கீழத்தஞ்சாவூர் ஸ்ரீமூலநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கீழத்தஞ்சாவூர் ஸ்ரீமூலநாதர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்[தொகு]

திருவாரூர்-திருமருகல்-(வழி) கங்களாஞ்சேரி-திருப்பயத்தங்குடி அடுத்து, புத்தகரம் உள்ளது. அங்கிருந்து வலப்புறத்தில் உள்ளது. கீழத்தஞ்சாவூர் என்றும் இவ்வூர் அழைக்கப்படுகிறது.

இறைவன்,இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் ஸ்ரீமூலநாதர் ஆவார். இறைவி அகிலாண்டேசுவரி ஆவார். [1]

பிற சன்னதிகள்[தொகு]

திருச்சுற்றில் மகாலட்சுமி, பைரவர், சந்திரன், சனீசுவரர் சன்னதிகள் உள்ளன. இத்தலம் செருத்துணை நாயனார் அவதரித்த தலமாகும். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009