நகர அருங்காட்சியகம், ஐதராபாத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


நகர அருங்காட்சியகம் (City Museum) இந்தியாவிலுள்ள தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தில் அமைந்திருக்கும் ஓர் அருங்காட்சியகமாகும். பூரணி அவேலி அரண்மனையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது[1][2].

வரலாறு[தொகு]

2012 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 11 ஆம் நாள் நகர அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது. ஐதராபாத்தை ஆட்சிபுரிந்த கடைசி மன்னரான மிர் உசுமான் அலிகானின் பெயரனும், நிசாம் மணிமண்டப அறக்கட்டளையின் தலைவருமான இளவரசர் முஃபாகாம் யாக் அருங்காட்சியகத்தைத் தொடங்கி வைத்தார்[3].

அருங்காட்சியகம்[தொகு]

கற்கால பானைகள், பெருங்கற்கால தளங்கள், ஐரோப்பிய வகை சிலைகள், சாதவாகன காலத்திய நாணயங்கள் மற்றும் பல தொல்பொருட்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]