ஐசிசி ஆண்டின் சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆண்டின் சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரருக்கான ஐசிசி விருது
விளக்கம்ஆண்டுதோறும் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரருக்கு வழங்கப்படுவது
வழங்குபவர்ஐசிசி
முதலில் வழங்கப்பட்டதுஇந்தியா ராகுல் திராவிட் (2004)
கடைசியாக வழங்கப்பட்டதுஆத்திரேலியா ஸ்டீவ் சிமித் (2017)
இணையதளம்https://www.icc-cricket.com/awards Edit on Wikidata

ஐசிசி ஆண்டின் சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரர் (ICC Test Player of the Year) என்பது 2004 ஆம் ஆண்டில் இருந்து அந்தந்த ஆண்டுகளில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு வழங்கப்படும் விருது ஆகும்.இதனை பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை வழங்குகிறது. இந்த விருதானது ஆண்டுதோறும் வழங்கப்படும் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் விருதுகளில் ஒன்றாகும்.[1]

தேர்வு[தொகு]

இந்த விருதானது 56 நபர்கள் கொண்ட அவையின் பரிந்துரையின் பேரில் வழங்கப்படுகிறது. 2004 ஆம் ஆண்டில் இதில் 50 நபர்கள் இருந்தனர். இந்த அவையில் தேர்வுத் துடுப்பாட்டம் விளையாடும் நாடுகளின் அணியின் தலைவர்கள் 10 பேர், பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்றட்டு நடுவர் குழுவில் உள்ள 18 பேர் மற்றும் முன்னாள் துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் செய்தியாளர்கள் 28 பேர் உள்ளனர். இந்தக் குழுவின் முடிவில் சம நிலை ஏற்பட்டால் விருது பகிந்தளிக்கப்படும்.

விருது பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றியாளர் பரிந்துரைக்கப்பட்ட ஏனையோர்
2004 ராகுல் திராவிட்
2005 ஜாக் கலிஸ்

இன்சமாம் உல் ஹக்
அடம் கில்கிறிஸ்ற்
கிளென் மெக்ரா
ஷேன் வோர்ன்

2006 ரிக்கி பாண்டிங்

முகம்மது யூசுப்
மைக்கேல் ஹசி
மகேல ஜயவர்தன
ஷேன் வோர்ன்

2007 முகம்மது யூசுப்

ரிக்கி பாண்டிங்
மகேல ஜயவர்தன
முத்தையா முரளிதரன்
முகம்மது ஆசிப்

2008 டேல் ஸ்டெய்ன்

சிவ்நாராயின் சந்தர்பால்

மகேல ஜயவர்தன
ஜாக் கலிஸ்

2009 கவுதம் கம்பீர்

மிட்செல் ஜோன்சன்
திலன் சமரவீர
ஆன்ட்ரூ ஸ்ட்ராவுஸ்

2010 வீரேந்தர் சேவாக்

சச்சின் டெண்டுல்கர்
அசீம் ஆம்லா
டேல் ஸ்டெய்ன்

2011 அலஸ்டைர் குக்
2012 குமார் சங்கக்கார
2013 மைக்கல் கிளார்க்
2014 மிட்செல் ஜோன்சன்
2015 ஸ்டீவ் சிமித்
2016 ரவிச்சந்திரன் அசுவின்
2017 ஸ்டீவ் சிமித்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Live Cricket Scores & News International Cricket Council", www.icc-cricket.com (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-06-02