அலுமினியம் புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலுமினியம் புளோரைடு

படிகக் கட்டமைப்பு
பெயர்கள்
வேறு பெயர்கள்
அலுமினியம்(III) புளோரைடு
அலுமினியம் டிரைபுளோரைடு
இனங்காட்டிகள்
7784-18-1 Y
32287-65-3 (ஒற்றை நீரேற்று) Y
15098-87-0 (முந்நீரேற்று) Y
ChEBI CHEBI:49464 Y
ChemSpider 2039 Y
InChI
  • InChI=1S/Al.3FH/h;3*1H/q+3;;;/p-3 Y
    Key: KLZUFWVZNOTSEM-UHFFFAOYSA-K Y
  • InChI=1/Al.3FH/h;3*1H/q+3;;;/p-3
    Key: KLZUFWVZNOTSEM-DFZHHIFOAC
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 2124
வே.ந.வி.ப எண் BD0725000
SMILES
  • F[Al](F)F
பண்புகள்
AlF3
வாய்ப்பாட்டு எடை 83.977 கிராம்/மோல் (நீரிலி)
101.992 கிராம்/மோல் (ஒற்றை நீரேற்று)
138.023 கிராம்/மோல் (முந்நீரேற்று)[1]
தோற்றம் வெண்மை, படிகத் திண்மம்
மணமற்றது
அடர்த்தி 3.10 கிராம்/செ.மீ3 (நீரிலி)
2.17 கிராம்/செ.மீ 3 (ஒற்றை நீரேற்று)
1.914 கிராம்/செ.மீ 3 (முந்நீரேற்று)[1]
உருகுநிலை 1,290 °C (2,350 °F; 1,560 K)[4] (நீரிலி) (பதங்கமாகும்)
5.6 கிராம்/லிட்டர் (0 °செ)
6.7 கிராம்/லிட்டர் (20 °செ)
17.2 கிராம்/லிட்டர் (100 °செ)
-13.4•10−6 செ.மீ3/மோல்[2]
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.3767 (கட்புல வீச்சு)[3]
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம், hR24
புறவெளித் தொகுதி R3c, No. 167[5]
Lattice constant a = 0.49254 நானோமீட்டர், c = 1.24477 நானோமீட்டர்
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−1510.4 கிலோயூல்/மோல்[6]
நியம மோலார்
எந்திரோப்பி So298
66.5 யூல்/மோல்•கெல்வின்[6]
வெப்பக் கொண்மை, C 75.1 யூ/மோல்•கெல்வின்[6]
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் InChem MSDS
GHS pictograms CorrosiveAcute toxicityIrritantReproductive toxicity, target organ toxicity, aspiration hazard
GHS signal word அபாயம்
H301, H302, H314, H315, H319, H335, H361, H372
P260, P261, P264, P270, P271, P280, P301+310, P301+312, P301+330+331, P302+352, P303+361+353, P304+340, P305+351+338, P310
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
எதுமில்லை
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
2 மில்லிகிராம்/மீட்டர்3
உடனடி அபாயம்
N.D.
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

அலுமினியம் புளோரைடு (Aluminium fluoride) என்பது AlF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். அலுமினியம் தயாரிப்பில் பயன்படுத்தப்படுவது இச்சேர்மத்தின் முதன்மையான பயனாகும். நிறமற்ற திண்மமான இதை செயற்கை முறையிலும் தயாரிக்கலாம். இயற்கையில் இது ரோசன்பெர்கைட்டு மற்றும் ஆசுக்கர்சோனைட்டு என்ற கனிமங்களில் தோன்றுகிறது.

தயாரிப்பும் தோற்றமும்[தொகு]

அலுமினியம் புளோரைடின் பெரும்பகுதியை அலுமினாவை ஐதரசன் புளோரைடு வாயுவுடன் சேர்த்து 700 ° செல்சியசு வெப்ப நிலைக்கு:[4] சூடுபடுத்தி தயாரிக்கிறார்கள். புளோரோசிலிசிக் அமிலத்தையும் அலுமினியம் புளோரைடு தயாரிக்கப் பயன்படுத்தப்படலாம்[10]

H2SiF6 + Al2O3 .3 H2O → 2 AlF3 + 3 SiO2 + 4 H2O.

