மேற்கு சியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகா சியா
大夏
𗴂𗹭𘜶𗴲𗂧 (白高大夏國)
𗴂𗹭𗂧𘜶 (大白高國)
1038–1227
1111இல் மேற்கு சியாவின் அமைவிடம் (வடமேற்கில் பச்சை நிறத்தில்)
1111இல் மேற்கு சியாவின் அமைவிடம் (வடமேற்கில் பச்சை நிறத்தில்)
1150இல் மேற்கு சியா
1150இல் மேற்கு சியா
நிலைபேரரசு
தலைநகரம்சிங்சிங் (நவீன இன்சுவான்)
பேசப்படும் மொழிகள்தாங்குடு மொழி, சீனம்
சமயம்
முதன்மை:
பௌத்தம்
இரண்டாம்:
தாவோயியம்
கன்பூசியம்
சீன நாட்டுப்புற மதம்
அரசாங்கம்முடியரசு
பேரரசர் 
• 1038–1048
பேரரசர் ஜிங்சோங் (நிறுவியவர்)
• 1139–1193
பேரரசர் ரென்சோங் (நீண்ட காலம் ஆட்சி புரிந்தவர்)
• 1226–1227
லி சியான் (கடைசி)
வரலாற்று சகாப்தம்பிந்தைய-பாரம்பரிய வரலாறு
• சொங் அரசமரபை லி ஜிசியன் எதிர்க்கிறார்
984
• பேரரசர் ஜிங்சோங் அரசமரபைத் தோற்றுவிக்கிறார்
1038
• மங்கோலியப் பேரரசால் அடிபணிய வைக்கப்பட்டது
1210
• கலகத்திற்குப் பின் மங்கோலியப் பேரரசால் அழிக்கப்பட்டது
1227
பரப்பு
1100ஆம் ஆண்டு மதிப்பீடு[1]1,000,000 km2 (390,000 sq mi)
மக்கள் தொகை
• அதிகபட்சம்
30,00,000[2][3][4]
நாணயம்நகரங்களில் சில செப்புக் காசுகளுடன் கூடிய பண்டமாற்று[5]
முந்தையது
பின்னையது
டிங்னன் ஜியேடுஷி
சிலியங்பு
குயியி வட்டம்
கன்சு உய்குர் இராச்சியம்
லியாவோ அரசமரபு
சொங் அரசமரபு
மங்கோலியப் பேரரசு
தற்போதைய பகுதிகள்சீனா
மங்கோலியா
கி. பி. 1142இல் கிழக்காசியா மற்றும் நடு ஆசியா:
       தெற்கு சொங் அரசமரபு
       சின் அரசமரபு
       மேற்கு சியா
       மேற்கு லியாவோ (காரா கிதை)
       தலி இராச்சியம்.

மேற்கு சியா அல்லது சி சியா (சீனம்: 西夏பின்யின்: Xī Xiàவேட்-கில்சு: Hsi1 Hsia4) அல்லது தாங்குடு பேரரசு (மங்கோலியர்களுக்கு) அல்லது மி-ன்யக் (தாங்குடு மக்கள் மற்றும் திபெத்தியர்களுக்கு)[6] அல்லது அலுவல் ரீதியாக மகா சியா (சீனம்: 大夏பின்யின்: Dà Xià) என்பது தாங்குடு மக்களால் ஆளப்பட்ட சீனாவின் பௌத்த ஏகாதிபத்திய அரசமரபு ஆகும். இது 1038 முதல் 1227 வரை நீடித்த ஒரு பேரரசு ஆகும். இது தன் உச்சபட்ச பரப்பளவின் போது, வடமேற்கு சீன மாகாணங்களான நின்ஷியா, கான்சு, கிழக்கு கிங்ஹாய், வடக்கு சென்சி, வடகிழக்கு சிஞ்சியாங், மற்றும் தென்மேற்கு உள் மங்கோலியா, மற்றும் தெற்குக் கோடி வெளி மங்கோலியா, ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது. இதன் பரப்பளவு சுமார் 8 இலட்சம் சதுர கி.மீ. ஆகும்.[7][8][9]

