பென்சைல் சின்னமேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பென்சைல் சின்னமேட்டு
Skeletal formula of benzyl cinnamate
Space-filling model of the benzyl cinnamate molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பென்சைல்3-பீனைல் புரோப்-2-யினோயேட்டு
வேறு பெயர்கள்
பென்சைல் சின்னமேட்டு; சின்னமெயின்; பென்சைல்சின்னமோயேட்டு; பென்சைல் 3-பீனைல்புரோப்பினோயேட்டு; 3-பீனைல்-2-புரோப்பனோயிக் அமில பீனைல்மெத்தில் எசுத்தர்; சின்னமிக் அமில பென்சைல் எசுத்தர்
இனங்காட்டிகள்
103-41-3
ChemSpider 4437893
InChI
  • InChI=1S/C16H14O2/c17-16(12-11-14-7-3-1-4-8-14)18-13-15-9-5-2-6-10-15/h1-12H,13H2/b12-11+
    Key: NGHOLYJTSCBCGC-VAWYXSNFSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 5273469
SMILES
  • C1=CC=C(C=C1)COC(=O)C=CC2=CC=CC=C2
பண்புகள்
C16H14O2
வாய்ப்பாட்டு எடை 238.29 g·mol−1
தோற்றம் வெண்மை முதல் வெளிர் மஞ்சள் நிறத் திண்மம்[1]
உருகுநிலை 34–37 °C (93–99 °F; 307–310 K)[2]
கொதிநிலை 195–200 °C (383–392 °F; 468–473 K) 5 மி.மீ பாதரசம்
கரையாது[1]
எத்தனால்-இல் கரைதிறன் 125 கி/லி
கிளிசரீன்-இல் கரைதிறன் கரையாது
புரோப்பைலீன் கிளைக்கால்-இல் கரைதிறன் கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பென்சைல் சின்னமேட்டு (Benzyl cinnamate) என்பது C16H14O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இது சின்னமிக் அமிலம் மற்றும் பென்சைல் ஆல்ககாலிலிருந்து வழிப்பெறுதியாகப் பெறப்படும் ஓர் எசுத்தராகும்.

இயற்கைத் தோற்றம்[தொகு]

மைராக்சைலோன் மரத்திலிருந்து கிடைக்கும் பெரு பிசின் மற்றும் தொலு பிசினில் பென்சைல் சின்னமேட்டு தோன்றுகிறது. சுமத்திரா மற்றும் பினாங்கில் பென்சோயின் பிசினிலும் தென் அமெரிக்க மரவகைகளிலிருந்து கிடைக்கும் கோப்பைபா மரப்பிசினின் பகுதிப்பொருளாகவும் இது காணப்படுகிறது [3].

தயாரிப்பு[தொகு]

பென்சைல் குளோரைடு மற்றும் தண்ணீரில் மிகையளவு சோடியம் சின்னமேட்டு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து 100-115 °செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கும்போது பென்சைல் சின்னமேட்டு உருவாகிறது. ஈரெத்திலமீன் முன்னிலையில் சோடியம் சின்னமேட்டுடன் மிகையளவு பென்சைல் குளோரைடைச் சேர்த்து சூடுபடுத்தியும் இதைத் தயாரிக்கலாம் [3].

பயன்கள்[தொகு]

பூசுமஞ்சள் போன்ற வாசனைத் திரவியங்களிலும், ஒரு நிலைநிறுத்தியாகவும் [4], நறுமணச்சுவை சேர்க்கும் முகவராகவும் [3] பென்சைல் சின்னமேட்டு பயன்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Specifications for Flavourings". Food and Agriculture Organization. Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2018-12-04.
  2. "Benzyl cinnamate". Sigma-Aldrich.
  3. 3.0 3.1 3.2 George A. Burdock (2010), "BENZYL CINNAMATE", Fenaroli's Handbook of Flavor Ingredients (6th ed.), CRC Press, pp. 147–148
  4. Karl-Georg Fahlbusch; et al. (2007), "Flavors and Fragrances", Ullmann's Encyclopedia of Industrial Chemistry (7th ed.), Wiley, p. 59

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்சைல்_சின்னமேட்டு&oldid=3701346" இலிருந்து மீள்விக்கப்பட்டது