அழகு (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அழகு
வகைகுடும்பம்
நாடகத் தொடர்
எழுத்துவிஷன் டைம் டீம்
எஸ். மருது ஷங்கர்
(உரையாடல்)
திரைக்கதைசி.உ முத்துச்செல்வன்
கதைசி.உ முத்துச்செல்வன்
இயக்கம்
  • ரவி V.C (1-48)
  • ஓ.என்.ரத்னம் (49-392)
  • என்.சுந்தரரேஸ்வரன் (393-440)
  • வென்பா கதிரேசன் (441-474)
  • ப. செல்வம் (475-719)
படைப்பு இயக்குனர்வ.முரளி ராமன்
நடிப்புரேவதி
தலைவாசல் விஜய்
ஸ்ருதி ராஜ்
முகப்பு இசைவிஷால்
ஆதித்யா
(தலைப்பு பாடல்)
கிரண்
(பின்னணி இசை)
முகப்பிசைஅழகம்மா
எஸ். பி. பாலசுப்பிரமணியம்
(பாடியவர்)
பத்ரி வெங்கடேஷ்
(பாடல்)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்719
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்வைதேகி ராமமூர்த்தி
ஒளிப்பதிவுஅழகிய மானவையான்
ப. செல்ல பாண்டியன்
தொகுப்புஎம்.எஸ். தியாகராஜன்
ஆர்.பீ.மணிகண்டன்
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்விஷன் டைம்
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்20 நவம்பர் 2017 (2017-11-20) –
3 ஏப்ரல் 2020 (2020-04-03)

அழகு என்பது சன் தொலைக்காட்சியில் 20 நவம்பர் 2017 முதல் 3 ஏப்ரல் 2020 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் சனி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்தத் தொடரை விஷன் டைம் என்ற நிறுவனம் தயாரிக்க, ரேவதி, தலைவாசல் விஜய், ஸ்ருதி ராஜ், ஐசுவரியா, காயத்ரி ஜெயராமன், பூவிலங்கு மோகன் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[1] இந்தத் தொடர் கொரோனா வைரசு காரணத்தால் 3 ஏப்ரல் 2020 முதல் 719 அத்தியாயங்களுடன் நிறுத்தப்பட்டுள்ளது.

கதை கரு[தொகு]

இந்த தொடரின் கதை கரு பள்ளி ஆசிரியரான பழனிசுவாமி மற்றும் மனைவி அழகம்மா, இவர்களின் 5 பிள்ளைகளான (ரவி, மகேஷ், ஐஸ்வர்யா, திருநாவுக்கரசு, காவ்யா) ஆகியோரின் வாழ்வில் வரும் பிரச்சனைகளை மையமாக வைத்து இந்த கதை நகர்கின்றது.

நடிகர்கள்[தொகு]

பழனிசுவாமி குடும்பம்[தொகு]

  • ரேவதி - அழகம்மை பழனிசாமி
    • குடும்பத்தின் தலைவர். பழனிசாமியின் மனைவி, எல்லோருக்கும் நன்மையை மட்டும் நினைப்பவர் மற்றும் படிக்காத அறிவாளியும் ஆவார்.
  • தலைவாசல் விஜய் - பழனிசாமி
    • மனைவி சொல்ல மட்டும் கேட்கும் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார்.
  • ஸ்ருதி ராஜ் - சுதா (ரவியின் மனைவி / சுரேந்தரின் முன்னாள் மனைவி)
    • வழக்கறிஞ்சர், சகுந்தலா தேவி மற்றும் அரவிந்தின் மூத்த மகள் (என்னும் எவருக்கும் தெரியாது), பூர்ணாவின் சகோதரி மற்றும் அழகம்மையின் முதல் மருமகள். ரவிவின் நண்பரான சுரேந்தரை முதலில் திருமணம் செய்து கொண்டார். அவர் இறக்க தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாகவும் ரவிவை திருமணம் செய்து கொண்டார். கருணை உள்ளம் கொண்டதாள் இவளை சின்ன அழகம்மை என்று அழைப்பார்கள்.
  • சங்கீதா - பூர்ணா மகேஷ் (வில்லி)
    • சுதாவின் சகோதரி, சகுந்தலா தேவி, அரவிந்தின் இரண்டாவது மகள், அழகம்மையின் இரண்டாவது மருமகள், ரவியுடன் குழந்தைப் பருவத்தில் காதல் கொண்டிருந்தார். ஆனால் சுதாவுடன் ரவி திடீரென திருமணம் செய்து கொண்டதால், மகேஷ் திருமணம் செய்து கொண்டார்.
  • காயத்ரி ஜெயராமன் - சகுந்தலா தேவி அரவிந்
    • இவர் இந்தியாவின் மிகவும் பிரபலமான வழக்கறிஞர் ஆவார், சுதா, பூர்ணா மற்றும் மதன் ஆகியோரின் தாய். அரவிந்தின் மனைவி.

