பர்லாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பர்லாஸ்
برلاس
தாயில்லம்போர்சிசின்
விருதுப்
பெயர்கள்
கான், மிர்ஜா, ஷா, பெய்க், சர்தார், எமிர், ஹாசி, சுல்தான்
நிறுவனர்க்யாராசர் பர்லாஸ்

பர்லாஸ் (மொங்கோலியம்: Barulas;[1]பாரசீக மொழி: برلاسBarlās; also Berlas) என்பவர்கள் மங்கோலிய[1]துருக்கிய[2][3] கலப்பின குழுக்கள் ஆவர். இவர்கள் மத்திய ஆசிய நாடுகளில் இருந்தவர்கள் ஆவர்.[4][5]

உருவாக்கம்[தொகு]

மத்திய ஆசியாவின் பாபர்.

மங்கோலியர்களின் இரகசிய வரலாறு கூற்றின்படி பர்லாஸ் மங்கோலிய வம்சத்தை சார்ந்தவர்கள் ஆவர். செங்கிஸ் கான் மற்றும் அவர் பின் வந்த மங்கோலிய மன்னர்களின் மத்திய ஆசிய வழித்தோன்றள்கள் ஆவர் என ஒக்தாயி கான் வாழ்ந்த (1229 – 1241) காலத்திலிருந்து அறியப்படுகின்றனர். ஒக்தாயி செங்கிஸ் கானின் மூன்றாவது பிள்ளை ஆவார். இரண்டாம் மிகச்சிறந்த கான் என்றும் அழைக்கப்படுவார். தன்னுடைய தந்தை தொடங்கி வைத்த மங்கோலிய பேரரசை சரியான முறையில் வழிநடத்தி மங்கோலிய சாம்ராஜியத்தை ஐரோப்பா, ஆசியா கண்டத்தில் சீனா, ஈரான் மற்றும் மத்திய ஆசியாவில் வேரூன்றியவர் ஒக்தாயி கான் ஆவார். க்யாராஜர் பர்லாஸ் என்பவர் மிகச்சிறந்த பர்லாஸ் என குறிப்பிடப்படுகிறார் [2] இவர் சகதை கான் படைத்தலபதியும் ஆவார். செங்கிஸ் கானின் இரண்டாவது மகன் ஆவார். இவர் கி.பி. 1226லிருந்து-கி.பி. 1242 வரை சகதை கானேட்டின் கான் ஆக பதவி வகித்தார்.சகதை மொழி மற்றும் சகதை மக்கள் இவருக்குப்பின் பெயரிடப்பட்டனர். தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு ஐந்து மத்திய ஆசிய நாடுகளில் பெரும்பாலானவற்றை பெற்றார். இவர்களின் மூதாதையராக போடோன்சார் முன்ஹாக் கருதப்படுகிறார்.போடோன்சார் முன்ஹாக் (அநேகமாக கி.பி. 850 - கி.பி. 900) என்பவர் ஒரு புகழ்பெற்ற மங்கோலியப் போர்த்தலைவர் ஆவார். இவர் செங்கிஸ் கான் மற்றும் பர்லாஸ் மங்கோலியர்களின் மூதாதையர் ஆவார். இந்த பர்லாஸ் இனத்தில் தான் தைமூரும் தோன்றினார். ஆகையால் இவர் இந்தியாவை ஆண்ட முகலாயர்களுக்கும் மூதாதையர் ஆவார்.[6] இவர்கள் தங்களது அதிகாரத்தை நிலைநாட்டி அரசு பதவிகளை பெற்றனர்.[7] மற்றும் உள்நாட்டு[8] இசுலாமிய இன கலப்பு மூலம் ஈரான்,அரபி மற்றும் துருக்கி மொழிகள், மத வழக்கங்களை கற்றனர்[9] . இது பலதார மணத்தினால் பெரிதும் மாறுதல் பெற்றது. இவர்களின் ஆளுகையின் இந்து குஷ் பகுதி வந்தது தற்போதய உசுபெக்கிசுத்தான் நாட்டின் பகுதிகள்.[10]

தைமூரிய வம்சம் மற்றும் முகலாய வம்சம்[தொகு]

தைமூரிய வம்ச ஆட்சி பகுதி

தைமூர் (9 ஏப்ரல் 1336 - 18 பெப்ரவரி 1405) 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துருக்கிய - மங்கோலிய கலப்பினப் பேரரசர் ஆவார். இவர் மேற்கு ஆசியா, மத்திய ஆசியா ஆகியவற்றின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றி தைமூரியப் பேரரசை நிறுவினார். தைமூரிய வம்சத்தை உருவாக்கியவரும் இவரே.தைமூரிய வம்சம் மங்கோலிய துருக்கிய இன வழித்தோன்றலின் பாரசீக மன்னர்கள். பதினான்காம் நூற்றாண்டுகளில் இவர்களின் ஆளுகைக்கு தற்போதய ஈராக், ஈரான், மத்திய ஆசிய நாடுகள், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா பகுதிகள் வந்தது.[11]

