கிளைக்கால் டைசிடீயரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிளைக்கால் டைசிடீயரேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,2-எத்தேன்டையைல் டையாக்டாடெக்கேனோயேட்டு
வேறு பெயர்கள்
எத்திலீன் கிளைக்கால் டைசிடீயரேட்டு; எத்திலீன் டைசிடீயரேட்டு; எத்திலீன் கிளைக்கால் டையாக்டாடெக்கேனோயேட்டு
இனங்காட்டிகள்
627-83-8 Y
ChemSpider 55120
InChI
  • InChI=1S/C38H74O4/c1-3-5-7-9-11-13-15-17-19-21-23-25-27-29-31-33-37(39)41-35-36-42-38(40)34-32-30-28-26-24-22-20-18-16-14-12-10-8-6-4-2/h3-36H2,1-2H3
    Key: FPVVYTCTZKCSOJ-UHFFFAOYSA-N
  • InChI=1/C38H74O4/c1-3-5-7-9-11-13-15-17-19-21-23-25-27-29-31-33-37(39)41-35-36-42-38(40)34-32-30-28-26-24-22-20-18-16-14-12-10-8-6-4-2/h3-36H2,1-2H3
    Key: FPVVYTCTZKCSOJ-UHFFFAOYAD
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 61174
SMILES
  • O=C(OCCOC(=O)CCCCCCCCCCCCCCCCC)CCCCCCCCCCCCCCCCC
பண்புகள்
C38H74O4
வாய்ப்பாட்டு எடை 595.01 g·mol−1
தோற்றம் வெண் செதில்கள்
உருகுநிலை 65 முதல் 73 °C (149 முதல் 163 °F; 338 முதல் 346 K)[1]
கரையாது
தீங்குகள்
Lethal dose or concentration (LD, LC):
4,700 மி.கி/கி.கி (எலி)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

கிளிசரால் டைசிடீயரேட்டு (Glycol distearate) என்பது C38H74O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சிடீயரிக் அமிலம் மற்றும் எத்திலீன் கிளைக்கால் இரண்டும் வினைபுரிவதால் உருவாகும் ஒரு டையெசுத்தர் கிளைக்கால் டைசிடீயரேட்டு ஆகும். இச்சேர்மம் பெரும்பாலும் சுகாதாரம் மற்றும் ஒப்பனைப் பொருட்களில் காணப்படுகிறது. அங்கு ஒளியியல் விளைவுகளை உருவாக்கவும், ஈரப்பதமுட்டியாகச் செயல்படவும் பயன்படுத்தப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

சிடீயரிக் அமிலம் (அல்லது சிடீயரிக் அமில எசுத்தர்கள்) எத்திலீன் கிளைக்காலுடன் சேர்க்கப்பட்டு எசுத்தராக்கல் வினைக்கு உட்படும்போது கிளிசரால் டைசிடீயரேட்டு உருவாகிறது. சிடீயரிக் அமிலம் எத்திலீன் ஆக்சைடுடன் வினைபுரிவதாலும் இச்சேர்மம் உருவாகிறது [2].

பயன்பாடுகள்[தொகு]

மெல்லிய தட்டுகளாக கிளைக்கால் டைசிடீயரேட்டை படிகமாக்கும்போது உருவாகும் திரவங்களும் அரைத்திண்மக் கரைசல்களும் ஒளிரும் தோற்றத்தைக் கொடுக்கின்றன [3]. மழைக்குளியல் திரவங்கள் போன்ற தனிநபர் உடல்நலப் பாதுகாப்ப்பு பொருள்களிலும், தோலை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும் ஈரப்பதமுட்டிகளிலும் இவ்வொளிர் கரைசல்களை உற்பத்தியாளர்கள் பயன்படுத்துகிறார்கள்.

பொதுவாக நுண்ணோக்கியலில் ஓர் உட்பொதியும் முகவராக கிளைக்கால் டைசிடீயரேட்டு பயன்படுத்தப்படுகிறது.

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ethylene glycol distearate, chemicalland21.com
  2. Wrigley, A. N.; Smith, F. D.; Stirton, A. J. (January 1959). "Reaction of ethylene oxide or propylene oxide with long-chain fatty acids. Mono- and diester formation". Journal of the American Oil Chemists’ Society 36 (1): 34–36. doi:10.1007/BF02540263. 
  3. Bolzinger, M.A.; Cogne, C.; Lafferrere, L.; Salvatori, F.; Ardaud, P.; Zanetti, M.; Puel, F. (May 2007). "Effects of surfactants on crystallization of ethylene glycol distearate in oil-in-water emulsion". Colloids and Surfaces A: Physicochemical and Engineering Aspects 299 (1-3): 93–100. doi:10.1016/j.colsurfa.2006.11.026.