கிள்ளுகுடி அகத்தீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிள்ளுகுடி அகத்தீசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்[தொகு]

கீவளூர் (கீழ் வேளூர்) கச்சினம் சாலையில் கிள்ளுகுடி உள்ளது. கிள்ளிகுடி என்றும் இவ்வூர் அழைக்கப்படுகிறது.

இறைவன்,இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் அகத்தீசுவரர் ஆவார். இறைவி சிவகாமசுந்தரி ஆவார். [1]

பிற சன்னதிகள்[தொகு]

சிறிய கோயிலாக உள்ளது. மூலவர் மேற்கு பார்த்த நிலையில் உள்ளார். வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், பைரவர் ஆகியோர் காணப்படுகின்றனர். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009