2018 சுலாவெசி நிலநடுக்கம்

ஆள்கூறுகள்: 0°10′41″S 119°50′24″E / 0.178°S 119.840°E / -0.178; 119.840
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2018 சுலாவெசி நிலநடுக்கம்
2018 சுலாவெசி நிலநடுக்கம் is located in Sulawesi
2018 சுலாவெசி நிலநடுக்கம்
நிலநடுக்க அளவுMw 7.5[1]
Ms 7.4 [2]
ஆழம்10.0 கிமீ
நிலநடுக்க மையம்0°10′41″S 119°50′24″E / 0.178°S 119.840°E / -0.178; 119.840
வகைதிருப்பு பிளவுப்பெயர்ச்சி
அதிகபட்ச செறிவுIX (தீவிரம்)
ஆழிப்பேரலைஆம்
நிலச்சரிவுகள்ஆம்
முன்னதிர்வுகள்Mw6.1, M5.4, M5.0
பின்னதிர்வுகள்ஐந்து M≥5.5
உயிரிழப்புகள்1,763 இறப்புகள், 2,549 காயம், 5,000 பேரை காணவில்லை[3][4]

சுலாவெசி நிலநடுக்கம் 2018 செப்டம்பர் 28 அன்று இடம்பெற்றது. இந்த ஆழக்குறைவான 7.5 அளவு நிலநடுக்கம் இந்தோனேசியாவின் சுலாவெசி தீவுகளின் முனகாசா மூவலந்தீவில் இடம்பெற்றது. இது மத்திய சுலாவெசி மாகாணத்தின் மலைப்பகுதிகளில் மையம் கொண்டிருந்தது. மாகாணத் தலைநகர் பாலுவில் இருந்து நிலநடுக்க மையம் 77 கிமீ தூரத்தில் அமைந்திருந்தது. நிலநடுக்கத்தின் தாக்கம் கிழக்கு கலிமந்தனில் சமாரிண்டா வரையும், மலேசியாவில் தாவாவ் வரையிலும் உணரப்பட்டது.[5] இந்நிகழ்வுக்கு முன்னால், செப்டம்பர் 28 காலையில் 6.1 அளவு முன்னதிர்வுகள் இடம்பெற்றன.[1] நிலநடுக்கத்தின் பின்னர் ஆழிப்பேரலை எச்சரிக்கை மாக்காசார் நீரிணைப் பகுதியில் விடுக்கப்பட்டது. ஆனாலும் ஒரு மணி நேரத்தின் பின்னர் அது திரும்பப்பெறப்பட்டது.[6] ஆனாலும், பாலு நகரை ஆழிப்பேரலை தாக்கி வீடுகளையும் கட்டடங்களையும் தாக்கியதில் 1,763 பேர் வரையில் உயிரிழந்தனர், 2,549 பேர் காயமடைந்தனர். 5,000 பேரை காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.[4] 1.5 முதல் 2.0 மீட்டர் வரை பேரலை நகரைத் தாக்கியதாக இந்தோனேசிய அரசு அறிவித்தது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 ANSS . U.S. Geological Survey. 
  2. "Indonesia earthquake of magnitude 7.4" 印度尼西亚7.4级地震 (in எளிதாக்கப்பட்ட சீனம்). China Earthquake Networks Center. 2018-09-28. பார்க்கப்பட்ட நாள் 2018-09-29.
  3. "Gempa dan Tsunami Palu: 29 Orang Hilang, 540 Orang Luka Berat" (in id-ID). Detik.com. 29-09-2018 இம் மூலத்தில் இருந்து 2019-09-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190912192926/https://news.detik.com/berita/4234413/gempa-dan-tsunami-palu-29-orang-hilang-540-orang-luka-berat. பார்த்த நாள்: 29-09-2018. 
  4. 4.0 4.1 "Indonesia earthquake: Huge surge in death toll". BBC. 30-09-2018. https://www.bbc.com/news/world-asia-45697553. 
  5. "earthquake North of Palu, Sulawesi, Indonesia"". Archived from the original on 2018-09-28. பார்க்கப்பட்ட நாள் 2018-09-29.
  6. "Tsunami Warning Called Off After 7.5 Magnitude Earthquake Hits Indonesia"
  7. "BMKG Pastikan Tsunami 1,5 Meter hingga 2 Meter Melanda Palu dan Donggala" (in id). KOMPAS. 28 September 2018. https://regional.kompas.com/read/2018/09/28/20305331/bmkg-pastikan-tsunami-15-meter-hingga-2-meter-melanda-palu-dan-donggala. பார்த்த நாள்: 28 September 2018. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=2018_சுலாவெசி_நிலநடுக்கம்&oldid=3540194" இலிருந்து மீள்விக்கப்பட்டது