அமோனியம் எக்சாபுளோரோ அலுமினேட்டை வெப்பச் சிதைவுக்கு உட்படுத்தி அலுமினியம் புளோரைடைத் தயாரிப்பது மற்றொரு மாற்று வழிமுறையாகும்[11]. சிறிய அளவு ஆய்வகத்தயாரிப்புகளுக்கு அலுமினியம் ஐதராக்சைடு அல்லது அலுமினியம் உலோகத்தை ஐதரசன் புளோரைடுடன் சேர்த்து சூடுபடுத்தி இதைத் தயாரித்துக் கொள்கிறார்கள்.

அலுமினியம் புளோரைடு டிரையைதரைடு என்பது அரிதாக இயற்கையில் தோன்றும் ரோசன்பெர்கைட்டு என்ற கனிமமாகும். இதனுடைய நீரேற்றமற்ற வடிவம் ஆசுக்கர்சோனைட்டு என்ற கனிம வடிவில் தோன்றுகிறது[12].

கட்டமைப்பு[தொகு]

அலுமினியம் புளோரைடின் கட்டமைப்பு இரேனியம் டிரையாக்சைடு கருத்தாக்கத்தை ஏற்றுக்கொண்டு உருக்குலைந்த AlF6 எண்முகத் தோற்றத்தில் காணப்படுகிறது. ஒவ்வொரு புளோரைடு அணுவும் இரண்டு Al மையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் முப்பரிமாண பல்பகுதித் தோற்றம் காரணமாக ALF3 உயர் உருகுநிலையயைப் பெற்றுள்ளது. திண்ம நிலையில் காணப்படும் அலுமினியத்தின் மற்ற டிரையாலைடுகள் வேறுபடுகின்றன.

AlCl3 ஓர் அடுக்கு கட்டமைப்பையும் மற்றும் AlBr3 மற்றும் AlI3 ஆகியவை மூலக்கூற்று இருபடிக் கட்டமைப்பையும் ஏற்கின்றன[13]. இதனால் இவை குறைந்த உருகுநிலையைப் கொண்டிருக்கின்றன. மேலும் இவை உடனடியாக ஆவியாகி இருபடிகளைக் கொடுக்கின்றன[14]. வாயு நிலையில் அலுமினியம் புளோரைடு முக்கோண மூலக்கூறுகளாக உள்ள D3h சமச்சீருடன் காணப்படுகிறது. வாயு மூலக்கூறுகளின் AL-F பிணைப்பின் பிணைப்பு நீளம் 163 பைக்கோமீட்டர்களாகும்.

பெரும்பாலான வாயுநிலை உலோக புளோரைடுகள் போல AlF3 ஆவியாகும் போது சமதள கட்டமைப்பை ஏற்கிறது

.

பயன்பாடுகள்[தொகு]

மின்னாற்பகுப்பு முறையில் அலுமினியத்தை உற்பத்தி செய்வதற்கு அலுமினியம் புளோரைடு ஒரு முக்கியமான கூட்டுசேர் பொருளாகப் பயன்படுகிறது. கிரையோலைட்டு தாதுவுடன் சேர்ந்து, இது உருகு நிலையை 1000 ° செல்சியசு வெப்பநிலை அளவுக்குக் குறைக்கிறது மற்றும் கரைசல்களின் கடத்துத்திறனையும் அதிகரிக்கிறது. இது உருகிய அலுமினிய ஆக்சைடில் கரைந்து பின்னர் மின்னாற்பகுப்பின் போது அலுமினியம் உலோகத்தை வழங்குகிறது.

உயிரியலில் அலுமினியம் புளோரைடு அணைவுச்சேர்மங்கள் பாசுப்போரைல் பரிமாற்ற வினைகளின் இயக்கவியல் அம்சங்களை ஆய்வுசெய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன, இவை அடினோசின் டிரை பாசுப்பேட்டு, மற்றும் குவானோசின் டிரை பாசுப்பேட்டு போன்ற உயிரணுக்களின் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். வளர்சிதை மாற்றம், வளர்ச்சி, வேறுபடுத்துதல் போன்ற செயற்பாடுகளில் இந்த உயிரணுக்கள் முக்கியமாக பங்களிக்கின்றன[15] பல்லினமுப்படி குவானின் நியூக்ளியோடைடு பிணைப்பு புரதங்களுடன் பிணையவும் அவற்றை செயலூக்கவும் அலுமினியம் புளோரைடு பயன்படுகிறது. இப்புரதங்கள் தொடர்பான ஆய்வுகளுக்கும், அவற்றின் முப்பரிமாண கட்டமைப்புகளையும் உயிர்வேதியியல் நுட்பத்தையும் புரிந்து கொள்ளவும் தெளிவுபடுத்தவும் இச்சேர்மம் பயன்படுகிறது[16].

