அண்டோசோனைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கால்சைட்டுடன் காணப்படும் அண்டோசோனைட்டு, பிரான்சிலுள்ள மார்க்னாக் சுரங்கத்தில் கிடைத்தது. - (6x5.5cm)
புளோரைட்டு (அண்டோசோனைட்டு) செருமனியின் வோல்செண்டோர்ப் சுரங்கத்தில் கிடைத்தது.

அண்டோசோனைட்டு (Antozonite) என்பது ஒரு கதிரியக்க புளோரைட்டு வகை கனிமமாகும். வரலாற்றில் இக்கனிமம் இசிடிங்சிபேட்டு, இசிடிங்பிளசு, இசிடிங்சிடெய்ன், இசிடிங்சுபார்[1], பெடிட்டு புளோரைட்டு[2]) என்ற பெயர்களால் அறியப்படுகிறது. 1841 ஆம் ஆண்டு செருமனி நாட்டிலுள்ள பவேரியாவின் வோல்செண்டார்பில் முதன் முதலில் இக்கனிமம் கண்டறியப்பட்டு[3]. பின்னர் 1862 ஆம் ஆண்டு பெயரிடப்பட்டது[4].

தனிமநிலை புளோரின் பல்வேறு உட்சேர்க்கைப் பொருள்களுடன் சேர்ந்துள்ள ஒரு படிகமாக இக்கனிமம் விவரிக்கப்படுகிறது[5]. இப்படிகங்கள் நொறுக்கப்படும்போது அல்லது உடைக்கப்படும்போது தனிமநிலை புளோரின் விடுபடுகிறது. யுரேனிய உட்சேர்க்கைகளின் பீட்டா கதிரியக்க வெளியீட்டால் கால்சியம் புளோரைடு தொடர்ச்சியாக கால்சியம் மற்றும் புளோரின் அணுக்களாக உடைகிறது. புளோரின் அணுக்கள் இணைந்து டைபுளோரைடு எதிர்மின் அயனிகளாகவும் தொடர்ந்து மிகை எலக்ட்ரான்களை படிகக் குறையிலிருந்து இழந்து புளோரின் உருவாகிறது[6][7]. அடுத்ததாக புளோரின் வளிமண்டல ஆக்சிசன் மற்றும் நீராவியுடன் வினைபுரிந்து ஓசோனையும் ஐதரசன் புளோரைடையும் கொடுக்கிறது. ஓசோனை அடையாளப்படுத்தும் மணம் தவறுதலாக அண்டோசோன் என்ற கருத்தியல் சேர்மமாக கருதப்பட்டதால் இக்கனிமம் அண்டோசோனைட்டு என்ற பெயரைப் பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Stinky rocks hide Earth’s only haven for natural fluorine at Nature; by Katharine Sanderson; published July 11, 2012; retrieved October 17, 2013
  2. Carbonatites and alkalic rocks of the Arkansas River area, Fremont County, Colorado. 2. Fetid gas from carbonatite and related rocks, American Mineralogist, vol. 50, November–December 1965; E. Wm. Heinrich and Raymond J. Anderson
  3. Some physical properties of naturally irradiated fluorite, American Mineralogist, Robert Berman, 1956; "The material has been given the name antozonite, after the supposed evanescent gas, antozone. Earlier names were Stinkstein and Stinkfluss (Hausmann, 1847)"
  4. American Journal of Science, 1862
  5. Study of the solid and gaseous inclusions in the fluorites from Wölsendorf (Bavaria, F.R. of Germany) and Margnac (Haute Vienne, France) by microprobe and mass spectrometry பரணிடப்பட்டது 2012-09-10 at Archive.today, by R. Vochten, E. Esmans and W. Vermeirsch, Chemical Geology, volume 20, 1977 எஆசு:10.1016/0009-2541(77)90047-X
  6. First Direct Evidence that Elemental Fluorine Occurs in Nature பரணிடப்பட்டது 2021-03-17 at the வந்தவழி இயந்திரம், News Release, Technische Universität München, 5 July 2012
  7. Fluorine Finally Found in Nature, Chemistry World, Royal Society of Chemistry, 11 July, 2012
"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்டோசோனைட்டு&oldid=3407745" இலிருந்து மீள்விக்கப்பட்டது