மேற்கு சியாவின் தலைநகரமானது சிங்சிங் (நவீன இன்சுவான்) ஆகும். முக்கிய சியா நகரமும், தொல்லியல் தளமுமானது காரா-கோடோ ஆகும். 1227இல் மங்கோலியர்களால் மேற்கு சியா நிர்மூலமாக்கப்பட்டது. இதன் பெரும்பாலான எழுதப்பட்ட பதிவுகளும், கட்டடக்கலையும் அழிக்கப்பட்டது. எனவே, இப்பேரரசை நிறுவியவர்களும், இதன் வரலாறும் சீனா மற்றும் மேற்குலகத்தில் 20ஆம் நூற்றாண்டு ஆய்வுகளால் கண்டறியப்படும் வரை வெளியில் தெரியாமல் இருந்தது. தற்போது தாங்குடு மொழியும், அதன் தனித்துவமான எழுத்து முறையும் அற்று விட்டன. தாங்குடு இலக்கியத்தில் சிறிதளவே எஞ்சியுள்ளது.

பட்டுப் பாதையின் ஒரு பகுதியான ஹெக்‌ஷி குறு வழியைச் சுற்றி இருந்த பகுதிகளை மேற்கு சியா கொண்டிருந்தது. வட சீனா மற்றும் நடு ஆசியாவுக்கும் இடையிலான மிக முக்கியமான வணிக வழி இதுவாகும். இவர்கள் இலக்கியம், கலை, இசை மற்றும் கட்டடக்கலையில் முக்கியமான சாதனைகளைப் புரிந்திருந்தனர். இச்சாதனைகள் பற்றி "ஒளிர்கிறது, பிரகாசிக்கிறது" என்று கூறப்பட்டது.[10] லியாவோ, சாங் மற்றும் சின் ஆகிய பிற பேரரசுகளுக்கு மத்தியில் இவர்களது விரிவான நிலைப்பாடானது இவர்களது திறமையான இராணுவ அமைப்புகளால் சாத்தியமானது. இந்த அமைப்பானது குதிரைப்படை, தேர்கள், வில்லாளர்கள், கேடயங்கள், சேணேவி (பீரங்கிகளை ஒட்டகங்களின் முதுகில் ஏற்றிக் கொண்டு சென்று இவர்கள் சண்டையிட்டனர்) மற்றும், நிலம் மற்றும் நீரில் சண்டையிடும் நிலநீர்த் துருப்புக்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்தது.[11]

வரலாறு[தொகு]

குவான்சோங் (1193–1206)[தொகு]

தாங்குடு பேரரசரும், ஒரு சிறுவனும், 13ஆம் நூற்றாண்டு

ரென்சோங்கிற்குப் பிறகு அவரது 17 வயது மகன் சன்யோ பேரரசராகப் பதவிக்கு வந்தார். இறப்பிற்குப் பிறகு இவருக்குக் கொடுக்கப்பட்ட பெயர் குவான்சோங் ஆகும். தெமுஜினின் எழுச்சி மற்றும் மேற்கு சியாவுடன் அவருடைய போர் ஆகியவை தவிர குவான்சோங்கின் ஆட்சி குறித்து மிகக் குறைந்த தகவல்களே தெரிய வருகின்றன. 1203இல் தொகுருல் தெமுஜினால் தோற்கடிக்கப்பட்டார். தொகுருலின் மகனான நில்கா செங்கும் தாங்குடு நிலம் வழியாகத் தப்பித்து ஓடினார். அவருக்கு அடைக்கலம் கொடுக்க தாங்குடுகள் மறுத்த போதும், செங்கும் அவர்களது நிலப்பரப்பு மீது திடீர்த் தாக்குதல் நடத்திய போதும், இதன் காரணமாகத் தெமுஜின் மேற்கு சியா மீது படையெடுத்தார். 1205இல் இதன் விளைவாக நடந்த தாக்குதல் காரணமாக ஒரு உள்ளூர் தாங்குடு உயர் குடியைச் சேர்ந்தவர் மங்கோலியர்கள் பக்கம் இணைந்தார், மங்கோலியர்கள் ஏராளமான அரண்களைக் கொண்ட இடங்களைச் சூறையாடினர் மற்றுன் தாங்குடுகள் கால்நடைகளை இழந்தனர்.[12][13][14]

