உணர்வொலிக் கிளவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உணர்வொலிக் கிளவி (Ideophone) என்பது ஓர் உணர்வை வெளிப்படுத்த மாந்தர்கள் கூறும் சொற்கள். நாற்றம், வண்ணம், ஓசை, நகர்வு, தொடுவுணர்வு, சுவை போன்ற ஏதாவது ஒன்றைப் பற்றிய அழுத்தமானதாகவும், அதன் இயல்புக்கு நெருக்கமாகனதாகவும் ஏற்படும் உணர்வை விளிக்கப் பயன்படும் சொல்லைக் குறிக்கும். இது ஏறத்தாழ எல்லா மொழிகளிலுமே அறியப்பட்டதானாலும் அதன் இயல்பும் பயன்படும் அளவும் மொழிக்கு மொழி மாறுபடுவன. இதனால் இவற்றை எழுவாய் பயனிலை போன்று மொழிகளூடே ஒரு பொதுவான இலக்கணக் கூறாகக் கொள்ளக்கூடாது என சில மொழியியலாளர்கள் கருதுகின்றனர். தமிழ் உட்பட பல மொழிகளில் இவை இரட்டைக் கிளவிகளாகவும் இருக்கின்றன.

தமிழில் உணர்வொலிக்கிளவிகள்[தொகு]

தமிழில் குறிப்படத்தக்க அளவு மிகுதியான எண்ணிக்கையில் இவை மலிந்துள்ளன. ஒரு பொருள் அல்லது நிகழ்வு எப்படி "ஒலிக்கிறது" அல்லது எப்படி உணரப்படுகின்றது அல்லது என்ன "சொல்கிறது" என்பதைக் குறிக்கும் விதமாக, "என்று" என்ற சொல் பின்னே இட்டுப் பயன்படுகிறது. இதன் வழியாக ஒரு வினையின் பண்பை விளக்கும் உரிச்சொல்லாகிறது.[1]

எடுத்துக்காட்டுக்கள்[தொகு]

  1. பாம்பு சர சர என்று ஊர்ந்து சென்றது.
  2. மலர்விழி மள மள என்று ஏறினாள்.
  3. அவன் நெஞ்சம் பட பட என்று அடித்துக் கொண்டது.
  4. வளவன் தனது குழந்தையின் கன்னத்தில் நச்சென்று முத்தமிட்டான்.
  5. கதிரவன் "தகதக" வென எழுகின்றான் (என என்பது என்று என்பது போல)
  6. திருட்டுத்தனத்தைக் கையும் களவுமாக பிடித்தவுடன் அவன் "திருதிரு" என விழித்தான்.

பிற மொழிகளில் உணர்வொலிக்கிளவிகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. Swiderski, Richard M. (1996). The metamorphosis of English: versions of other languages. New York: Bergin & Garvey. பக். 61. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-89789-468-5. https://archive.org/details/metamorphosisofe0000swid. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உணர்வொலிக்_கிளவி&oldid=3582236" இலிருந்து மீள்விக்கப்பட்டது