பிளெய்சு வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிளெய்சு வினை
பெயர் மூலம் எட்மண்டு பிளெய்சு
வினையின் வகை பிணைப்பு வினை
இனங்காட்டிகள்
கரிமவேதியியல் வலைவாசல் வினை.shtm பிளெய்சு வினை
RSC சுட்டெண் RXNO:0000237

பிளெய்சு வினை (Blaise reaction) என்பது துத்தநாகத்துடன் α-புரோமோயெசுத்தரையும் ஒரு நைட்ரைலையும் சேர்த்து வினைபுரியச் செய்து β- கீட்டோயெசுத்தரை தயாரிக்கும் கரிம வேதியியல் வினையாகும் [1][2][3]. 1901 ஆம் ஆண்டு எட்மண்டு பிளெய்சு (1872–1939) முதன்முதலில் இவ்வினையைக் கண்டறிந்து கூறினார். வினையின் இறுதி இடைநிலை வேதிப்பொருள் ஒரு மெட்டலோயிமைன் சேர்மமாகும். இச்சேர்மம் பிறகு நீராற்பகுக்கப்பட்டு தேவையான β- கீட்டோயெசுத்தர் உருவாகிறது [4].

பிளெய்சு வினை
பிளெய்சு வினை

பெரிய அலிபாட்டிக் எசுத்தர்கள் மிக அதிக அளவிளான விளைபொருட்களைக் கொடுக்கின்றன. சிடீவன் ஆனிக் மற்றும் யோசிட்டோ கிசி ஆகியோர் இவ்வினையின் மேம்பட்ட செயல்முறையை உருவாக்கினர் [5]. இவ்வினையின் போக்கில் தனி ஐதராக்சில் தொகுதிகளுக்கு இடமளிப்பது கரிம உலோக ஆலைடுகளுக்கான வினைகளுக்கு ஆச்சரியமளிக்கிறது [6][7].

வினைவழிமுறை[தொகு]

எசுத்தர் கார்பனைலுடன் ஆல்பா புரோமின் வினைப்பட்டு கரிமத்துத்தநாக அணைவுச் சேர்மம் உருவாதலுடன் பிளெய்சு வினையின் வினைவழி முறை தொடங்குகிறது. இதனால் ஆல்பா கார்பனானது அணுக்கருகவரியாக மாற்றமடைந்து நைட்ரைலின் எலக்ட்ரான் கவர் கார்பனை தாக்க அனுமதிக்கிறது. இத்தாக்குதலால் உருவாகும் எதிர்மின் நைட்ரைல் நைட்ரசன் துத்தநாக ஒற்றைபுரோமைடு நேர்மின் அயனியுடன் சேர்ந்து அணைவுச் சேர்மமாக உருவாகிறது. இது 50% நீர்த்த K2CO3 உடன் வினைபட்டு மேலே படத்தில் காட்டப்பட்டுள்ள இமைன் இடைநிலை விளைபொருளின் அமைப்பு மாற்றியமான β- ஈனமினோ எசுத்தர் விளைபொருள் உருவாகிறது. β-கீட்டோயெசுத்தர் விளைபொருளாக எதிர்பார்க்கப்பட்டால், 1 மோல் ஐதரோகுளோரிக் அமிலத்தை சேர்த்து வினைப்படுத்தினால் β- ஈனமினோ எசுத்தர் விளைபொருள் நீராற்பகுக்கப்பட்டு ஈனமினோவை கீட்டோனாக மாற்றி β-கீட்டோயெசுத்தராக உருவாக்குகிறது.

Blaise Rxn Mechanism
Blaise Rxn Mechanism

மேற்கோள்கள்[தொகு]

  1. ^ Edmond E. Blaise; Compt. Rend. 1901, 132, 478.
  2. ^ Rinehart, K. L., Jr. Organic Syntheses, Coll. Vol. 4, p. 120 (1963); Vol. 35, p. 15 (1955). (Article)
  3. ^ Rao, H. S. P.; Rafi, S.; Padmavathy, K. Tetrahedron] 2008, 64, 8037-8043. (Review)
  4. ^ Cason, J.; Rinehart, K. L., Jr.; Thorston, S. D., Jr. J. Org. Chem. 1953, 18, 1594. (எஆசு:10.1021/jo50017a022)
  5. ^ Hannick, S. M.; யோசிட்டோ கிச்சி. J. Org. Chem. 1983, 48, 3833. (எஆசு:10.1021/jo00169a053)
  6. [8] Marko, I.E. J. Am. Chem. Soc. 2007, ASAP எஆசு:10.1021/ja0691728
  7. [9] Wang, D.; Yue, J.-M. Synlett 2005, 2077-2079.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளெய்சு_வினை&oldid=2568396" இலிருந்து மீள்விக்கப்பட்டது