1206இல் தெமுஜின் முறையாக அனைத்து மங்கோலியர்களின் மன்னன் செங்கிஸ் கான் என்று அறிவிக்கப்பட்டார். மங்கோலியப் பேரரசின் தொடக்கத்தை இது குறித்தது. அதே ஆண்டு, குவான்சோங் தனது உறவினர் அங்குவான் என்பவரால் நடத்தப்பட்ட ஒரு புரட்சியில் பதவியில் இருந்து இறக்கப்பட்டார். அங்குவான் தன்னைத் தானே பேரரசர் சியாங்சோங் என்ற பெயரில் பதவியில் அமர்த்திக் கொண்டார். பிறகு சிறையில் நீண்ட காலம் கழித்து குவான்சோங் இறந்தார்.[15]

சியாங்சோங் (1206–1211)[தொகு]

1207இல் மேற்கு சியாவுக்குள் மற்றொரு திடீர்த் தாக்குதலுக்குச் செங்கிஸ் கான் தலைமை தாங்கினார். ஓர்டோசு பகுதி மீது படையெடுத்தார். மஞ்சள் ஆற்றின் பக்கவாட்டில் அமைந்திருந்த முக்கியமான கோட்டையான ஓலகோயைச் சூறையாடினார். பிறகு, 1208ஆம் ஆண்டின் இளவேனிற்காலத்தில் திரும்பிச் சென்றார்.[16] மங்கோலியர்களுக்கு எதிராகச் சின் அரசமரபுடன் ஓர் ஒன்றிணைந்த கூட்டணியை ஏற்படுத்தத் தாங்குடுகள் முயற்சித்தனர். ஆனால், சின் அரியணையை தவறான வழியில் கைப்பற்றிய வன்யன் யோங்ஜி தாங்குடுகளுடன் இணைந்து செயலாற்ற மறுத்தார். தங்களது எதிரிகள் ஒருவருடன் ஒருவர் சண்டையிடும் போது அது தங்களுக்கு அனுகூலம் தானே என்று கூறினர்.[15]

1209ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் மேற்கில் இருந்து உய்குர்களின் அடி பணிவைச் செங்கிஸ் கான் ஏற்றுக் கொண்டார். மேற்கு சியா மீது படையெடுத்தார். ஓலகோய் நகருக்கு வெளியில் காவோ லியாங்குயியால் தலைமை தாங்கப்பட்ட ஒரு இராணுவத்தைத் தோற்கடித்தார். பிறகு, செங்கிஸ் கான் நகரத்தைக் கைப்பற்றினார். மஞ்சள் ஆற்றின் பக்கவாட்டில் முன்னேறிச் சென்றார். ஏராளமான கோட்டைகளைக் கைப்பற்றினார். மற்றொரு ஏகாதிபத்திய இராணுவத்தைத் தோற்கடித்தார். மங்கோலியர்கள் மேற்கு சியாவின் தலைநகரமான சோங்சிங்கை முற்றுகையிட்டனர். அங்கு நன்றாக அரண்களால் பாதுகாக்கப்பட்டு இருந்த 1.50 இலட்சம் போர் வீரர்கள் தற்காப்பில் ஈடுபட்டிருந்தனர்.[17] மஞ்சள் ஆற்றைத் திருப்பி விடுவதன் மூலம் நகரத்திற்குள் வெள்ளத்தை ஏற்படுத்த மங்கோலியர்கள் முயற்சித்தனர். ஆனால், அவர்கள் கட்டிய தடுப்பானது உடைந்தது. மங்கோலிய முகாமுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பின்வாங்கும் நிலைக்கு அவர்கள் சென்றனர்.[13] 1210இல் சியாங்சோங் மங்கோலிய ஆட்சிக்கு அடி பணிய ஒப்புக் கொண்டார். தனது மகள் சகாவைச் செங்கிஸ் கானுக்கு மணம் முடித்துக் கொடுத்ததன் மூலம் தனது விசுவாசத்தை வெளிக் காட்டினார். ஒட்டகங்கள், வல்லூறுர்கள் மற்றும் துணிமணிகளைத் திறையாகக் கொடுத்தார்.[18]

