathology Press. பக். 188. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-89189-581-7. 
  2. Scully, C; Porter, S (Jul 22, 2000). "ABC of oral health. Swellings and red, white, and pigmented lesions.". BMJ (Clinical research ed.) 321 (7255): 225–8. doi:10.1136/bmj.321.7255.225. பப்மெட்:10903660. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டொலோனியம்_குளோரைடு&oldid=3687784" இலிருந்து மீள்விக்கப்பட்டது