பின் மகப்பேற்று இறுக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பின் மகப்பேற்று இறுக்கம்
ஒத்தசொற்கள்குழந்தை பிறப்புக்கு பிந்தைய மனச்சோர்வு
சிறப்புமனச்சோர்வு
அறிகுறிகள்தீவிர துயரங்கள், உடல் களைப்பு, கவலை, நித்திரையின்மை, பசியின்மை, உணர்ச்சி மேலிட்ட அழுகை, எரிச்சல்[1]
வழமையான தொடக்கம்பிரசவத்திற்கு பின் வாரம் அல்லது மாதத்திற்குப் பின்னர்[1]
காரணங்கள்தெளிவில்லை[1]
சூழிடர் காரணிகள்பிரசவத்திற்கு பிந்தைய மனச்சோர்வு முன்பயம், இருமுனைய பிறழ்வு, மனச்சோர்வு குறித்த குடும்ப வரலாறு, உளவியம் மன அழுத்தம், மகப்பேறு சிக்கல்கள், ஆதவின்மை, பயன்படும் மருந்துகள் பிறழ்வு[1]
நோயறிதல்அறிகுறிகளின் அடிப்படையில்[2]
சிகிச்சைமனநோய் மருத்துவம், மருந்துகள்[2]

பின் மகப்பேற்று இறுக்கம் (Postpartum depression) என்பது பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வு நோய் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. குழந்தை பிறத்தலுடன் தொடர்புடைய ஒரு வகையான மனநிலை கோளாறை இந்நோய் குறிக்கிறது. இருபாலினத்தவர்களையும் இவ்வகை மனச்சோர்வு நோய் பாதிக்கிறது[1][3]. தீவிர துயரங்கள், உடம்புக் களைப்பு, கவலை, உணர்ச்சி மேலீட்டால் அழுகை, எரிச்சல், நித்திரையின்மை தூக்கம் அல்லது சாப்பிடும் பழக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை இதற்கான அறிகுறிகள் ஆகும் [1]. குறிப்பாக குழந்தை பிறந்து ஒருவாரம் மற்றும் ஒரு மாத காலத்திற்கிடையில் இந்நோயின் தொடக்க கால அறிகுறிகள் தென்படும். புதியதாகப் பிறந்த குழந்தையையும் இந்நோய் பாதிக்கும் [2].

மகப்பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வின் காரணங்களை மிகத்தெளிவாக வரையறுக்க இயலவில்லை. உடல் மற்றும் உணர்ச்சிவசப்படுதல் ஆகிய இரண்டு காரணிகளின் இணைப்பால் ஏற்படும் பாதிப்பு இதற்கான காரணங்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது[1]. தூக்கமின்மையும் இயக்குநீர் மாற்றங்களையும் கூட இக்காரணிகளுடன் சேர்த்துக் கொள்ளலாம்[1]. மகப்பேற்றுக்கு பிந்தைய மனச்சோர்வுக்கு முன்பாக எதிர்கொண்ட சிக்கல்கள், இருமுனையப் பிறழ்வு, மனச்சோர்வின் குடும்பபின்னணி, மன அழுத்தம், குழந்தை பிறப்புச் சிக்கல்கள், ஆதரவின்மை, மருந்துப் பயன்பாட்டு பிறழ்வுகள் போன்ற சிக்கல்களும் இந்நோயின் அபாயக் காரணிகளில் அடங்குகின்றன. [1]. சிகிச்சையைப் பொறுத்தவரை நபர் கூறும் அறிகுறிகளைக் கொண்டுதான் நோய் பாதிப்பு கண்டறியப்படுகிறது [2]. பிரசவத்திற்கு பிறகு பெண்கள் கவலையாகவும் மகிழ்ச்சியற்ற மனநிலையிலும் காணப்பட்டால் அவர்கள் மகப்பேற்றுக்கு பிந்தைய மனச்சோர்வுக்கு ஆளாகியிருக்கலாம் என சந்தேகிக்கலாம். அறிகுறிகள் கடுமையாகவும் இரண்டு வாரங்கள் தாண்டிய பிறகும் கூட நீடிக்கலாம் [1].