முக்கியப் பயன்கள்[தொகு]

சிர்க்கோனியம் புளோரைடுடன் அலுமினியம் புளோரைடைச் சேர்த்து ஒரு பகுதிப்பொருளாக புளோரோ அலுமினேட்டு கண்ணாடி தயாரிப்பில் பயன்படுத்துகிறார்கள். நொதித்தலைத் தடுக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது. மக்னீசியம் புளோரைடைப் போல இதை குறை அட்டவணை ஒளியியல் மென்படலமாக குறிப்பாக புற ஊதாக்கதிர் வெளிப்படுந்தன்மை தேவையான நேரத்தில் பயன்படுத்துகிறார்கள். இதற்காக ஆவிப்படிவு முறையில் இது படிவாக்கப்படுகிறது

பாதுகாப்பு[தொகு]

விலங்குகளுக்கு அலுமினியம் புளோரைடு வாய்வழியாகக் கொடுக்கப்படும் போது அதன் உயிர்க்கொள்ளும் அளவு (LD50) 0.1 கிராம் / கிலோகிராம் ஆகும் [17]. மீண்டும் மீண்டும் அல்லது நீடித்த உள்ளிழுத்தல் காசநோயை ஏற்படுத்தக்கூடும், மேலும் இதனால் எலும்பு மற்றும் நரம்பு மண்டலத்திலும் கூட தீய விளைவுகள் ஏற்பட்டு எலும்புகளில் மாற்றங்கள் மற்றும் நரம்பு மண்டல குறைபாடுகள் தோன்றலாம் [18].

