இலிண்டி எல்கின்சு தாண்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலிண்டி எல்கின்சு தாண்டன்
தேசியம்அமெரிக்கர்
துறைகோள் அறிவியல்
பணியிடங்கள்புவி, விண்வெளித் தேட்டப் பள்ளி, அரிசோனா அரசு பல்கலைக்கழகம்; கார்னிகி அறிவியல் நிறுவனம்; பிரவுன் பல்கலைக்கழகம்; புனித மேரி மேரிலாந்து கல்லூரி
கல்வி கற்ற இடங்கள்மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனம்
அறியப்படுவதுஇயக்குநர், புவித் தரை காந்தவியல் துறை, கார்னிகி அறிவியல் நிறுவனம்; இயக்குநர், புவி, விண்வெளித் தேட்டப் பள்ளி, அரிசோனா அரசு பல்கலைக்கழகம்

இலிண்டி எல்கின்சு தாண்டன் (Lindy Elkins-Tanton) ஓர் அமெரிக்கக் கோள் அறிவியலாளர் ஆவார். இவர் கோள் உருவாக்கமும் படிமலர்ச்சியும் பற்றிய ஆய்வில் வல்லுனர் ஆவார். இவர் அரிசோனாவில் திம்பேவில் அமைந்த அரிசோனா அரசு பல்கலைக்கழகத்தின் புவி, விண்வெளித் தேட்டப் பள்ளி இயக்குநர் ஆவார்.

வாழ்க்கைப்பணி[தொகு]

இலிண்டி கேம்பிரிட்ஜ், மசாசூசட் ஆகிய இடங்களில் உள்ள மசாசூசட் தொழில்நுட்ப நிறுவன்ங்களில் கற்று, நிலவியலில் இளம் அறிவியல் பட்டமும் புவி வேதியியலில் மூதறிவியல் பட்டமும் நிலவியலில் முனைவர் பட்டமும் பெற்றார். இவர் மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தில் பேராசிரியராகவும் பிரவுன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி அறிவியலாளராகவும் மேரிலாந்து புனித மேரி கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணி செய்துள்ளார். வணிக உலகத்திலும் பல ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். முனைவர் பட்டம் பெற்ற பத்தாண்டுகளுக்குள் மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தில் நிலவியல் இணைப்பேராசிரியாக இருந்துள்ளார். இவர் கார்னிகி புவித்தரைக் காந்தவியல் துறையில் இயக்குநர் பதவிக்குப் பணியமர்த்தம் பெற்றுள்ளார். இவர் அங்கு 2014 ஜூலை 1 இல் அமெரிக்க விண்வெளி ஒன்றியத்தின் புவி, விண்வெளி அறிவியல் பள்ளியில் இயக்குநராகச் சேர்ந்துள்ளார்.[1]

சைக் விண்கலம்[தொகு]

முதன்மை ஆய்வாளராக இலிண்டி, சைக் விண்கலம் எனும் திட்டத்தை நாசாவுக்கு முன்மொழிகிறார். இத்திட்டம் பொன்மச் சிறுகோள் 16 சைக்கை ஆய்வதற்கான திட்டமாகும். நாசா 2015, செப்டம்பர் 30 இல் இறுதிபடுத்தபட்ட ஐந்து முன்மொழிவுகளில் ஒன்றாக அறிவித்தது. மேலும் நாசா 2017, ஜனவரி 4 இல் இந்த திட்டத்தை நடைமுறையில் தொடர தேர்வு செய்து ஒப்புதலை அறிவித்தது.[2][3] இந்த விண்கலம் 2022 கோடையில் ஏவப்படவுள்ளது. இது 2023 இல் செவ்வாய் கோளின் ஈர்ப்பின் உதவியோடு குறிப்பிட்ட 16 சைக் எனும் சிறுகோளை 2026 இல் அடையவுள்ளது.

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

பல விருதுகளைப் பெற்றுள்ள இவர், இருமுறை தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் காவ்லி அறிவியல் முன்னணி ஆய்வுறுப்பினராகத் தேர்வானார். இவருக்குத் தேசிய அறிவியல் அறக்கட்டளை 2008 இல் ஐந்தாண்டு வாழ்க்கைப்பணி விருதை (CAREER award) வழங்கியது. இவர் 2009 இல் இவர் மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தின் தகவுறு இளம்பட்ட ஆய்வு வழிகாட்டியாக 2009 இல் குறிப்பிடப்பட்டார்.[4] இவர் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் தாம்சின் மாத்தர் புரந்துவரும் ஆசுட்டர் ஆய்வுறுப்பினராக தேர்வானார். இவர் 2016 இல் அமெரிக்கப் புவி இயற்பியல் ஒன்றியத்தின் ஆய்வுறுப்பினராக தேர்வானார். இந்த உயர்தகைமைகள் மட்டுமல்லாமல், சிறுகோள் 8252 எல்கின்சு தாண்டன் இவரது பெயரால் அழைக்கப்படுகிறது.[5]

தேர்ந்தெடுத்த வெளியீடுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ASU News - Science & Tech: ASU School of Earth and Space Exploration appoints new director".
  2. "NASA announces five Discovery proposals selected for further study". 2015-09-30.
  3. "NASA Selects Two Missions to Explore the Early Solar System". NASA/JPL. பார்க்கப்பட்ட நாள் 2017-01-19.
  4. "School of Earth and Space Exploration". sese.asu.edu. Archived from the original on 2017-01-31. பார்க்கப்பட்ட நாள் 2016-09-14.
  5. "NASA/JPL Small-Body Database Browser: 8252 Elkins-Tanton (1981 EY14)".

வெளி இணைப்புகள்[தொகு]