1210இல் அவர்களது தோல்விக்குப் பிறகு மங்கோலியர்களுக்கு எதிராகத் தங்களுக்கு உதவாததற்குப் பதிலடியாக சின் அரசமரபை மேற்கு சியா தாக்கியது.[19] அதைத் தொடர்ந்து வந்த ஆண்டில், மங்கோலியர்கள் மேற்கு சியாவுடன் இணைந்தனர். சின் அரசமரபுக்கு எதிராக 23 ஆண்டுகள் தொடர்ந்து நடந்த படையெடுப்பைத் தொடங்கினர். அதே ஆண்டு, சியாங்சோங்கின் உடன்பிறந்தோரின் மகனான சுங்சு ஒரு புரட்சியில் ஆட்சியைக் கைப்பற்றினார். மேற்கு சியாவின் பேரரசர் சென்சோங் என்ற பெயருடன் அரியணையில் அமர்ந்தார். சியாங்சோங் ஒரு மாதத்திற்குப் பிறகு இறந்தார்.[20]

சென்சோங் (1211–1223)[தொகு]

மேற்கு சியாவின் பேரரசர் சென்சோங் ஏகாதிபத்தியக் குடும்பத்திலிருந்து முதன் முதலில் அரண்மனைத் தேர்வுகளில் தேறியவரும், ஒரு சின்சி கல்விப் பட்டத்தைப் பெற்றவரும் ஆவார்.[20]

மங்கோலியர்களின் சினத்தைத் தணிப்பதற்காகச் சென்சோங் சுரசன்களைத் தாக்கினார். 1214இல் சுரசன்களுக்கு எதிரான ஒரு கிளர்ச்சிக்கு ஆதரவளித்தார். 1216இல் மேற்கு சியா சின் நிலப்பரப்பில் ஒரு தாக்குதலுக்கு மங்கோலியர்களுக்குத் துணைத் துருப்புக்களை வழங்கியது. சின் அரசமரபைத் தாக்குவதற்குத் தங்களுடன் இணையுமாறு சொங் அரசமரபுக்கும் தாங்குடுகள் அழைப்பு விடுத்தனர். ஆனால், அவர்களிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. 1220இல் ஒரு இராணுவ நடவடிக்கைக்குத் திட்டமிடப்பட்டது. ஆனால், அது கைவிடப்பட்டது. சுரசன் சின் அரசமரபுக்கு எதிரான பகமை உணர்வுடைய கொள்கையானது மேற்கு சியா அரசவையில் பிரபலமானதாக இல்லை. மங்கோலியர்களுடன் இணைந்து செயல்படுவதும் பிரபலமானதாக இல்லை. அசா கம்பு என்பவர் மங்கோலிய எதிர்ப்பு கொள்கைக்காகத் தொடர்ந்து பேசி வந்தார். 1217-18ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் இன்னும் மேற்கில் படையெடுப்புகளுக்காகத் தங்களுக்குத் துருப்புக்களை அனுப்புமாறு மேற்கு சியாவுக்கு மங்கோலியர்கள் அழைப்பு விடுத்தனர் ஆனால் மேற்கு சியா இதற்கு ஒப்புக்கொள்ள மறுத்து. 1219இல் மேற்கு நோக்கிச் செங்கிஸ் கான் சென்றதால் உடனடிப் பதிலடி கொடுக்கப்படவில்லை. செங்கிஸ் கான் வடக்கு சீனாவின் கட்டுப்பாட்டை முகாலியிடம் கொடுத்து விட்டுச் சென்றிருந்தார். 1223இல் முகாலி இறந்தார். அதே நேரத்தில், சென்சோங் தனது மகன் தெங்குக்காகப் பதவியில் இருந்து விலகினார். தெவங் மேற்கு சியாவின் பேரரசர் சியான்சோங் என்ற பெயரை இறப்பிற்குப் பின் பெற்றார்.[21]

