ஈய நஞ்சூட்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈய நஞ்சூட்டல் (Lead poisoning) என்பது ஈயத்தினால் மனித உடலில் ஏற்படும் ஒருவகை நச்சுத்தன்மை ஆகும்.[1] அடி வயிற்றில் வலி ஏற்படுதல், மலச்சிக்கல், தலைவலி, அரிப்புத் தோலழற்சி, மறதிநோய், மலட்டுத்தன்மை, கை மற்றும் கால்களில் வற்றுணர்வு ஏற்படுதல் ஆகியவை அறிகுறிகளாகும்.[2] இந்த நச்சுத் தாக்குதலினால் பெரும்பான்மையாக நடத்தையியலில் பிரச்சினைகளும் , 10 விழுக்காடு அறிவார்ந்த இயலாமைகளும் ஏற்படுகின்றன.[1] சில விளைவுகள் நிரந்தரமாக இருக்கக்கூடும்.[1] சில சமயங்களில் குருதிச்சோகை, முயலகப்பீடிப்பு, ஆழ்மயக்கம் மற்றும் இறப்புகளும் ஏற்படலாம்.[2]

அசுத்தமான காற்று, நீர், தூசி, உணவு மற்றும் சுகாதாராமற்ற பொருட்கள் போன்றவற்றின் மூலமாக இந்த நச்சுத்தன்மை ஏற்படலாம்.[1] ஈய வண்ணப்பூச்சு கொண்ட பொருட்களை குழந்தைகள் உட்கொள்வதால் இந்த நச்சுத் தன்மை குழந்தைகளைப் பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.[1] வேலைகளில் உள்ள மன அழுத்தம் காரணமாக விடலைப் பருவங்களில் உள்ளவர்களுக்கும் இது ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.[3] குருதியில் உள்ள ஈயத்தின் அளவைப் பொருத்து இது அளவிடப்படுகிறது.[1] அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள நோய்த் தடுப்பு மையமானது குருதியில் உள்ள ஈயத்தின் அளவானது விடலைப் பருவத்தினருக்கு 10 µg/dl (10 µg/100 கி) மற்றும் குழந்தைகளுக்கு 5 µg/dl. எனும் அளவினையும் நிர்ணயித்துள்ளது.[4][5]

ஈய நஞ்சூட்டல் என்பது வருமுன் காக்கக்கூடியது ஆகும்.[1] ஈயத்தினால் செய்யப்பட்ட பொருட்களை வீடு மற்றும் வேலை செய்யும் இடங்களில் தவிர்த்தல் மற்றும் காற்றோட்டமான சூழல் போன்றவற்றின் மூலமாகவும் இதனைத் தவிர்க்கலாம்.[6][7] மேலும் நீர் அல்லது மண் போன்றவற்றில் இருந்து நீக்கப்படவேண்டிய ஈயத்தின் அளவுகள் மற்றும் வண்ணப்பூச்சு மற்றும் பாறை எண்ணெய் போன்றவற்றில் சட்டத்தின் படியான அளவுகளில் ஈயத்தினைச் சேர்ப்பது போன்றவற்றின் மூலமாகவும் இதனைத் தவிர்க்கலாம்.[1][6][8] இடுக்கல் சிகிச்சை போன்றவற்றின் மூலமாகவும் இதனைக் குணப்படுத்தலாம்.[8] இந்த சிகிச்சையானது குழந்தைகளின் குருதியில் உள்ள ஈயத்தின் அளவானது 40–45 µg/dl விட அதிகமாக இருக்கும் போது செய்யப்படுகிறது.[8][9]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 "Lead poisoning and health". WHO. September 2016. Archived from the original on 18 October 2016. பார்க்கப்பட்ட நாள் 14 October 2016.
  2. 2.0 2.1 "Lead Information for Workers". CDC. 30 September 2013. Archived from the original on 18 October 2016. பார்க்கப்பட்ட நாள் 14 October 2016.
  3. Gracia, RC; Snodgrass, WR (1 January 2007). "Lead toxicity and chelation therapy.". American Journal of Health-System Pharmacy 64 (1): 45–53. doi:10.2146/ajhp060175. பப்மெட்:17189579. https://archive.org/details/sim_american-journal-of-health-system-pharmacy_2007-01-01_64_1/page/45. 
  4. "Advisory Committee On Childhood Lead Poisoning Prevention (ACCLPP)". CDC. May 2012. Archived from the original on 4 May 2012. பார்க்கப்பட்ட நாள் 18 May 2012.
  5. (in en) The Code of Federal Regulations of the United States of America. U.S. Government Printing Office. 2005. பக். 116 இம் மூலத்தில் இருந்து 2017-11-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171105194927/https://books.google.com/books?id=sb06AAAAIAAJ&pg=PA116. 
  6. 6.0 6.1 "Lead Information for Employers". CDC. 30 September 2013. Archived from the original on 18 October 2016. பார்க்கப்பட்ட நாள் 14 October 2016.
  7. Needleman, H (2004). "Lead poisoning". Annual Review of Medicine 55: 209–22. doi:10.1146/annurev.med.55.091902.103653. பப்மெட்:14746518. 
  8. 8.0 8.1 8.2 Dapul, H; Laraque, D (August 2014). "Lead poisoning in children.". Advances in pediatrics 61 (1): 313–33. doi:10.1016/j.yapd.2014.04.004. பப்மெட்:25037135. 
  9. "What Do Parents Need to Know to Protect Their Children?". CDC. 30 October 2012. Archived from the original on 9 October 2016. பார்க்கப்பட்ட நாள் 14 October 2016.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈய_நஞ்சூட்டல்&oldid=3682461" இலிருந்து மீள்விக்கப்பட்டது