அப்துல்லா குல் இடைமாற்றுசந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அப்துல்லா குல் இடைமாற்றுசந்தி (Abdullah Gul Interchange) என்பது பாக்கித்தான் நாட்டிலுள்ள லாகூர் நகர சுற்றுவட்டப் பாதையில் அமைந்திருக்கும் ஒரு சாலைகள் சந்திப்பு பகுதியாகும். துருக்கி நாட்டின் குடியரசுத்தலைவர் அப்துல்லா குல் நினைவாக இப்பகுதிக்கு அப்துல்லா குல் இடைமாற்றுசந்தி எனப்பெயரிடப்பட்டது. லாகூர் நகரில் உள்ள அல்லாமா இக்பால் அனைத்துலக விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில் இச்சந்தி அமைந்துள்ளது. அப்துல்லா குல் இடைமாற்றுசந்தி 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் நாளில் திறக்கப்பட்டது. ஏழே மாத காலப்பகுதியில் 2,275 மில்லியன் செலவில் இச்சந்தி கட்டிமுடிக்கப்பட்டு சாதனைக்குள்ளானது. பாக்கித்தான் பிரதமர் சையத் யூசுப் ரசா கிலானி மற்றும் பஞ்சாப் மாநில முதலமைச்சர் மியான் முகமது சாபாசு செரீப் ஆகியோர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர். ஒப்பந்தக்காரர்களால் நிறைவேற்றப்பட்ட மிகச்சிறந்த வேலைத்திட்டம் இச்சந்தி என விழா பிரமுகர்கள் பாராட்டுகளை அளித்தனர் [1][2]. முன்னதாக 2010 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் 16 அன்று பஞ்சாப் முதலமைச்சர் ஒரு முன்னோடித் திறப்புவிழா நிகழ்ச்சியை நடத்தியிருந்தார்.

கட்டுமான விவரங்கள்[தொகு]

வகை விளக்கம்
கட்டுமான மதிப்பு ரூ. 2.2 பில்லியன்
பாலம் 1 நீளம் 46.50 மீட்டர்
பாலம் 2 நீளம் 50.10 மீட்டர்
கட்டுமான காலம் 7 மாதங்கள்
உரிமை திட்ட மேலாண்மை அலகு, பஞ்சாப் அரசு,[3] லாகூர், பஞ்சாப் (பாக்கிஸ்தான்)
ஆலோசகர் நெசுபாக்[4]
ஒப்பந்தக்காரர் என்.எல்.சி[5] மற்றும் அபீப் கட்டுமான நிறுவனம்[6]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]