நாகவள்ளி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாகவள்ளி
லாங்குல்யா
ஆறு
நாடு  இந்தியா
உற்பத்தியாகும் இடம் லக்பகால்
நீளம் 256.5 கிமீ (159 மைல்) தோராயமாக.
Discharge வங்காள விரிகுடா
 - சராசரி
ஸ்ரீகாகுளம் அருகே நாகவள்ளி ஆறு.

நாகவள்ளி ஆறு (The River Nagavali) என்பது இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் வடக்குப் பகுதி மற்றும் ஒடிசாவின் தெற்குப் பகுதி ஆகிய நிலங்களில் பாயும் முக்கிய ஆறுகளில் ஒன்றாகும் இந்த ஆறு.[1] இந்த ஆறு ருசிகுல்ய ஆறு மற்றும் கோதாவரி வடிநிலங்களுக்கு இடையே பாய்கிறது. இந்த ஆறு லாங்குல்யா ஆறு என்றும் அழைக்கப்படுகிறது.

தோற்றம் மற்றும் போக்கு[தொகு]

ஒடிசாவின் காலாஹந்தி மாவட்டத்தில் லக்பகால் என்ற இடத்திற்கருகே கிழக்குத் தொடர்ச்சி மலையின் 1300 மீட்டர்(4300 அடி) உயர சரிவுகளில் நாகவள்ளி ஆறு உற்பத்தியாகிறது.  இந்த ஆற்றின் புவியியல் ஆய அச்சுத் தொலைவுகள் வட அட்சரேகை 18 10 முதல் 19 44 வரை மற்றும் கிழக்குத் திசையில் 82 53 முதல் 84 05 வரையுள்ளவை ஆகும். நியமகிரி மலைகளில் பாக்சைட் சுரங்கம் அமைக்க உத்தேசித்திருக்கும் பகுதியானது நாகவளி ஆற்றின் வடிநிலத்தில் அமைந்துள்ளது.  [2]

இந்த ஆற்றன் மொத்த நீளமானது சற்றேறக்குறைய 256 கி.மீ (159 மைல்கள்) ஆகும். இத்தொலைவில் 161 கி,மீ (100 மைல்க ள்) ஒடிசாவிலும் மற்றும் மீதமுள்ள நீளமானது ஆந்திரப்பிரதேசத்திலும் பாய்ந்து வளப்படுத்துகிறது. இந்த ஆற்றின் வடிநிலப் பகுதியானது 9510 சதுர கி.மீ (3670 சதுர மைல்கள்) பரப்பைக் கொண்டுள்ளது. நாகவள்ளி ஆறானது ஒடிசா மற்றும் ஆந்திரப்பிரதேசத்தில் முறையே 4462 சதுர கி,மீ (1723 சதுர மைல்கள்) மற்றும் 5048 சதுர கி.மீ (1949 சதுர மைல்கள்) வடிநிலப்பகுதியைக் கொண்டுள்ள மாநிலங்களுக்கிடையே பாயும் ஆறாக உள்ளது. இந்த ஆற்று வடிநிலம், ஆண்டொன்றுக்கு 1000 மி.மீ (39 அங்குலம்) மழைப்பொழிவைப் பெறுகிறது. இந்த ஆற்றின வடிநிலப்பகுதியின் பெரும்பான்மை நிலப்பகுதியானது மலை சார்ந்த பகுதிகளாகவும் பழங்குடியின மக்கள் வாழும் பகுதியாகவும் அமைந்துள்ளது. இந்த ஆறானது, ஒடிசாவின் காலாஹந்தி, இராயகாடா மற்றும் கோராபுட் மாவட்டங்களிலும் மற்றும் ஆந்திரப்பிரதேசத்திலுள்ள சிறிகாகுளம் விழியநகரம் மாவட்டங்கள் ஆகியவற்றில் பாய்ந்து வளப்படுத்துகிறது.

கிளை நதிகள்[தொகு]

ஜான்ஜவதி, பாரா, பல்டியா, சந்தலா, சித்தகுர்ஹா, ஸ்ரீகோனா, குமுதுகெட, வெட்டிகட, சுவனர்முகி, வேனிக்தா, ரிக்னீதா மற்றும் வேகவதி ஆகியவை நாகவள்ளி நதியின் முக்கிய கிளை நதிகளாக உள்ளன. சுவர்ணமுகி நதியானது தனது பிறப்பிடத்தை சாலூர் மண்டலில் தொடங்குகிறது. கிழக்கு நோக்கி பாய்ந்து சென்று இறுதியாக ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் வங்காராவில் சங்கம் என்ற கிராமத்திற்கருகில் நாகவள்ளி ஆற்றுடன் சங்கமிக்கிறது. வேகவதி ஆறானது பாசிபென்டா மண்டலின் பாசிபெண்டா குன்றுகளில் உற்பத்தியாகிறது. வேகவதி ஆறு தனது தொடக்கத்தை கிழக்குத் தொடர்ச்சி மலையின் பச்சிபென்டா குன்றுகளில் கொண்டுள்ளது. இது சுவர்ணமுகி ஆற்றின் துணை நதியாகும். சுவர்ணமுகி நாகவள்ளி ஆற்றின் துணை நதியாகும். சாலூர் நகரம் மற்றும் பரதி ஆகியவை இந்த ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளன. இந்த இடங்களில் இரண்டு சாலைப் பாலங்கள் உள்ளன.

நகரங்கள் மற்றும் பெருநகரங்கள்[தொகு]

இராயகாடா நகரம் மற்றும் ஒடிசாவின் இராயகாடா மாவட்டத் தலைநகரம், நாகவள்ளி ஆறு நகரின் எல்லைப்பகுதிகளில் பாய்கிறது. ஸ்ரீகாகுளம் நகரம், ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு மாவட்டத்தின் தலைநகரம்: நாகவள்ளி ஆறு ஸ்ரீகாகுளம் நகரம் வழியாகப் பாய்ந்து ஸ்ரீகாகுளம் நகரிலிருந்து 5 கி.மீ தொலைவிலுள்ள காலேபள்ளி என்ற கிராமத்தின் அருகே கடலில் கலக்கிறது இராயகாடாவிற்கு அருகிலுள்ள ஹடிப்தார்: இது அழகான இயற்கைக் காட்சிகளைக் கொண்ட இடம். நாகவள்ளி ஆற்றின் போக்கில் காணப்படும் இரண்டு நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இங்குள்ள பாறைகள் பெரிய யானைகளைப் போன்ற தோற்றமளிக்கின்றன.

அடிக்குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகவள்ளி_ஆறு&oldid=2871281" இலிருந்து மீள்விக்கப்பட்டது