அடா-மாலிக் ஜுவய்னி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அடா மாலிக் ஜுவய்னி
பாக்தாத்தின் ஆளுநர்
பதவியில்
1259–தெரியவில்லை
முன்னையவர்குவோ கான்[1][2][3][4][5]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1226
ஜுவய்ன், பெரிய குராசான்
இறப்பு1283
அஜர்பைஜான் (ஈரான்)
தேசியம்பாரசீகன்
Military service
பற்றிணைப்புமங்கோலியப் பேரரசு, இல்கானேடு

அடா-மாலெக் ஜுவய்னி (1226–1283) (பாரசீக மொழி: عطاملک جوینی‎) அல்லது அலா அல்-டின் அடா-உல்லாஹ் (பாரசீக மொழி: علاءالدین عطاءالله‎) என்பவர் ஒரு பாரசீக வரலாற்றாளர் ஆவார். இவர் மங்கோலியப் பேரரசைப் பற்றி டரிக்-இ ஜஹான்குஷய்-இ ஜூவைனி (உலகத்தை வென்றவரின் வரலாறு) என்ற புத்தகத்தை எழுதி உள்ளார்.

இவர் கிழக்கு பாரசீகத்தின் குராசான் பகுதியில் ஜுவய்ன் என்ற நகரத்தில் பிறந்தார். இவரது தாத்தாவும் மற்றும் இவரது தந்தை பஹா அல்-டினும் முறையே முகம்மது ஜலால் அல்-டின் மற்றும் ஒகோடி கானிடம் சாஹிப்-திவான் அல்லது நிதி அமைச்சராகப் பதவி வகித்தனர். பஹா அல்-டின் அண். 1246ல் அமீர் அர்குனிடம் துணைப் பதவி வகித்தார். இப்பதவியில் இவர் ஜார்ஜியா இராச்சியம் உட்பட ஒரு பெரிய பகுதியை நிர்வாகம் செய்தார்.

ஜுவய்னியும் ஒரு முக்கியமான அதிகாரியாகப் பேரரசில் பதவி வகித்தார். இவர் மங்கோலியப் பேரரசின் தலைநகரமான கரகோரத்திற்கு இரண்டு முறை சென்றுள்ளார். இவ்வாறு ஒரு முறை (அண். 1252-53) செல்லும் போது இவர் மங்கோலியப் படையெடுப்பைப் பற்றிய தன்னுடைய வரலாற்றை எழுதத் தொடங்கினர். 1256ல் அலமுத்தை ஹுலாகு கான் வென்ற போது இவர் அவருடன் இருந்தார். அங்கிருந்த முக்கியமான ஒரு பகுதி நூலகத்தை காப்பாற்றியதில் முக்கியப் பங்காற்றினார். 1258ல் ஹுலாகு பாக்தாத்தை முற்றுகையிட்ட போதும் இவர் அவருடன் இருந்தார். அடுத்த வருடம் பாக்தாத், கீழ் மெசபடோமியா மற்றும் குசிஸ்தான் ஆகிய பகுதிகளுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார். 1282 வாக்கில் வான் ஏரிக்கு வடமேற்கில் அலா-டக் புல்வெளியில் நடந்த மங்கோலியக் குறுல்த்தாயில் இவர் கலந்து கொண்டார். அடுத்த ஆண்டு இவர் முகான் அல்லது அஜர்பைஜானின் (ஈரான்) அர்ரான் என்ற இடத்தில் இறந்தார்.

அதிகாரம் வாய்ந்த சம்ஸ் அல்-டின் மொஹம்மத் சாஹிப்-டிவான் என்பவர் ஜுவய்னியின் சகோதரர் ஆவார். அவர் நிதி அமைச்சராக ஹுலாகு மற்றும் அபகா கானிடம் பணியாற்றினார்.

