தோண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தோண்டி (ஒலிப்பு) என்பது ஒரு கையில் சுமந்து செல்லத்தக்க வடிவில் அமைக்கப்பட்ட ஒரு தண்ணீர் கொள்கலனாகும். தோண்டியானது மண், உலோகம்,[1] பனையோலையில் ஒற்றைச் சிறகு ஓலை போன்றவற்றால் செய்யப்பட்டு இருந்துள்ளது.[2] பனையோலைத் தோண்டியானது கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமாக இருந்தது. ஒரு பனை மட்டையிலிருந்து பிரியும் ஓலைகளில் அதன் ஓரத்திலிருக்கும் சிறிய ஓலைகளை நீக்கிவிட்டு குறைந்தபட்சம் ஒன்பது இலக்குகள் கொண்ட ஓலைகளை தெரிந்து கொண்டு அதை குருத்தோலையின் வடிவத்தில் இணைந்திருக்கும்படி கட்டி உருட்டி வடிவம் ஏற்படுத்தி, குறுக்காக ஒரு கம்பை கொடுத்து சுமந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டது இந்தத் தோண்டி ஆகும்.

குமரி மாவட்டத்தில் ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்பு தோண்டிகள் கிணற்றிலிருந்து நீர் இறைக்கப் பயன்படுத்தப்பட்டன. இன்றும் திருமண வீடுகளில் சாம்பார் போன்றவற்றை பரிமாறுவதற்கு தோண்டிகளையே பயன்படுத்தும் வழக்கம் உள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழ் தோண்டி யின் அர்த்தம்". அகராதி. ta.oxforddictionaries.com. பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2018.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. கற்பகத் தரு 08: தோண்டி எனும் நீர் சேகரிப்பான் தி இந்து தமிழ் 02 ஜூன் 2018
  3. காட்சன் சாமுவேல் (2 சூன் 2018). "தோண்டி எனும் நீர் சேகரிப்பான்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோண்டி&oldid=3577584" இலிருந்து மீள்விக்கப்பட்டது