மங்கோலியர்களின் கைஃபெங் முற்றுகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மங்கோலியர்களின் கைஃபெங் முற்றுகை
மங்கோலிய-சின் போர் பகுதி

மங்கோலியர்களின் ஜுர்ச்சென் ஜின் வெற்றி
நாள் ஏப்ரல் 8, 1232 – பிப்ரவரி 26, 1233
இடம் கைஃபெங், வடக்கு சீனா
மங்கோலிய வெற்றி
  • பேரரசர் அயிசோங் கயிஜோவுக்குத் தப்பி ஓடுதல்
பிரிவினர்
ஜின் அரசமரபு மங்கோலியப் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
பேரரசர் அயிசோங்
குயி லி (எதிரணியில் சேர்ந்தார்)
சுபுதை
டொலுய்
ஒக்தாயி
டங் ஜிங் 
பலம்
~104,000 வீரர்கள் மற்றும் தொண்டர்கள் தெரியவில்லை
இழப்புகள்
கிட்டத்தட்ட அனைவரும், எனினும் சரியாக எண்ணிக்கை தெரியவில்லை மிக அதிகம்: ஏராளமான மங்கோலியர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர்

மங்கோலியர்களின் கைஃபெங் முற்றுகை என்பது 1232 முதல் 1233 வரை நடைபெற்ற ஒரு முற்றுகைப் போர் ஆகும். இப்போரில் மங்கோலியர்கள் ஜுர்ச்சென் ஜின் அரசமரபின் தலைநகரான கைஃபெங்கைக் கைப்பற்றினர். மங்கோலியர்களும் ஜுர்ச்சென்களும் இரண்டு தசாப்தங்களாகப் போரிட்டுக் கொண்டிருந்தனர். மங்கோலியர்கள் ஜுர்ச்சென்களைக் கப்பம் கட்டக் கூறினர். ஆனால் அவர்கள் கப்பம் கட்ட மறுத்தனர். இதனால் 1211ல் போர் ஆரம்பித்தது. ஒக்தாயி தன் தலைமையிலான ஒரு இராணுவத்துடனும் தன் தம்பி டொலுய் தலைமையில் மற்றொரு இராணுவத்துடனும் கைஃபெங்கை முற்றுகையிடச் செய்தார். இரு இராணுவங்களும் ஒன்றாக இணைந்த போது சுபுதை தலைமையில் முற்றுகைப் போர் ஆரம்பமானது. மங்கோலியர்கள் ஏப்ரல் 8, 1232ல் கைஃபெங் நகரச் சுவரை அடைந்தனர்.[1]

உசாத்துணை[தொகு]

  1. "列傳第二 后妃下 (Biographies 2, Imperial wives and concubines [lower volume])" (in zh). 金史. 64.