நயீம் இஸ்லாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முகமது நயீம் இஸ்லாம் (Mohammad Naeem Islam) வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் வங்காளதேச அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்,பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.வலதுகை மட்டையாளரான இவர் வலது கை புறத்திருப்பப் பந்து வீச்சாளர் ஆவார். இவர் டிசம்பர் 31, 1986 இல் கைபந்தாவில் பிறந்தார். மேலும் இவர் வங்காளதேச அ அணி, 19 வயதிற்கு உட்பட்ட வங்காளதேச அணி, சிட்டகொங் கிங்ஸ், வங்காளதேச கிழக்கு மாகாண அணி ராஜ்ஷாசி மாகாண அணி மற்றும் ராங்பூர் மாகாண அணிகளுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

உள்ளூர்ப் போட்டிகள்[தொகு]

பெப்ரவரி 12, 2005 இல் ராஜ்ஷாசி அணிக்காக பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். சிட்டகொங் மாகாண அணிக்கு எதிரான துடுப்பாட்டப் போட்டியில் 8 பந்துகளில் 4 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அக்டோபர் 9, 2008 இல் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான சர்வதேச போட்டியில் அறிமுகமானார். முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் டிசம்பர் 2011 வரை இவர் ஏழு நூறுகள் மற்றும் 17 ஐம்பது ஓட்டங்களை அடித்துள்ளார். பரிசல் மாகாணத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 136 ஓட்டங்கள் எடுத்ததே இவரின் அதிகபட்ச ஓட்டம் ஆகும்.

2017-18 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தாக்க பிரீமியர் கிரிக்கெட் லீக் தொடரில் லெஜண்ட்ஸ் ஆஃப் ருக்பான்ஜி அணிக்காக விளையாடினார். அந்தத் தொடரில் 16 போட்டிகளில் விளையாடி 720 ஓட்டங்கள் எடுத்து அதிக ஓட்டங்கள் எடுத்த ருக்பான்ஜி வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார்.[1] மேலும் 2018-19 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய துடுப்பாட்ட லீக்கில் ராங்பூர் மாகாண அணிக்காக ஆறு போட்டிகளில் விளையாடி 444 ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த ராங்பூர் அணி வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார்.[2]

சர்வதேச போட்டிகள்[தொகு]

அறிவிக்கப்பட்டாத இந்தியன் கிரிக்கெட் லீக்கில் வங்காளதேச அணி வீரர்கள் பதினான்கு பேர் கலந்து கொண்டதால் அவர்களை நீக்க வங்காளதேச துடுப்பாட்ட வாரியம் முடிவு செய்து புதிய வீரர்களை அனுமதிக்க தீர்மானித்தது. அக்டோபர் ,2008 இல் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடரில் அனுபவமில்லாத மூன்று வீரர்களை அணியில் சேர்ததது. அதில் நயீம் இஸ்லாமும் ஒருவர் ஆவார். வங்காளதேசத் தேர்வுக்குழுத் தலைவர் ரஃபுகுல் இஸ்லாம் , நயீம் சிறந்த திறமையான வீரர் எனத் தெரிவித்தார்.[3] இவர் மூன்று போட்டிகளிலும் கலந்து கொண்டார். அதில் இரன்டாவது போட்டியில் பந்துகளை சந்திக்காமல் ரன் அவுட் ஆனார்.[4] சிட்டகொங்கில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்கள் எடுத்தார். இருந்தபோதிலும் வங்காளதேச அணி 79 ஓட்டங்களில் தோல்வி அடைந்தது.[5]

இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடியதால் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அனிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் இவருக்கு இடம் கிடைத்தது.[6] முதல் ஆட்டப் பகுதியில் 14 ஓட்டங்களும் இரன்டாவது ஆட்டப் பகுதியில் 19 ஓட்டங்களும் எடுத்தார். பின் பந்துவீச்சில் டேனியல் ஃபிலின் இலக்கினை முதல் இலக்காகக் கைப்பற்றினார்.[7]

சான்றுகள்[தொகு]

  1. "Dhaka Premier Division Cricket League, 2017/18: Legends of Rupganj". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 April 2018.
  2. "National Cricket League, 2018/19 - Rangpur Division: Batting and bowling averages". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 November 2018.
  3. "Bangladesh include three uncapped players". Cricinfo. 6 October 2008. பார்க்கப்பட்ட நாள் 7 November 2008.
  4. "Naeem set for Test debut". Cricinfo. 16 October 2008. பார்க்கப்பட்ட நாள் 7 November 2008.
  5. Taylor Century Sets Up Series Win For New Zealand[தொடர்பிழந்த இணைப்பு], Cricket World, 14 October 2008
  6. "Naeem and Mahbubul get Test call-ups". Cricinfo. 14 October 2008. பார்க்கப்பட்ட நாள் 7 November 2008.
  7. "Test no. 1888: New Zealand in Bangladesh Test Series – 1st Test: Bangladesh v New Zealand". Cricinfo. 17 October 2008. பார்க்கப்பட்ட நாள் 7 November 2008.

வெளியிணைப்புகள்[தொகு]

கிரிக் இன்ஃபோ

"https://ta.wikipedia.org/w/index.php?title=நயீம்_இஸ்லாம்&oldid=3217958" இலிருந்து மீள்விக்கப்பட்டது