இரிக்கார்டைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரிக்கார்டைட்டு
Rickardite
தெலூரியத்தின் மீது இரிக்கார்டைட்டு
பொதுவானாவை
வகைதெலூரைடு கனிமம்
வேதி வாய்பாடுCu7Te5
இனங்காணல்
நிறம்செவ்வூதா (புதியது),
படிக அமைப்புசெஞ்சாய்சதுரம்
மோவின் அளவுகோல் வலிமை3 12
மிளிர்வுஉலோகத்தன்மை
கீற்றுவண்ணம்சிவப்பு
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது

இரிக்கார்டைட்டு (Rickardite) என்பது Cu7Te5[1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். Cu3-x (x = 0 to 0.36)Te2 [2] என்ற பொது வாய்ப்பாட்டையும் இக்கனிமத்தைக் குறிக்கப் பயன்படுத்துகிறார்கள். அமெரிக்காவின் குன்னிசன் கொலராடோ மாகாணத்திலுள்ள வல்கேன் மாவட்டத்தில் அமைந்துள்ள குட் ஓப் சுரங்கத்தில் இக்கனிமம் முதன்முதலாக கண்டறியப்பட்டது[3]. சுரங்கத்தின் பொறியாளர் தாமசு ஆர்தர் இரிக்கார்டு (1864–1953) நினைவாக கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது. தாமசு இரிக்கார்டு இவருடைய சகோதரர் ஆவார்[1]. தாழ் வெப்பநிலையில் நீர்வெப்பக் கனிமமாகக் காணப்படும் இக்கனிமம் வல்கேனைட்டு, வெண்கந்தகம், கேமரோனைட்டு, பெட்சைட்டு, சில்வேனைட்டு, பெர்த்தியிரைட்டு, பைரைட்டு, ஆர்சனோபைரைட்டு, போர்னைட்டு போன்ற கனிமங்களுடன் சேர்ந்து இயற்கையில் தோன்றுகிறது[2].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிக்கார்டைட்டு&oldid=2593664" இலிருந்து மீள்விக்கப்பட்டது