இந்திய துணைக்கண்டத்தின் முகலாயப் பேரரசு 1526–1707

இவர்கள் பதினான்காம் நூற்றாண்டு முதல் பதினாறாம் நூற்றாண்டு வரை இந்திய துணைக்கண்டத்தை ஆண்டனர்.[12] மங்கோலிய துருக்கிய / மங்கோலிய பாரசீக மன்னரான பாபர் தில்லி சுல்தானை வென்று தற்போதய தெற்கு ஆசியாவை ஆண்ட இசுலாமிய மன்னர் ஆவார். இவர்களின் கடைசி பேரரசர் ஔரங்கசீப் ஆவார். முகலாயப் பேரரசு உச்ச நிலையில் இருக்கும்பொழுது, அக்காலத்தில் பாரதம் என்று அழைக்கப்பட்ட இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசம் போன்ற நாடுகளின் பெரும் பகுதிகளை உள்ளடக்கிய பேரரசாக இருந்தது. கிபி 1526 தொடக்கம், 1712 வரையான காலப்பகுதியில் இந்த அரசு நிலைபெற்றிருந்தது. துருக்கிய -பாரசீக / துருக்கிய -மங்கோலிய தெமூரித் தலைவனான பாபர், 1526 ஆம் ஆண்டில் கடைசி டில்லி சுல்தானான, இப்ராஹிம் லோடி என்பவரை, முதலாவது பானிபட் போரில் தோற்கடித்து முகலாய அரசைத் தோற்றுவித்தார். முகல் என்பது மங்கோலியர் என்பதற்கான பாரசீக மொழிச் சொல்லாகும். முகலாயர் இஸ்லாம் சமயத்தைச் சேந்தவர்கள்.

முகலாயப் பேரரசர்கள்[தொகு]

முகலாயப் பேரரசர்கள்
பேரரசன் ஆட்சியேற்பு ஆட்சி முடிவு
பாபர் 1526 1530
ஹுமாயூன் 1530 1540
இடையீடு * 1540 1555
ஹுமாயூன் 1555 1556
அக்பர் 1556 1605
ஜஹாங்கீர் 1605 1627
சா சகான் 1627 1658
ஔரங்கசீப் 1658 1707
முதலாம் பகதூர் ஷா 1707 1712

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Grupper, S. M. ‘A Barulas Family Narrative in the Yuan Shih: Some Neglected Prosopographical and Institutional Sources on Timurid Origins.’ Archivum Eurasiae Medii Aevi 8 (1992–94): 11–97
  2. 2.0 2.1 B.F. Manz, The rise and rule of Tamerlan, Cambridge University Press, Cambridge 1989, p. 28: "... We know definitely that the leading clan of the Barlas tribe traced its origin to Qarachar Barlas, head of one of Chaghadai's regiments ... These then were the most prominent members of the Ulus Chaghadai: the old Mongolian tribes — Barlas, Arlat, Soldus and Jalayir ..."
  3. M.S. Asimov & Clifford Edmund Bosworth, History of Civilizations of Central Asia, UNESCO Regional Office, 1998, ISBN 92-3-103467-7, p. 320: "... One of his followers was [...] Timur of the Barlas tribe. This Mongol tribe had settled [...] in the valley of Kashka Darya, intermingling with the Turkish population, adopting their religion (Islam) and gradually giving up its own nomadic ways, like a number of other Mongol tribes in Transoxania ..."
  4. Encyclopædia Britannica, "Timur", Online Academic Edition, 2007. Quotation: "Timur was a member of the Barlas tribe, a Mongol subgroup that had settled in Transoxania (now roughly corresponding to Uzbekistan) after taking part in Genghis Khan's son Chagatai's campaigns in that region. Timur thus grew up in what was known as the Chagatai khanate." ...
  5. G.R. Garthwaite, "The Persians", Malden, ISBN 978-1-55786-860-2, MA: Blackwell Pub., 2007. (p.148)
  6. The Secret History of the Mongols, transl. by I. De Rachewiltz, Chapter I பரணிடப்பட்டது பெப்பிரவரி 23, 2007 at the வந்தவழி இயந்திரம்.
  7. B.F. Manz, The rise and rule of Tamerlan, Cambridge University Press, Cambridge 1989, p.157
  8. Gérard Chaliand, A Global History of War: From Assyria to the Twenty-First Century, University of California Press, California 2014, p. 151
  9. G. Doerfer, "Chaghatay பரணிடப்பட்டது நவம்பர் 18, 2007 at the வந்தவழி இயந்திரம்", in Encyclopædia Iranica, Online Edition 2007.
  10. B.F. Manz, The rise and rule of Tamerlan, Cambridge University Press, Cambridge 1989, p. 157
  11. René Grousset, The Empire of the Steppes: A History of Central Asia, Rutgers University Press, 1988. ISBN 0-8135-0627-1 (p.409)
  12. René Grousset, The Empire of the Steppes: A History of Central Asia, Rutgers University Press, 1988. ISBN 0-8135-0627-1 (p.409)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்லாஸ்&oldid=3460247" இலிருந்து மீள்விக்கப்பட்டது