செந்தில் கணேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செந்தில்கணேசன்
பிறப்பு1980 (அகவை 43–44)
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு
வாழ்க்கைத்
துணை
இராசலெட்சுமி
பிள்ளைகள்2
செந்தில் கணேஷ்
இசை வடிவங்கள்நாட்டார் பாடல்
தொழில்(கள்)கிராமிய இசைப்பாடகர், நடிகர்

செந்தில்கணேசன் (Senthil Ganesh) தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமிய மக்களிசைப் பாடகர் ஆவார். 15 சூலை 2018 அன்று விஜய் தொலைக்காட்சி நடத்திய சூப்பர் சிங்கர் - 6வது போட்டியில் செந்தில்கணேசன் முதல் இடத்தை வென்று, ரூபாய் 50 இலட்சம் மதிப்புள்ள வீட்டை பரிசாக வென்றார்.[1][2] இவரது மனைவியும், கிராமிய மக்களிசைப் பாடகருமான இராஜலெட்சுமி இப்போட்டியில் கலந்து கொண்டு ஆறுதல் பரிசு வென்றார்.

சுய முகவரி[தொகு]

செந்தில்கேனசன் 08-04-1986 இல் பிறந்தார், இவரது தந்தை பெயர் சந்திரன் மற்றும் தாய் பெயர் அஞ்சலை, இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் கலபம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர், திருச்சிராப்பள்ளி கல்லூரியில் எம்.எஃப்.ஏ[3] மாணவராக பட்டம் பெற்றார். அதன் பிறகு, தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் இசை ஆசிரியராக தொழில் ரீதியாக பயிற்சி பெற்றார்.

திரைப்படங்கள்[தொகு]

அறிமுக இயக்குனர் செல்ல. தங்கையா இயக்கத்தில் 2014ல் வெளியான திருடு போகாத மனசு எனும் தமிழ் திரைப்படத்தில், இவர் சாய் மற்றும் இராசலெட்சுமியுடன் கதாநாயகனாக பாடி நடித்துள்ளார். மேலும் தற்போது செல்ல. தங்கையா இயக்கும் கரிமுகன் எனும் திரைப்படத்தில் பாடி, நடித்துக் கொண்டிருக்கிறார்.[4]

சிறப்புகள்[தொகு]

இவர் ஒரு மிகவும் ஆர்வமுள்ள பாடகர், தனது 5 வயதிலிருந்தே தொடர்ந்து பாடும் திறனை வளர்த்துக் கொண்டார். இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளின் போது பல நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்றுள்ளார். தனது 15 வயதில், தனது குரு திரு.தங்கையா இசையமைத்த "மண்ணுக்கேத்த ராகம்"[5] இல் தனது முதல் பாடலைப் பாடி பதிவு செய்தார். இப்போது வரை இவர் 3000 க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளை தமிழ்நாட்டிலும் இன்னும் பல இடங்களிலும் செய்துள்ளார்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. செந்தில் கணேஷ் - இராஜலெட்சுமி
  2. Super Singer 6 Senthil Ganesh 15.07.2018 Title Winner Performance | Rajalakshmi Songs | Vijay Tv
  3. "படிமம்:Senthilganesh biodata.pdf" (PDF), தமிழ் விக்கிப்பீடியா, பார்க்கப்பட்ட நாள் 2019-09-12[தொடர்பிழந்த இணைப்பு]
  4. Karimugan Movie Songs
  5. "படிமம்:Senthilganesh biodata.pdf" (PDF), தமிழ் விக்கிப்பீடியா, பார்க்கப்பட்ட நாள் 2019-09-12[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செந்தில்_கணேஷ்&oldid=3710810" இலிருந்து மீள்விக்கப்பட்டது