உசாத்துணை[தொகு]

  1. Colin A. Ronan (1995). The Shorter Science and Civilisation in China. Volume 5 of The Shorter Science and Civilisation in China: An Abridgement of Joseph Needham's Original Text (illustrated ). Cambridge University Press. பக். 250. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-521-46773-X. https://books.google.com/books?id=dwZzTvNwA84C&pg=PA250. பார்த்த நாள்: 2011-11-28. "Moreover, many Chinese were in the first wave of the Mongolian conquest of Iran and Iraq - a Chinese general, Guo Kan, was first governor of Baghdad after its capture in ad 1258. As the Mongols had a habit of destroying irrigation and" 
  2. Original from the University of Michigan Thomas Francis Carter (1955). The invention of printing in China and its spread westward (2 ). Ronald Press Co.. பக். 174. https://books.google.com/books?id=NZRFAAAAMAAJ&q=The+name+of+this+Chinese+general+was+Kuo+K'an+(Mongol,+Kuka+Ilka).+He+commanded+the+right+flank+of+the+Mongol+army+in+its+advance+on+Baghdad+and+remained+in+charge+of+the+city+after+its+surrender.+His+life+in+Chinese+has+been+preserved&dq=The+name+of+this+Chinese+general+was+Kuo+K'an+(Mongol,+Kuka+Ilka).+He+commanded+the+right+flank+of+the+Mongol+army+in+its+advance+on+Baghdad+and+remained+in+charge+of+the+city+after+its+surrender.+His+life+in+Chinese+has+been+preserved&hl=en&ei=qMDmTvvVDYfY0QGq74zdCQ&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CDEQ6AEwAA. பார்த்த நாள்: 2011-11-28. "The name of this Chinese general was Kuo K'an (Mongol, Kuka Ilka). He commanded the right flank of the Mongol army in its advance on Baghdad and remained in charge of the city after its surrender. His life in Chinese has been preserved" 
  3. Thomas Francis Carter (1955). The invention of printing in China and its spread westward (2 ). Ronald Press Co.. பக். 171. https://books.google.com/books?ei=oeThTY-nNujW0QGWxYmmBw&ct=result&id=NZRFAAAAMAAJ&dq=Chinese+influences+soon+made+themselves+strongly+felt+in+Hulagu%27s+dominions.+A+Chinese+general+was+made+the+first+governor+of+Baghdad%2C5+and+Chinese+engineers+were+employed+to+improve+the+irrigation+of+the+Tigris-Euphrates+basin&q=Chinese+influences+soon+made+themselves+strongly+felt+in+Hulagu%27s+dominions.+A+Chinese+general+was+made+the+first+governor+of+Baghdad%2C5+and+Chinese+engineers+were+employed+to+improve+the+irrigation+of+the+Tigris-Euphrates+basin. பார்த்த நாள்: 2010-06-28. "Chinese influences soon made themselves strongly felt in Hulagu's dominions. A Chinese general was made the first governor of Baghdad,5 and Chinese engineers were employed to improve the irrigation of the Tigris-Euphrates basin" 
  4. Jacques Gernet (1996). A history of Chinese civilization. Cambridge University Press. பக். 377. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-521-49781-7. https://books.google.com/books?id=jqb7L-pKCV8C&pg=PA377. பார்த்த நாள்: 2010-10-28. 
  5. Lillian Craig Harris (1993). China considers the Middle East (illustrated ). Tauris. பக். 26. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-85043-598-7. https://books.google.com/books?ei=PO7hTdTsBeHv0gH339CgBw&ct=result&id=fmptAAAAMAAJ&dq=Throughout+this+period+and+for+some+time+after%2C+Chinese+influence+in+the+Middle+East+remained+strong.+The+first+governor+of+Baghdad+under+the+new+regime+was+Guo+Kan%2C+a+Chinese+general+who+had+commanded+the+Mongols%27+right+flank&q=guo+kan. பார்த்த நாள்: 2010-06-28. "The first governor of Baghdad under the new regime was Guo Kan, a Chinese general who had commanded the Mongols' right flank in the siege of Baghdad. Irrigation works in the Tigris-Euphrates basin were improved by Chinese engineers" (Original from the University of Michigan)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடா-மாலிக்_ஜுவய்னி&oldid=3874988" இலிருந்து மீள்விக்கப்பட்டது