அபாய நிலையில் உள்ளவர்களின் மகப்பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வைத் தடுக்க அவர்களுக்கு உளவியல்ரீதியானசமூக ஆதரவை வழங்குவது பாதுகாப்பாக இருக்கும் [4] எனக்கருதப்படுகிறது.. ஆலோசனை வழங்குதல் அல்லது மருந்துகள் கொடுத்தல் மட்டுமே இம்மனச்சோர்வுக்கான சிகிச்சை முறையாகும் [2]. தனிப்பட்டவர்களுக்கு இடையேயான உளவியல் சிகிச்சை, அறிவுசார் நடத்தை சிகிச்சை, மனோயியக்கமுறை சிகிச்சை உள்ளிட்டவை ஆலோசனை வழங்குதலின் வகைகளாகும் [2]. தெரிவுசெய்யப்பட்ட செரோடோனின் உயர்வு தடுப்பிகள் என்னும் மனச்சோர்வு நீக்கும் மருந்துகள் இந்நோய்க்கு தற்காலிக நிவாரணம் அளிக்கின்றன எனக் கூறப்படுகிறது [2].

குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களில் 15% பெண்கள் பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வு நோய்க்கு ஆளாகிறார்கள் [1][2]. மேலும் இம்மனநிலை பாதிப்பு 1% முதல் 26% வரையிலான புதிய தந்தைகளுக்கும் ஏற்படுகிறது [3]. 1000 பெண்களில் ஒன்று அல்லது இரண்டு பெண்கள் குழந்தைப் பேற்றுக்குப் பின்னர் இந்நோயால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள் [5]. ஒரு வயதுக்குக் குறைவான குழந்தைகள் கொல்லப்படுவதற்கான காரணங்களில் இம்மனச்சோர்வு நோய் முன்னணியில் நிற்கிறது. அமெரிக்காவில் ஒரு இலட்சம் குழந்தைகளில் 8 குழந்தைகள் இம்மனச்சோர்வு நோயால் பாதிக்கப்பட்டவர்களால் கொல்லப்படுகிறார்கள் [6].

அறிகுறிகள்[தொகு]

மகப்பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வின் அறிகுறிகள் மகப்பேற்றுக்குப் பின்னரான முதல் ஆண்டின் எந்தவொரு நேரத்திலும் ஏற்படலாம்[7]. மகப்பேற்றுக்குப் பின்னர் குறைந்த பட்சம் இரண்டுவாரங்களாவது அறிகுறிகள் தென்பட்டால் மட்டுமே பின் மகப்பேற்று இறுக்கம் நோயாக அந்நோய் அடையாளம் காணப்படுகிறது [8].ஆனால் இவை மட்டுமே அந்நோயை உறுதிபடுத்துவதில்லை.

உணர்வு சார்ந்தவை[தொகு]

  • தொடர்ச்சியான சோகம், கவலை அல்லது "வெற்று" மனநிலை[7],
  • கடுமையான மனநிலை ஊசலாட்டம்[8]
  • கோபம், ஏமாற்றம், எரிச்சல்,ஓய்வின்மை [7][9]
  • நம்பிக்கையற்று இருத்தல், உதவியற்று இருத்தல் [7]
  • குற்றவுணர்வு, வெட்கம், மதிப்பின்மையாக கருதுதல் [7][9]
  • தாழ்வான சுய மதிப்பு[7]
  • உணர்வின்மை, வெறுமை[7]
  • முழுச்சோர்வு[7]
  • இயல்பாக இருக்க முடியாமை[7]
  • குழந்தையுடன் பிணைப்பின்மை[8]
  • தேவைக்குக் குறைவாக குழந்தையின் மீது அக்கறை செலுத்துதல்[7][9]

நடத்தை சார்ந்தவை[தொகு]

  • அன்றாட நடவடிக்கைகளில் மகிழ்ச்சியும் ஆர்வமும் இல்லாமை[7][9][8]
  • ஆற்றல் குறைவு அல்லது இல்லாமை[7]
  • இன்பத்தில் நாட்டமின்மை[10]
  • பசியின்மை[7][9]
  • களைப்பு, பலவீனம், ஊக்கமின்மை[9]
  • சுயநலனில் அக்கறை இன்மை-care[8]
  • தனித்திருத்தல் [7][8]
  • தூக்கமின்மை அல்லது அலவற்ற தூக்கம்[7][8]