அலுமினியம் புளோரைடு அணைவுச் சேர்மங்களாக உருவாவதுதான் இப்புளோரைடின் பெரும்பாலான நரம்பியல்நச்சு விளைவுகளுக்கு காரணமாகும். இந்த அணைவுச் சேர்மங்கள் பாசுப்பேட்டுகளின் வேதியியல் கட்டமைப்பு போல செயல்படுகின்றன. இதனால் அடினோசின் டிரை பாசுப்பேட்டு பாசுப்போ ஐதரோலேசு மற்றும் பாசுப்போலிப்பேசு டி ஆகியவற்றின் செயல்பாடுகளில் தாக்கத்தை உண்டாக்குகின்றன. மைரோமோலார் அளவுகளில் அலுமினியம் கிடைத்தால் கூட அலுமினியம் புளோரைடு உருவாகும் [19]. தொழிற்சாலைகளில் அலுமினியம் ஒடுக்கும் செயல்முறைகளின் போது அலுமினியம் புளோரைடு உமிழ்வு பாதிப்பு மனிதர்களுக்கு உண்டாகிறது [20]. அல்லது புளோரைடு மூலம் குடிநீர் வழியாக உடலுக்குள் நேரடியாகச் செல்வதன் மூலம் அல்லது பூச்சிக் கொல்லிகள் பயன்பாட்டில் எஞ்சியிருக்கும் மிச்சங்கள் போன்ற நடவடிக்கைகளும் இச்சேர்மத்தை மனித உடலுக்குள் செலுத்துகின்றன. குடிநீர், தேநீர், உணவு எச்சங்கள், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து தயாரிப்பு நுணுக்கங்கள், அலுமினியம்அடங்கிய அமிலங்கள் அல்லது மருந்துகள், மணம் நீக்கும் பொருட்கள், ஒப்பனை மற்றும் கண்ணாடியால் செய்யப்பட்ட பொருட்கள் போன்றவை அலுமினியத்தை மனிதனுக்குள் வெளிப்படுத்தும் ஆதாரங்கள் ஆகும். தண்ணீரில் காணப்படும் அலுமினிய வகைகளின் நீடித்த வெளிப்பாடு ஏற்படுத்தும் நரம்பியல் விளைவுகளை பற்றிய தகவல்கள் குறைவாக உள்ளன [21].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Haynes, William M., தொகுப்பாசிரியர் (2011). CRC Handbook of Chemistry and Physics (92nd ). Boca Raton, FL: CRC Press. பக். 4.45. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1439855110. 
  2. Haynes, William M., தொகுப்பாசிரியர் (2011). CRC Handbook of Chemistry and Physics (92nd ). Boca Raton, FL: CRC Press. பக். 4.131. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1439855110. 
  3. Lide, David R. (2003-06-19). CRC Handbook of Chemistry and Physics, 84th Edition. CRC Handbook. CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780849304842. https://books.google.com/books?id=kTnxSi2B2FcC. 
  4. 4.0 4.1 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth–Heinemann. பக். 233. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
  5. Hoppe, R.; Kissel, D. (1984). "Zur kenntnis von AlF3 und InF3 [1]". Journal of Fluorine Chemistry 24 (3): 327. doi:10.1016/S0022-1139(00)81321-4. 
  6. 6.0 6.1 6.2 Haynes, William M., தொகுப்பாசிரியர் (2011). CRC Handbook of Chemistry and Physics (92nd ). Boca Raton, FL: CRC Press. பக். 5.5. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1439855110. 
  7. Pohanish, Richard P. (2005-03-04) (in en). HazMat Data: For First Response, Transportation, Storage, and Security. John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780471726104. https://books.google.com/books?id=3Tbl2W8j-3oC&dq=nfpa+704+aluminum+fluoride&source=gbs_navlinks_s. 
  8. "Aluminum Fluoride". PubChem. National Institute of Health. பார்க்கப்பட்ட நாள் October 12, 2017. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  9. "NIOSH Pocket Guide to Chemical Hazards #0024". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  10. Dreveton, Alain (2012-01-01). "Manufacture of Aluminium Fluoride of High Density and Anhydrous Hydrofluoric Acid from Fluosilicic Acid". Procedia Engineering. SYMPHOS 2011 - 1st International Symposium on Innovation andTechnology in the Phosphate Industry 46 (Supplement C): 255–265. doi:10.1016/j.proeng.2012.09.471. http://www.sciencedirect.com/science/article/pii/S1877705812045341. 
  11. Aigueperse, J.; Mollard, P.; Devilliers, D.; Chemla, M.; Faron, R.; Romano, R.; Cuer, J. P. (2005) "Fluorine Compounds, Inorganic" in Ullmann’s Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a11_307
  12. Oskarssonite. Mindat.
  13. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
  14. Holleman, A. F.; Wiberg, E. "Inorganic Chemistry" Academic Press: San Diego, 2001. ISBN 0-12-352651-5.
  15. Wittinghofer, Alfred (1997-11-01). "Signaling mechanistics: Aluminum fluoride for molecule of the year". Current Biology 7 (11): R682–R685. doi:10.1016/S0960-9822(06)00355-1. http://www.sciencedirect.com/science/article/pii/S0960982206003551. 
  16. Vincent, Sylvie; Brouns, Madeleine; Hart, Matthew J.; Settleman, Jeffrey (1998-03-03). "Evidence for distinct mechanisms of transition state stabilization of GTPases by fluoride" (in en). Proceedings of the National Academy of Sciences 95 (5): 2210–2215. doi:10.1073/pnas.95.5.2210. பன்னாட்டுத் தர தொடர் எண்:0027-8424. பப்மெட்:9482864. பப்மெட் சென்ட்ரல்:19296. http://www.pnas.org/content/95/5/2210. பார்த்த நாள்: 2018-06-12. 
  17. "ALUMINUM FLUORIDE, CASRN: 7784-18-1". National Library of Medicine HSDB Database. CDC.gov. June 24, 2005. பார்க்கப்பட்ட நாள் October 12, 2017. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  18. "ALUMINIUM FLUORIDE (ANHYDROUS) International Chemical Safety Cards (ICSC)". CDC.gov National Institute for Occupational Safety and Health (NIOSH). July 22, 2015. பார்க்கப்பட்ட நாள் July 17, 2017. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  19. (in en) Fluoride in Drinking Water: A Scientific Review of EPA's Standards. https://www.nap.edu/read/11571: The National Academies Press. 2006. பக். 51-52, 219. doi:10.17226/11571. https://www.nap.edu/read/11571. 
  20. TOXICOLOGICAL PROFILE FOR FLUORIDES, HYDROGEN FLUORIDE, AND FLUORINE. https://www.atsdr.cdc.gov/toxprofiles/tp11.pdf: U.S. DEPARTMENT OF HEALTH AND HUMAN SERVICES Public Health Service Agency for Toxic Substances and Disease Registry. 2003. பக். 211. 
  21. Aluminum Compounds Review of Toxicological Literature Abridged Final Report. Prepared for National Institute of Environmental Health Sciences. NTP.gov Nomination Summary for Aluminum contaminants of drinking water (N20025). October 2001


புற இணைப்புகள்[தொகு]


.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலுமினியம்_புளோரைடு&oldid=3400169" இலிருந்து மீள்விக்கப்பட்டது