இன் காட் வீ டிரஸ்ட் (ஐக்கிய அமெரிக்கா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐக்கிய அமெரிக்க இருபது டாலர் பணத்தாளின் பின்புறத்தில் "IN GOD WE TRUST" அச்சிட்டுள்ளதைக் காண்க
புளோரிடாவின் கொடியில் "IN GOD WE TRUST"

"இன் காட் வீ டிரஸ்ட்" (IN GOD WE TRUST) ஐக்கிய அமெரிக்காவின் அலுவல்முறையான குறிக்கோளுரையாகும். புளோரிடா மாநிலத்தின் குறிக்கோளுரையும் இதுவே. இதற்கு முன்னதாக 1782இல் உருவாக்கப்பட்டு ஏற்கப்பட்டிருந்த ஐக்கிய அமெரிக்காவின் சின்னத்தில் இடம்பெற்றிருந்த இலத்தீன E pluribus unum (தமிழில்: பலவற்றில் ஒன்று) என்பதே அலுவல்முறையாக அறிவிக்கப்படாத குறிக்கோளுரையாக இருந்து வந்தது; இதற்கு மாற்றாக 1956இல் இன் காட் வீ டிரஸ்ட் நாட்டின் குறிக்கோளுரையாக ஏற்கப்பட்டது. [1][2]

"இன் காட் வீ டிரஸ்ட்" என்ற வாசகம் முதன்முதலில் 1864இல் இரண்டு சென்ட் நாணயத்தில் அச்சிடப்பட்டது.[3] 1957 முதல் அனைத்து காகித பணத்தாள்களிலும் அச்சிடப்பட்டுள்ளது. இதனை சட்டமாக 84வது பேரவை தீர்மானம் எண் 140இல் நிறைவேற இதற்கு குடியரசுத் தலைவர் டுவைட் டி. ஐசனாவர் சூலை 30, 1956இல் ஒப்புமை அளித்தார். 1957இல் முதன்முதலாக ஒரு டாலர் பணத்தாளில் அச்சிடப்பட்டது. இது அக்டோபர் 1, 1957இல் புழக்கத்திற்கு விடப்பட்டது.[3] அதே 84வது பேரவையின் 851ஆம் சட்டப்படி இது தேசிய குறிக்கோளுரையாகவும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஐசனோவரால் சூலை 30, 1956இல் ஒப்பமிடப்பட்டது.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Annual report – American Civil Liberties Union, Volume 5. American Civil Liberties Union. 1951. https://books.google.com/books?id=CxtVAAAAYAAJ&q=In+1956,+an+official+national+motto+was+adopted,+%22In+God+We+Trust,%22+replacing+the+unofficial+%22E+Pluribus+Unum.%22&dq=In+1956,+an+official+national+motto+was+adopted,+%22In+God+We+Trust,%22+replacing+the+unofficial+%22E+Pluribus+Unum.%22&hl=en&sa=X&ei=BGKsadjbfausdghasudghflasgdihasl;rghawuilrgfarhuglarhugzaehgl%20iuhalrighuafT4q_IKfj0QGWg6n_AQ&ved=0CDIQ6AEwAA. பார்த்த நாள்: 1 May 2012. "In 1956, an official national motto was adopted, "In God We Trust," replacing the unofficial "E Pluribus Unum."" 
  2. Refiguring Mass Communication: A History. University of Illinois Press. 24 March 2010. https://books.google.com/books?id=N6lrAmPlbvIC&pg=PA79&dq=#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 1 May 2012. "He held high the Declaration of Independence, the Constitution, and the nation's unofficial motto, e pluribus unum, even as he was recoiling from the party system in which he had long participated." 
  3. 3.0 3.1 U.S. Department of the Treasury (2011). "History of 'In God We Trust'". www.treasury.gov (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-03-14.
  4. "U.S. on the History of "In God We Trust"". United States Department of the Treasury. பார்க்கப்பட்ட நாள் 2009-04-22.
  5. United States Public Law 84-851, United States Public Law 84-851.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
In God We Trust
என்பதில் ஊடகங்கள் உள்ளன.