அறிவு சார்ந்தவை[தொகு]

  • தெளிவற்ற சிந்தனை மற்றும் முடிவெடுப்பதில் குழப்பம்[9]
  • கவனக்குறைவு மற்றும் ஞாபக மறதி[9]
  • குழந்தையைப் பற்றிய பயம்[7]
  • தன்னைப் பற்றிய, குழந்தையைப் பற்றியம் கணவரைப் பற்றிய கவலைகள்[8][9]

நோய்த் தொடக்கமும் நீட்டிப்பும்[தொகு]

மகப்பேற்றுக்குப் பிந்தைய மனச் சோர்வு பொதுவாக குழந்தை பிறப்புக்குப் பின்னர் இரண்டு வாரங்கள் முதல் ஒரு மாதத்திற்கு பிறகு தொடங்குகிறது [11]. நகரத்தின் உட்புற மனநல மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் குழந்தைப்பிறப்புக்குப் பிந்தைய மனச்சோர்வு நோய் பாதிப்புக்கு ஆளானவர்களில் 50% பேருக்கு பேறு காலத்திற்கு முன்னதாகவே தொடங்கிவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன [12]. பின் மகப்பேற்று இறுக்கம் என்பது பிறப்புக்காலத் தொடக்கத்துடன் கூடிய மன தளர்ச்சி சீர்குலைவு என மனநோய்களைக் கண்டறியும் புள்ளிவிவரக் கையேடு-5 வகைப்படுத்துகிறது. பிறப்புக் காலம் என்பது கருவுற்ற காலத்தில் எந்த நேரத்தையும் அல்லது பிரசவத்திற்குப் பிறகான நான்கு வாரங்களுக்குள் தொடங்கும் எனவும் அது வரையறுக்கிறது. பின் மகப்பேற்று இறுக்கம் நோய் பல மாதங்களுக்கு ஏன் ஓர் ஆண்டு வரை கூட நீடிக்கலாம் [13]. கருச்சிதைவு அடைந்த பெண்களுக்கும் கூட இம்மனச்சோர்வு நோய் பாதிப்பு ஏற்படுகிறது [14] தந்தையர்கள்களும் கூட மகப்பேற்றுக்குப் பின்னர் 3-6 மாதங்கள் வரை மிக உயர்ந்த மட்டத்திலான இத்தகைய மனச்சோர்வுக்கு ஆளாகின்றனர் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன [15].

தாய் சேய் உறவு[தொகு]

பின் மகப்பேற்று இறுக்கம் நோய் சாதாரண தாய்-சேய் உறவுக்கு குறுக்கீடாக அமையலாம். நீண்டகால குழந்தை வளர்ச்சியை அது கடுமையாகவும் பாதிக்கலாம். மேலும், தாய்மார்கள் குழந்தைகளை பராமரிப்பதற்கு இணக்கமற்றவர்களாக இருக்கவும் இது வழிவகுக்கும் [16]. குழந்தைகளுக்கான உணவு நடைமுறைகள், தூக்க நடைமுறைகள் மற்றும் சுகாதார பராமரிப்பு ஆகியவைகள் இணக்கமற்ற நடவடிக்கைகளில் அடங்கும்[16].

சில அரிய நிகழ்வுகளில் அதாவது 1,000 பெண்களுக்கு 1 முதல் 2 வரையிலான பெண்கள் மகப்பேற்றுக்கு பிந்தைய மனச்சோர்வுக்கு உட்பட்டு மனநோயாளி ஆகிறார்கள். இத்தகைய நிகழ்வுகளில் அப்பெண்கள் முன்னதாக மனநோய் சிகிச்சைக்கான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் [17]. இங்கெல்லாம் சிசுக்கொலைக்கும் வாய்ப்பு இருக்கிறது. இம்மனச்சோர்வு நோயால் 1,00,000 குழந்தைகளுக்கு 8 குழந்தைகள் வீதம் சிசுக்கொலைகள் நிகழ்கின்றன என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன [2].