சியான்சோங் (1223–1226)[தொகு]

மேற்கு சியா சங்கிலிக் கவசம்

மேற்கு சியாவின் சியான்சோங் 1224இல் சின் அரசமரபுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினார். 1225ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் அமைதி ஒப்பந்தமானது இறுதி செய்யப்பட்டது. மங்கோலியா அவைக்குப் பிணைக் கைதியாக ஒரு இளவரசரை அனுப்ப மறுத்ததன் மூலம் தாங்குடுகள் மங்கோலியர்களுக்குத் தொடர்ந்து அடி பணிய மறுத்து வந்தனர்.[21]

1221இல் குவாரசமியாவைத் தோற்கடித்ததற்குப் பிறகு மேற்கு சியாவைத் தண்டிப்பதற்காகத் தனது இராணுவங்களைச் செங்கிஸ் கான் தயார்படுத்தினார். 1225இல் சுமார் 1,80,000 பேரைக் கொண்ட ஒரு படையுடன் செங்கிஸ் கான் தாக்கினார்.[22] மங்கோலியர்களின் இரகசிய வரலாறின் படி, 1225இல் ஒரு குதிரை வேட்டையின் போது குதிரையில் இருந்து விழுந்த காரணத்தால் செங்கிஸ் கானுக்குக் காயமேற்பட்டது. அடி பணியும் வாய்ப்பை மேற்கு சியாவிற்கு வழங்க செங்கிஸ் கான் முயற்சித்தார். ஆனால், அசா கம்பு மங்கோலியர்களை இகழ்ந்தார். யுத்தத்துக்கு வருமாறு சவால் விடுத்தார். இந்த இகழ்ச்சிக்குப் பழி வாங்குவேன் எனச் செங்கிஸ் கான் சபதம் எடுத்தார்.[23] தாங்கள் செல்லும் வழியில் இருக்கும் நகரங்களையும், கோட்டைகளையும் அமைப்பு ரீதியாக அழிக்குமாறு தனது தளபதிகளுக்குச் செங்கிஸ் கான் ஆணையிட்டார்.[24]

செங்கிஸ் கான் தனது இராணுவத்தைப் பிரித்தார். மேற்குக் கோடி நகரங்களைக் கவனிப்பதற்காகத் தளபதி சுபுதையை அனுப்பினார். செங்கிஸ் கான் தலைமையிலான முதன்மை இராணுவமானது கிழக்கு நோக்கி நகர்ந்தது. மேற்குசியாவின் இதயப்பகுதிக்குள் நுழைந்தது. சுசோவு மற்றும் கன்சோவு நகரங்களைக் கைப்பற்றியது. செங்கிஸ் கானின் தளபதி சகானின் சொந்தப் பட்டணமாக இருந்த காரணத்தால் கன்சோவு கைப்பற்றப்பட்ட பிறகு அழிவுக்கு உட்படுத்தப்படாமல் விடப்பட்டது.[25] 1226ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் காரா-கோடோவைக் கைப்பற்றிய பிறகு மங்கோலியர்கள் தெற்கு நோக்கி உறுதியாக முன்னேறத் தொடங்கினர். மேற்கு சியா துருப்புகளின் தளபதியான அசா, பாலைவனம் வழியாக 500 கிலோமீட்டர்கள் தலை நகரத்திலிருந்து மேற்கு நோக்கி அணி வகுக்கும் களைப்பை ஏற்படுத்தும் பயணத்தைக் கொண்டிருக்கும் என்பதனால் மங்கோலியர்களைச் சந்திக்க அவரால் இயலவில்லை. எனவே, மங்கோலியர்கள் உறுதியாக ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்கு முன்னேறினர்.[26]

