யுரேனியம் ருத்தேனியம் சிலிசைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யுரேனியம் ருத்தேனியம் சிலிசைடு (Uranium ruthenium silicide) என்பது URu2Si2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனபெர்மியான் கலப்புலோகமாகும். யுரேனியம், ருத்தேனியம், சிலிக்கன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து '122' நாற்கோணக படிகக் கட்டமைப்பில் இக்கலப்புலோகத்தை உருவாக்குகின்றன. நடைமுறையிலுள்ள 122 இரும்பு ஆர்சினைடு போல திண்மப்பொருள் ஆய்வில் இதைப் பயன்படுத்துகிறார்கள். 17.5 கெல்வின் வெப்பநிலைக்குக் கீழ் யுரேனியம் ருத்தேனியம் சிலிசைடு ஒரு மீக்கடத்தியாகும். இவ்வெப்பநிலைக்குக் கீழ் இது காந்தத்தன்மையும் கொண்டுள்ளது [1][2]. 1.5 கெல்வின் வெப்பநிலைக்குக் கீழ் இது மீக்கடத்தியாகச் செயல்படுகிறது [3]. இருப்பினும், 17.5 கெல்வின் வெப்பத்திற்குக் கீழான கட்டத்தின் இயற்கைத் தன்மையை விவரிக்க பலவிதமான நிலவரங்கள் முன்மொழியப்பட்ட போதிலும் விவாதங்கள் இன்னும் தொடர்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. H.-H. Kung1, R. E. Baumbach, E. D. Bauer, V. K. Thorsmølle, W.-L. Zhang, K. Haule, J. A. Mydosh, G. Blumberg (20 March 2015). "Chirality density wave of the “hidden order” phase in URu2Si2". Science 347 (6228): 1339–1342. http://science.sciencemag.org/content/347/6228/1339. 
  2. Premala Chandra, Piers Coleman, Rebecca Flint (31 January 2013). "Hastatic order in the heavy-fermion compound URu2Si2". Nature 493: 621–626. http://www.nature.com/nature/journal/v493/n7434/full/nature11820.html. 
  3. Goll, Gernot (2006). Unconventional Superconductors: Experimental Investigation of the Order-Parameter Symmetry. Springer. பக். 107–111. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3540289852. https://books.google.com/books?id=ISvIgVbxIs4C&pg=PA107&lpg=PA107.