நோய்க்கான காரணங்கள்[தொகு]

மகப்பேற்றுக்கு பிந்தைய மனச்சோர்வு நோய்க்கான காரனங்களை சரிவர புரிந்து கொள்ள முடியவில்லை. இயக்குநீர் மாற்றங்கள், மரபியல் வழியாக வருவது மற்றும் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் ஆகியவை சாத்தியமான காரணங்கள் எனக் கருதப்படுகின்றன. இயக்குநீர் சுரத்தலில் ஏற்படும் மாற்றங்கள் இந்நோய்க்கான காரணத்தில் ஒரு முக்கியபங்கு வகிக்கிறது என ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக ஈசுட்ரோசன், புரோகெசுட்ரோன், தைராய்டு இயக்குநீர், டெசுட்டோசிடெரோன், கார்டிக்கோடிரோப்பினை வெளியிடும் இயக்குநீர், கார்டிசோல் போன்றவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன [18].

ஆழ்ந்த இயக்குநீர் மாற்றங்களைச் சந்திக்காத அப்பாக்களும் மகப்பேற்றுக்கு பிந்தைய மனச்சோர்வு நோய்க்கு ஆளாகிறார்கள் [19]. இக்காரணம் ஆண்களுக்கு மட்டும் மாறுபட்டதாக இருக்கலாம்.

அளவிடற்கரிய வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக குழந்தைப் பராமரிப்பு தொடர்பான கருதுகோள்களிலும் மாற்றங்கள் பல தோன்றி பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. முன்னதாக பல குழந்தைகளுக்கு தாயான பெண்கள் கூட புதிய குழந்தைக்கு தாயாகும்போது இத்தகைய வாழ்க்கை மாற்ற முறைகளால் மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள் [20]. கருத்தரிப்புக்கும்ம் மகப்பேறுக்கும் இடையிலான காலத்தில் உயிரியல் மற்றும் உளவியல் மாற்றங்கள் கூடவே நிகழ்வதால் பெரும்பாலான பெண்களின் பின் மகப்பேற்று இறுக்கம் நோய் கண்டறியமுடிவதில்லை [21][22].

அபாயக் காரணிகள்[தொகு]

பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வுக்கான காரணங்கள் சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்றாலும் அதன் அபாயத்தை அதிகரிக்கும் பல காரணிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

  • பிரசவத்திற்கு முந்தைய அழுத்தம் அல்லது கவலை[23]
  • பாரம்பரிய மன அழுத்தம்[24]
  • மிதமான மற்றும் கடுமையான மாதவிலக்குக்கு முந்தைய அறிகுறிகள்[25]
  • பேறு காலத்தில் எதிர்கொண்ட அழுத்தமான வாழ்க்கை நிகழ்வுகள்[26][27]
  • பேறுகால சிக்கல்கள்[23]
  • குழந்தைப்பிறப்பு தொடர்பான உளவியல் அதிர்ச்சிகள் Birth-related psychological trauma
  • குழந்தைப்பிறப்பு தொடர்பான உடல் அதிர்ச்சிகள்
  • கருச்சிதைவு[25]
  • தாய்பாலூட்டாமை[24]
  • புகைப்பழக்கம்[24]
  • குறைவான சுயமதிப்பு[23]
  • குழந்தைப்பராமரிப்பு அல்லது வாழ்க்கை முறை அழுத்தம்[23]
  • சமூக ஆதரவின்மை[23]
  • திருமண உறவில் புரிதலின்மை[23]
  • வறுமை [23][28]
  • இயற்கையாகத் தோன்றும் குழந்தைக்கான பிரச்சினைகள்[23]
  • எதிர்பார்க்காத தேவையில்லாத கர்ப்பம் [23]
  • புரோலாக்டின் அளவுகள் அதிகரிப்பு
  • ஆக்சிடோசின் குறைபாடு