1226ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் மங்கோலியத் துருப்புகள் லியாங்சோவு நகரை நெருங்கின. மேற்கு சியாவின் இரண்டாவது பெரிய நகரம் இதுவாகும். எந்த எதிர்ப்பையும் காட்டாமல் நகரம் சரணடைந்தது.[27] 1226ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் செங்கிஸ் கான் எலன் மலைகளைக் கடந்தார். நவம்பரில் லிங்வு நகரத்தை முற்றுகையிட்டார். இது தலை நகரத்தில் இருந்து வெறும் 30 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்திருந்தது.[28] இந்நேரத்தில் சியான்சோங் இறந்தார். மங்கோலியப் படையெடுப்பைக் கையாளும் நிலையைத் தனது உறவினரான சியானிடம் விட்டுச் சென்றார். சியான் இறப்பிற்குப் பிறகு மேற்கு சியாவின் பேரரசர் மோசு என்ற பட்டம் பெற்றார்.[29]

மோ (1226–1227)[தொகு]

மேற்கு சியாவின் பேரரசர் மோ மங்கோலியர்களுக்கு எதிராக ஒரு 3,00,000 பேரைக் கொண்ட ஒரு வலிமையான இராணுவத்திற்குத் தலைமை தாங்கினார். தோற்கடிக்கப்பட்டார். மங்கோலியர்கள் லிங்சோவுவைச் சூறையாடினர்.[29][30]

1227இல் மேற்கு சியா தலைநகரத்தைச் செங்கிஸ் கான் அடைந்தார். நகரத்தை முற்றுகையிட்டார். மேற்கு சியாவிற்கு வலுவூட்டல் படைகளை சின் அரசமரபு அனுப்புவதைத் தடுப்பதற்காக சின் அரசமரபுக்கு எதிராக ஏராளமான தாக்குதல்களைத் தொடங்கினார். சின் தலைநகரான கைஃபெங் வரையிலும் கூட இதில் ஒரு படை அடைந்தது.[31] இம்முற்றுகையானது ஆறு மாதங்களுக்கு நீடித்தது. சரணடைவு விதிமுறைகளுக்குச் செங்கிஸ் கான் வாய்ப்பளித்தார்.[32] இந்த அமைதி ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளின் போது குயுவானுக்கு அருகில் லிபுவான் மலைகளைச் சுற்றி தனது இராணுவ நடவடிக்கைகளைச் செங்கிஸ் கான் தொடர்ந்தார். சின் அரசமரபிடமிருந்து வந்த ஒரு அமைதிப் பேச்சுவார்த்தையை நிராகரித்தார். சொங் அரசமரபுடனான சின் அரசமரபின் எல்லைக்கு அருகில் சின் அரசமரபு மீது படையெடுக்கத் தயாரானார்.[33]

1227ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் தெரியாத காரணங்கள் காரணமாகச் செங்கிஸ் கான் இறந்தார். நடந்து கொண்டிருக்கும் படையெடுப்பு இடர்ப்பாடு அடையக் கூடாது என்ற காரணத்திற்காக இவரது இறப்பானது ஓர் இரகசியமாக வைக்கப்பட்டது.[34][35] 1227ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பேரரசர் மோ மங்கோலியர்களிடம் சரணடைந்தார். கால தாமதமின்றி மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.[36][37] மங்கோலியர்கள் தலை நகரத்தைச் சூறையாடினர். நகர்த்தின் மக்களைப் படு கொலை செய்தனர். மேற்கிலிருந்த ஏகாதிபத்தியக் கல்லறைகளைச் சூறையாடினர். மேற்கு சியா அரசின் ஒட்டு மொத்த நிர்மூலத்தை முடித்தனர்.[38][39][40]

அழிவு[தொகு]

