பஞ்சாப் இரயில் விபத்து 2018

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரசிற்கு அருகில் ஜோடா படாக் பகுதியில் தண்டவாளங்களை ஒட்டிய பகுதியில் 2018 அக்டோபர் 19 ஆம் நாள் இரவு தசரா கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்த போது ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். அதிகமான கூட்டம் காரணமாக, சிலர் தண்டவாளங்களிலும், தண்டவாளங்களை ஒட்டிய நடைமேடைகளிலும் நின்று விழாவைக் கண்டு கொண்டிருந்த போது அந்த நேரத்தில் வந்த தொடர் வண்டியின் எச்சரிக்கை ஒலியைக் கவனிக்காத மக்களை நசுக்கியபடி சென்றது. இவ்விபத்தில் 60 பேர் பலியாகியுள்னர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.[1][2]

விபத்து நிகழ்ந்த விதம்[தொகு]

2018 அக்டோபர் 19 அன்று ஜலந்தரிலிருந்து அமிர்தசரசை நோக்கி தொடர் வண்டி வந்து கொண்டிருந்துள்ளது. ஜோதா பதக் எனுமிடத்திற்கருகில் தசரா பண்டிகையின் முக்கிய நிகழ்வான இராவண தகனம் நிகழ்ச்சியைக் காண்பதற்காக பெரும் கூட்டம் அப்பகுதியில் கூடியுள்ளது. இட நெருக்கடி காரணமாக பலர் தண்டவாளத்திலும், இன்னும் சிலர் நடைமேடைகளிலும் நின்று வேடிக்கை பார்த்துள்ளனர். வண்டியின் எச்சரிக்கை ஒலி நிகழ்ச்சியின் போது நடந்த வாண வேடிக்கைகள் மற்றும் வெடி ஓசையின் காரணமாக, தண்டவாளம் மற்றும் நடைமேடையில் நின்றவர்களின் காதுகளில் விழவில்லை. வேகமாக வந்த வண்டி பலரை நசுக்கி விட்டுச் சென்றுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]