மேற்கோள்கள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 "Postpartum Depression Facts". NIMH (in ஆங்கிலம்). Archived from the original on 21 June 2017. பார்க்கப்பட்ட நாள் 11 June 2017.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 Pearlstein, T; Howard, M; Salisbury, A; Zlotnick, C (April 2009). "Postpartum depression.". American Journal of Obstetrics and Gynecology 200 (4): 357–64. doi:10.1016/j.ajog.2008.11.033. பப்மெட்:19318144. 
  3. 3.0 3.1 Paulson, James F. (2010). "Focusing on depression in expectant and new fathers: prenatal and postpartum depression not limited to mothers". Psychiatry Times 27 (2) இம் மூலத்தில் இருந்து 2012-08-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120805200822/http://www.psychiatrictimes.com/depression/content/article/10168/1519072. 
  4. "Perinatal Depression: Prevalence, Screening Accuracy, and Screening Outcomes". Agency for Health Care Research and Quality. Archived from the original on 2013-11-11.
  5. Seyfried, LS; Marcus, SM (August 2003). "Postpartum mood disorders.". International review of psychiatry (Abingdon, England) 15 (3): 231–42. doi:10.1080/09540260305196. பப்மெட்:15276962. 
  6. Spinelli, MG (September 2004). "Maternal infanticide associated with mental illness: prevention and the promise of saved lives.". The American Journal of Psychiatry 161 (9): 1548–57. doi:10.1176/appi.ajp.161.9.1548. பப்மெட்:15337641. https://archive.org/details/sim_american-journal-of-psychiatry_2004-09_161_9/page/1548. 
  7. 7.00 7.01 7.02 7.03 7.04 7.05 7.06 7.07 7.08 7.09 7.10 7.11 7.12 7.13 7.14 7.15 The Boston Women's Health Book Collective: Our Bodies Ourselves, pages 489–491, New York: Touchstone Book, 2005
  8. 8.0 8.1 8.2 8.3 8.4 8.5 8.6 8.7 WebMD: Understanding Post Partum Depression "Archived copy". Archived from the original on 2015-04-15. பார்க்கப்பட்ட நாள் 2015-04-09.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  9. 9.0 9.1 9.2 9.3 9.4 9.5 9.6 9.7 9.8 "Depression Among Women | Depression | Reproductive Health | CDC". www.cdc.gov (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2017-04-16. பார்க்கப்பட்ட நாள் 2017-04-15.
  10. "Postnatal depression and sexual health after childbirth". Obstet Gynecol 102 (6): 1318–25. December 2003. doi:10.1016/j.obstetgynecol.2003.08.020. பப்மெட்:14662221. https://archive.org/details/sim_obstetrics-and-gynecology_2003-12_102_6/page/1318. 
  11. Postpartum Depression பரணிடப்பட்டது 2012-02-25 at the வந்தவழி இயந்திரம் from Pregnancy Guide, by Peter J. Chen, at Hospital of the University of Pennsylvania. Reviewed last on: 10/22/2008
  12. Yonkers, KA; Ramin, SM; Rush, AJ; Navarrete, CA; Carmody, T; March, D; Heartwell, SF; Leveno, KJ (November 2001). "Onset and persistence of postpartum depression in an inner-city maternal health clinic system.". The American Journal of Psychiatry 158 (11): 1856–63. doi:10.1176/appi.ajp.158.11.1856. பப்மெட்:11691692. https://archive.org/details/sim_american-journal-of-psychiatry_2001-11_158_11/page/1856. 
  13. Canadian Mental Health Association > Post Partum Depression பரணிடப்பட்டது 2010-10-21 at the வந்தவழி இயந்திரம் Retrieved on June 13, 2010
  14. Miller LJ (February 2002). "Postpartum depression". JAMA 287 (6): 762–5. doi:10.1001/jama.287.6.762. பப்மெட்:11851544. 
  15. Paulson, J.F. (2010). "Prenatal and postpartum depression in fathers and its association with maternal depression: A metaanalysis". Journal of the American Medical Association 303: 1961–1969. 
  16. 16.0 16.1 Field, T (Feb 2010). "Postpartum depression effects on early interactions, parenting, and safety practices: A review". Infant Behavior and Development 33: 1–6. doi:10.1016/j.infbeh.2009.10.005. 