இரண்டாவது படையெடுப்பின் போது மேற்கு சியாவின் அழிவானது கிட்டத்தட்ட முழுமையானதாக இருந்தது. யோவான் மேன் என்ற பிரித்தானிய வரலாற்றாளரின் கூற்றுப்படி, இந்த ஆராய்ச்சித் துறை சார்ந்த நிபுணர்களைத் தவிர எந்த ஒருவருக்கும் மேற்கு சியா பற்றி மிகச் சிறிய அளவே தெரியும். ஏனெனில் இவர்களது ஒட்டு மொத்த அழிவிற்குச் செங்கிஸ் கானின் கொள்கையானது அழைப்பு விடுத்தது. இவரது கூற்றுப்படி, "முதன் முதலில் பதியப்பட்ட இனப்படுகொலை முயற்சியின் எடுத்துக்காட்டு இதுவாகும். உறுதியாகக் கூறும் வகையில் இது ஒரு வெற்றிகரமான படு கொலையாகும்".[41] எனினும், மேற்கு சியா அரச குலத்தின் சில உறுப்பினர்கள் மேற்கு சிச்சுவான், வடக்கு திபெத்து மற்றும் ஒரு வேளை வடகிழக்கு இந்தியாவுக்கும் கூட இடம் பெயர்ந்தனர். சில சமயங்களில் உள்ளூர் ஆட்சியாளர்களாகவும் அவர்கள் உருவாயினர்.[42] எலோங் ஆற்றின் மேல் பகுதியின் பக்கவாட்டில் திபெத்தில் ஒரு சிறிய மேற்கு சியா அரசானது நிறுவப்பட்டது. அதே நேரத்தில், பிற மேற்கு சியா மக்கள் தற்போதைய நவீன மாகாணங்களான ஹெனன் மற்றும் ஏபெயில் குடியமர்ந்தனர்.[43] சீனாவில் மிங் அரசமரபின் காலத்தின் நடுப்பகுதி வரை மேற்கு சியாவின் எஞ்சிய பகுதிகள் நீடித்திருந்தன.[44]

