காம்பிளி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காம்பிலி ஆறு என்பது தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டம் அனுப்பட்டி என்ற இடத்தில் துவங்கி ஈரோடு மாவட்டம் மயில்ரங்கம் எனும் இடத்தில் அமராவதி ஆற்றோடு கலக்கும் ஒரு காட்டாறாகும். இதன் நீளம் சுமார் 70 கிமீ. பெரு மழைக்காலங்களில் நதி போன்றும் மற்ற நேரங்களில் வறண்ட ஓடையாகவும் காட்சி தரும். இது செல்லும் வழியில் பல தடுப்பணைகள் கட்டப்பட்டு நீர் சேமிக்கும் முயற்சிகள் நடந்துகொண்டுள்ளன. முழுமையாக மீட்டெடுக்கவும் பல்வேறு ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காம்பிளி_ஆறு&oldid=3861075" இலிருந்து மீள்விக்கப்பட்டது