மற்ற நடிகர்கள்[தொகு]

  • மித்ரா → நித்திய தாஸ் → நிரஞ்சனி (அழகம்மாவின் மகள்)
  • ஐசுவரியா - வசந்தா (பழனிசுவாமியின் சகோதரி)
  • வாசு விக்ரம் - மணிமாறன் (அழகம்மாவின் சகோதரன்)
  • பூவிலங்கு மோகன் - சேதுராமன் (கணேஷின் தந்தை)
  • பி. கண்ணன் - கண்ணன் (சேதுராமனின் அண்ணன்)
  • ராஜ்யலட்சுமி - தேவி (மணிமாறனின் மனைவி)
  • ஜெயராம் - கணேஷ் (ஐஸ்வர்யா வின் கணவன் / சேதுராமனின் மூத்த மகன்)
  • பாரினா ஆசாத் (1-150) → அக்ஷ்தா போபியா (152-719) - நிவேதிதா
  • நவிந்தர் - மகேந்திரா
  • மௌனிகா - மனிஷா
  • அஸ்வின் - சுரேந்தர்
  • ராஜேஷ் - நவீன்
  • பாவாஸ் சயனி - வெங்கட்
  • ரம்யா ஷங்கர் - ரதி

சிறப்பு தோற்றம்[தொகு]

நடிகர்களின் தேர்வு[தொகு]

இது ஒரு குடும்ப பின்னையை கொண்ட தொடர். இந்த தொடரின் புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகை ரேவதி அழகம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார், இவர் 10 வருடங்களுக்கு பிறகு நடிக்கும் தொலைக்காட்சித் தொடர் இது ஆகும். இவருக்கு ஜோடியாக திரைப்பட நடிகர் தலைவாசல் விஜய் பழனிசுவாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் கங்கா யமுனா சரஸ்வதி என்ற தொடருக்கு பிறகு நடிக்கும் தொடர் இதுவாகும். தென்றல் தொடர் புகழ் ஸ்ருதி ராஜ் சுதா என்ற ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். காவலன் திரைப்பட நடிகை மித்ரா குரியன் அழகம்மா மற்றும் பழனிசுவாமியின் மகளாக நடித்தார். அத்தியாயம் 243 முதல் இவருக்கு பதிலாக நடிகை நித்ய தாஸ் நடித்தார். இவர்களுடன் பிரபலமான நடிகர்கள் ஐசுவரியா, வாசு விக்ரம், பூவிலங்கு மோகன், லோகேஷ் மற்றும் பி. கண்ணன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள்.

ஒளிபரப்பு நேரம் மாற்றம்[தொகு]

இந்த தொடர் தமிழில் புகழ் பெற்ற வம்சம் தொடருக்கு பதிலாக திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி, அக்டோபர் 22, 2018 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை மாலை 7 மணிக்கு ஒளிபரப்பானது. 5 ஆகத்து 2019 முதல் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி கொரோனாவைரசு காரணத்தால் 3 ஏப்ரல் 2020 முதல் 719 அத்தியாயங்களுடன் நிறுத்தப்பட்டுள்ளது.

ஒளிபரப்பான திகதி நாட்கள் நேரம் அத்தியாயங்கள்
20 நவம்பர் 2017 - 20 அக்டோபர் 2018
திங்கள் - சனி
20:30 1-282
24 அக்டோபர் 2018 – 3 ஆகத்து 2019
திங்கள் - சனி
19:00 283- 520
5 ஆகத்து 2019 – 3 ஏப்ரல் 2020
திங்கள் - சனி
18:30 521-719

மதிப்பீடுகள்[தொகு]

கீழே உள்ள அட்டவணையில், நீல நிற எண்கள் குறைந்த மதிப்பீடுகள் குறிக்கும் மற்றும் சிவப்பு நிற எண்கள் அதிக மதிப்பீடுகளை குறிக்கும்.

அத்தியாயங்கள் ஒளிபரப்பான திகதி BARC மதிப்பீடுகள் (தமிழ்நாடு + புதுச்சேரி)[2]
தேசிய அளவில் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி)
1-50 20 நவம்பர் 2017 - 19 ஜனவரி 2018 10.8%
51-103 20 ஜனவரி 2018 - 23 மார்ச் 2018 9.4%
104-150 24 மார்ச் 2018 - 18 மே 2018 8.1%
151-204 19 மே 2018 - 20 ஜூலை 2018 8.5%
205-250 21 ஜூலை 2018 - 13 செப்டம்பர் 2018 9.3%
251-303 14 செப்டம்பர் 2018 - 16 நவம்பர் 2018 7.6%
304-350 17 நவம்பர் 2018 - 11 ஜனவரி 2019 7.4%
351-400 12 ஜனவரி 2019 - 15 மார்ச் 2019 8.2%
401-450 16 மார்ச் 2019 - 14 மே 2019 7.6%
451-500 15 மே 2019 - 11 ஜூலை 2019 7.9%
501-719 8.4%

சர்வதேச ஒளிபரப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Revathí's Azhagu to be aired from November 20" (in en). timesofindia.indiatimes.com. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/revathis-azhagu-to-be-aired-from-november-20/articleshow/61672864.cms. 
  2. "barcindia.co.in Azhagu serial Ratings".

வெளி இணைப்புகள்[தொகு]

சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி மாலை 6:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி அழகு
(5 ஆகத்து 2019 - 3 ஏப்ரல் 2020)
அடுத்த நிகழ்ச்சி
தமிழ்ச்செல்வி
(3 சூன் 2019 – 3 ஆகத்து 2019)
ஆதிபராசக்தி
(27 ஆகத்து 2020 - 24 அக்டோபர் 2020)
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 8:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி அழகு
(20 நவம்பர் 2017 - 20 அக்டோபர் 2018)
அடுத்த நிகழ்ச்சி
வம்சம்
(10 சூன் 2013 – 18 நவம்பர் 2017)
கண்மணி
(22 அக்டோபர் 2018 - 28 நவம்பர் 2020)