மேலும் காண்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. Turchin, Peter; Adams, Jonathan M.; Hall, Thomas D. (December 2006). "East-West Orientation of Historical Empires". Journal of World-Systems Research 12 (2): 222. பன்னாட்டுத் தர தொடர் எண்:1076-156X. http://jwsr.pitt.edu/ojs/index.php/jwsr/article/view/369/381. பார்த்த நாள்: 2016-09-16. 
  2. Kuhn, Dieter (15 October 2011). The Age of Confucian Rule: The Song Transformation of China. பக். 50. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780674062023. https://books.google.com/books?id=FnCbDwAAQBAJ&pg=PA50. 
  3. Bowman, Rocco (2014). "Bounded Empires: Ecological and Geographic Implications in Sino- Tangut Relations, 960-1127". The Undergraduate Historical Journal at UC Merced 2: 11. doi:10.5070/H321025689. https://escholarship.org/content/qt96h3q8fx/qt96h3q8fx.pdf. 
  4. McGrath, Michael C.. Frustrated Empires: The Song-Tangut Xia War of 1038-44. In Wyatt. பக். 153. 
  5. Chinaknowledge.de Chinese History - Western Xia Empire Economy. 2000 ff. © Ulrich Theobald. Retrieved: 13 July 2017.
  6. Stein (1972), pp. 70–71.
  7. Wang, Tianshun [王天顺] (1993). Xixia zhan shi [The Battle History of Western Xia] 西夏战史. Yinchuan [银川], Ningxia ren min chu ban she [Ningxia People's Press] 宁夏人民出版社.
  8. Bian, Ren [边人] (2005). Xixia: xiao shi zai li shi ji yi zhong de guo du [Western Xia: the kingdom lost in historical memories] 西夏: 消逝在历史记忆中的国度. Beijing [北京], Wai wen chu ban she [Foreign Language Press] 外文出版社.
  9. Li, Fanwen [李范文] (2005). Xixia tong shi [Comprehensive History of Western Xia] 西夏通史. Beijing [北京] and Yinchuan [银川], Ren min chu ban she [People's Press] 人民出版社; Ningxia ren min chu ban she [Ningxia People's Press] 宁夏人民出版社.
  10. Zhao, Yanlong [赵彦龙] (2005). "Qian tan xi xia gong wen wen feng yu gong wen zai ti [A brief discussion on the writing style in official documents and documental carrier] 浅谈西夏公文文风与公文载体." Xibei min zu yan jiu [Northwest Nationalities Research] 西北民族研究 45(2): 78-84.
  11. Qin, Wenzhong [秦文忠], Zhou Haitao [周海涛] and Qin Ling [秦岭] (1998). "Xixia jun shi ti yu yu ke xue ji shu [The military sports, science and technology of West Xia] 西夏军事体育与科学技术." Ningxia Daxue Xuebao [Journal of Ningxia University] 《宁夏大学学报》 79 (2): 48-50.
  12. Twitchett 1994, ப. 205-7.
  13. 13.0 13.1 May, Timothy (2012). The Mongol Conquests in World History. London: Reaktion Books. பக். 1211. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781861899712. https://books.google.com/books?id=ZRIt9sZaTREC. 
  14. J. Bor Mongol hiigeed Eurasiin diplomat shashtir, vol.II, p.204
  15. 15.0 15.1 Twitchett 1994, ப. 207.
  16. Rossabi, William (2009). Genghis Khan and the Mongol empire. Seattle: University of Washington Press. பக். 156. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9622178359. 
  17. Jack Weatherford Genghis Khan and the Making of the Modern World, p.85
  18. Man 2004, ப. 133.
  19. Kessler, Adam T. (2012). Song Blue and White Porcelain on the Silk Road. லைடன்: Brill Publishers. பக். 91. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789004218598. https://books.google.com/books?id=iABEQXUfmhIC. 
  20. 20.0 20.1 Twitchett 1994, ப. 208.
  21. 21.0 21.1 Twitchett 1994, ப. 210.
  22. Emmons, James B. (2012). "Genghis Khan". China at War: An Encyclopedia. Ed. Li, Xiaobing. Santa Barbara, California: ABC-CLIO. ISBN 9781598844153. 
  23. Twitchett 1994, ப. 211.
  24. Mote 2003, ப. 255–256.
  25. Man 2004, ப. 212–213.
  26. Man 2004, ப. 212.
  27. Man 2004, ப. 213.
  28. Man 2004, p. 214; de Hartog 2004, p. 134.
  29. 29.0 29.1 Man 2004, ப. 214.
  30. Tucker, Spencer C., தொகுப்பாசிரியர் (2010). A Global Chronology of Conflict: From the Ancient World to the Modern Middle East: From the Ancient World to the Modern Middle East. Santa Barbara, California: ABC-CLIO. பக். 276. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1851096725. https://books.google.com/books?id=h5_tSnygvbIC. 
  31. de Hartog 2004, ப. 135.
  32. Man 2004, ப. 219.
  33. Man 2004; de Hartog 2004, p. 137.
  34. Lange, Brenda (2003). Genghis Khan. New York City: Infobase Publishing. பக். 71. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780791072226. https://books.google.com/books?id=Yclu5Rw-3WUC. 
  35. Man 2004, ப. 238.
  36. de Hartog 2004, ப. 137.
  37. Sinor, D.; Shimin, Geng; Yevgeny Kychanov (1998). Asimov, M. S.; Clifford Edmund Bosworth. eds. The Uighurs, the Kyrgyz and the Tangut (Eighth to the Thirteenth Century). 4. Paris: ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம். பக். 214. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9231034677. https://books.google.com/books?id=18eABeokpjEC. 
  38. Ebrey, Patricia Buckley (2012). East Asia: A Cultural, Social, and Political History (3rd ). Stamford, Connecticut: Cengage Learning. பக். 199. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781133606475. https://books.google.com/books?id=ou-hq_FlQY4C. 
  39. de Hartog 2004, p. 137; Mote 2003, p. 256.
  40. Boland-Crewe, Tara, தொகுப்பாசிரியர் (2002). The Territories of the People's Republic of China. London: Europa Publications. பக். 215. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780203403112. https://books.google.com/books?id=k6Yl62R5ayEC. 
  41. Man 2004, ப. 116–117.
  42. Franke, Herbert and Twitchett, Denis, ed. (1995). The Cambridge History of China: Vol. VI: Alien Regimes & Border States, 907–1368. Cambridge: Cambridge University Press. pg. 214.
  43. Mote 2003, ப. 256.
  44. Mote 2003, ப. 256–257.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கு_சியா&oldid=3640531" இலிருந்து மீள்விக்கப்பட்டது