காத்தரைன் இரீவ்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காத்தரைன் இரீவ்சு (Katherine Reeves) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் ஆர்வார்டு சுமித்சோனிய வானியற்பியல் மையத்தில் பணிபுரிகிறார்.[1]

வாழ்க்கைப் பணியும் ஆராய்ச்சியும்[தொகு]

இவர் ஆர்வார்டு சுமித்சோனிய வானியற்பியல் மையத்தில் சூரியத் தணல் வீச்சின் ஆற்றலியல் பற்றியும் சூரிய ஒளிமுகட்டுப் பொருண்மை எறிவு பற்றியும் ஆய்வு செய்கிறார்.[1] இவர் பல நாடுகளில் இருந்து வந்துள்ள அறிவியலாளர்களுடன் இணைந்து கினோடின் X-கதிர் தொலைநோகித் திட்டத்திலும் பணியாற்றுகிறார்.[2]

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

இவர் 2016 இல் அமெரிக்க வானியல் கழகச் சூரியப் பிரிவின் காரன் ஆர்வே பரிசைப் பெற்றுள்ளார். இப்பரிசு தன் இளம் வாழ்க்கையில் சூரியனை ஆய்வு செய்வோர் தகைமைப் பாட்டி அளிக்கும் பரிசாகும்.[2]

வெளியீடுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "SPD Harvey Prize Citations". spd.aas.org. Archived from the original on 2016-05-26. பார்க்கப்பட்ட நாள் 2016-06-18.
  2. 2.0 2.1 "Kathy Reeves Awarded the 2016 Karen Harvey Prize for Solar Astronomy". www.cfa.harvard.edu/. 2015-12-17. பார்க்கப்பட்ட நாள் 2016-06-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காத்தரைன்_இரீவ்சு&oldid=3586564" இலிருந்து மீள்விக்கப்பட்டது