ஏ. ஜி. சம்பத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆ. கோ. சம்பத் (A. G. Sampath) என்பவர் என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் முன்னாள் தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1989[1]ஆம் ஆண்டு மற்றும் 1996 [2] ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க. வேட்பாளர்) வேட்பாளராக முகையூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தி.மு.க. இத்தொகுதியினை பாட்டாளி மக்கள் கட்சிக்கு (பா.ம.க.) ஒதுக்கியதால் ஏ. ஜி. சம்பத் கட்சியிலிருந்து விலகினார். முன்னதாக இந்தத் தொகுதியில் இவரது தாயார் ஏ. ஜி. பத்மாவதி இருமுறையும் மற்றும் இவருடைய தந்தை ஆ. கோவிந்தசாமி ஒரு முறையும் வெற்றி பெற்றிருந்தனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. p. 6. Archived from the original (PDF) on 7 October 2010. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
  3. "ADMK, DMK facing rebellion". Rediff. 2 April 2006. http://m.rediff.com/news/report/tn/20060402.htm. பார்த்த நாள்: 2017-05-13. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._ஜி._சம்பத்&oldid=3454435" இலிருந்து மீள்விக்கப்பட்டது