  17. Laursen, TM; Munk-Olsen, T; Mortensen, PB; Abel, KM; Appleby, L; Webb, RT (May 2011). "Filicide in offspring of parents with severe psychiatric disorders: a population-based cohort study of child homicide.". The Journal of Clinical Psychiatry 72 (5): 698–703. doi:10.4088/jcp.09m05508gre. பப்மெட்:21034682. https://archive.org/details/sim_journal-of-clinical-psychiatry_2011-05_72_5/page/698. 
  18. "Reproductive hormone sensitivity and risk for depression across the female life cycle: a continuum of vulnerability?". J Psychiatry Neurosci 33 (4): 331–43. July 2008. பப்மெட்:18592034. பப்மெட் சென்ட்ரல்:2440795 இம் மூலத்தில் இருந்து 2016-03-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160317074137/https://www.cma.ca/multimedia/staticcontent/html/n0/l2/jpn/vol-33/issue-4/pdf/pg331.pdf. 
  19. Goodman JH (January 2004). "Paternal postpartum depression, its relationship to maternal postpartum depression, and implications for family health". J Adv Nurs 45 (1): 26–35. doi:10.1046/j.1365-2648.2003.02857.x. பப்மெட்:14675298. https://archive.org/details/sim_journal-of-advanced-nursing_2004-01_45_1/page/26. 
  20. "Postpartum depression: identification of women at risk". BJOG 107 (10): 1210–7. October 2000. doi:10.1111/j.1471-0528.2000.tb11609.x. பப்மெட்:11028570. https://archive.org/details/sim_bjog_2000-10_107_10/page/1210. 
  21. Paschetta, Elena; Berrisford, Giles; Coccia, Floriana; Whitmore, Jennifer; Wood, Amanda G.; Pretlove, Sam; Ismail, Khaled M.K. (2014). "Perinatal psychiatric disorders: an overview". American Journal of Obstetrics and Gynecology 210 (6): 501–509.e6. doi:10.1016/j.ajog.2013.10.009. http://linkinghub.elsevier.com/retrieve/pii/S0002937813010478. 
  22. Howard, Louise M; Molyneaux, Emma; Dennis, Cindy-Lee; Rochat, Tamsen; Stein, Alan; Milgrom, Jeannette (2014). "Non-psychotic mental disorders in the perinatal period". The Lancet 384 (9956): 1775–1788. doi:10.1016/s0140-6736(14)61276-9. http://linkinghub.elsevier.com/retrieve/pii/S0140673614612769. 
  23. 23.0 23.1 23.2 23.3 23.4 23.5 23.6 23.7 23.8 Beck CT (1996). "A meta-analysis of the relationship between postpartum depression and infant temperament". Nurs Res 45 (4): 225–30. doi:10.1097/00006199-199607000-00006. பப்மெட்:8700656. 
  24. 24.0 24.1 24.2 "Risk factors for postpartum depression: a retrospective investigation at 4-weeks postnatal and a review of the literature". J Am Osteopath Assoc 106 (4): 193–8. April 2006. பப்மெட்:16627773. https://archive.org/details/sim_jaoa-the-journal-of-the-american-osteopathic-association_2006-04_106_4/page/193. 
  25. 25.0 25.1 Stuart-Parrigon, K; Stuart, S (September 2014). "Perinatal depression: an update and overview.". Current psychiatry reports 16 (9): 468. doi:10.1007/s11920-014-0468-6. பப்மெட்:25034859. 
  26. Mukherjee, Soumyadeep; Coxe, Stefany; Fennie, Kristopher; Madhivanan, Purnima; Trepka, Mary Jo (January 2017). "Stressful Life Event Experiences of Pregnant Women in the United States: A Latent Class Analysis". Women's Health Issues 27 (1): 83–92. doi:10.1016/j.whi.2016.09.007. பன்னாட்டுத் தர தொடர் எண்:1049-3867. https://doi.org/10.1016/j.whi.2016.09.007. 
  27. Mukherjee, Soumyadeep; Coxe, Stefany; Fennie, Kristopher; Madhivanan, Purnima; Trepka, Mary Jo (March 2017). "Antenatal Stressful Life Events and Postpartum Depressive Symptoms in the United States: The Role of Women's Socioeconomic Status Indices at the State Level" (in en). Journal of Women's Health 26 (3): 276–285. doi:10.1089/jwh.2016.5872. பன்னாட்டுத் தர தொடர் எண்:1540-9996. https://doi.org/10.1089/jwh.2016.5872. 
  28. "Correlates of early postpartum depressive symptoms". Matern Child Health J 10 (2): 149–57. March 2006. doi:10.1007/s10995-005-0048-9. பப்மெட்:16341910. 

வெளி இணைப்புகள்[தொகு]

ஒரு தாயால் இப்படிச் செய்ய முடியுமா? (பின் மகப்பேற்று இறுக்கம் குறித்த கட்டுரை) இந்து தமிழ் 2018 அக்டோபர் 13