மருந்தாக்க வேதியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மருத்துவ வேதியியல் மற்றும் மருந்தியல் வேதியியல் (Medicinal chemistry and pharmaceutical chemistry) ஆகியவை வேதியியலுடன் குறிப்பாக தொகுப்பு முறை கரிம வேதியியல், மற்றும் மருந்தியல் மற்றும் பல பிற உயிரியல் சிறப்பு பிரிவுகள் ஆகியவற்றுடன் உறவாடும் துறைகளாக உள்ளன. இந்தப்பிரிவானது, மருந்துப்பொருட்களின் வடிவமைப்பு, வேதித் தொகுப்பு முறை மற்றும் மருந்தாக்கக் காரணிகளின் சந்தையின் வளர்ச்சி, அல்லது உயிர்-செயல்பாட்டு மூலக்கூறுகள் (மருந்துகள் ) ஆகியவற்றை உள்ளடக்கியதாக உள்ளன.

மருத்துவ வேதியியலானது புதிய மருந்துகளை தொகுப்பு முறையில் தயாரிப்பதற்கான செயல்முறைக்கு வேதியியலைப் பயன்படுத்துகின்றது. தற்போது உள்ள மருந்துகள் தயாரிக்கப்படும் செயல்முறைகளையும் அவை மேம்படுத்துகின்றன. மருந்தாக்க வேதியியலானது, மருந்து கண்டுபிடிப்பு மற்றும் வளர்ச்சியை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. மேலும், தாவரங்களில் காணப்படும் மருத்துவக் காரணிகளை தனிமைப்படுத்தி, புதிய செயற்கை மருந்து கலவைகள் உருவாக்கப்படுவதையும் கவனிக்கிறது.[1]

மருந்தாகப் பயன்படுத்தப்படும் சேர்மங்களில் பெரும்பாலானவை கரிமச்சேர்மங்களாகும். இவை பெரும்பாலும் சிறிய கரிம மூலக்கூறுகள் மற்றும் உயிரிய மருத்துவ பொருட்கள் என இரு பெரிய வகைப்பாடாக வகைப்படுத்தப்படுகின்றன. சிறிய கரிம மூலக்கூறுகளுக்கு உதாரணமாக அடோர்வாஸ்டாட்டின், புளூட்டிகசோன், கிளோபிடோகிராம் போன்றவற்றையும் மற்றும் உயிரிய மருத்துவப் பொருட்களுக்கு உதாரணமாக இன்பிலிக்சிமேப், எரித்ரோபோயிட்டின், இன்சுலின் கிளார்கின் போன்றவற்றையும் கூறலாம். பிந்தையவை பெரும்பாலும் புரதங்களிலிருந்து தயாரிக்கப்பட்டவை (இயற்கையான அல்லது மறுசேர்க்கை செய்யப்பட்ட பிறபொருளெதிரிகள், இயக்குநீர் போன்றவையாகும். கனிம மற்றும் கரிம உலோகக் கலவைகள் கூட மருந்துகளாகப் பயன்படுகின்றன. (எ.கா., இலித்தியம் மற்றும் பிளாட்டினத்தை அடிப்படையாகக் கொண்ட இலித்தியம் கார்பனேட் மற்றும் சிஸ்-பிளாடின் போன்றவை மற்றும் அத்துடன் காலியம்) ஆகியவையாகும்.

குறிப்பாக, மருத்துவ அல்லது மருந்தாக்க வேதியியலானது, பொதுவான நடைமுறையில் சிறிய கரிம மூலக்கூறுகள் மீது கவனம் செலுத்துகிறது. தொகுப்பு முறை கரிம வேதியியல் மற்றும் இயற்கையான விளைபொருட்களின் பண்புக்கூறுகள் மற்றும் கணக்கீட்டு வேதியியல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், வேதியிய உயிரியல், நொதியியல் மற்றும் கட்டமைப்பு உயிரியல் ஆகியவற்றுடன் இணைந்து, நோய் தீர்க்கும் இயல்புடைய காரணிகளை கண்டறியவும், மேம்படுத்தவும் முயற்சிக்கிறது. நடைமுறையில், இது வேதியியல் பண்புக்கூறுகளை அடையாளம் காணுவதோடு, பிறகு முறையான தொகுப்பு முறை வேதி மாற்றங்களின் மூலமாக, புதிய வேதிப்பொருட்களை உருவாக்கி நோய் தீர்க்கும் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு அவற்றை மாற்றவும் செய்கிறது.

மருந்துப் பொருட்கள் கண்டுபிடிப்பின் பாதையில்[தொகு]

கண்டுபிடிப்பு[தொகு]

ஒரு குறிப்பிட்ட, விரும்பத்தக்க உயிரியல் சார் நடவடிக்கைக்காக எடையளவு துல்லியமாக மதிப்பிடப்பட்ட, புதுமையான வேதியியல் சேர்மங்கள் அடையாளம் காணப்படுவதே கண்டுபிடிப்பு எனப்படுகிறது. இவ்வாறான கண்டுபிடிப்பு மருந்தாக்க வேதியியலில், ஹிட்ஸ் ("hits") என அழைக்கப்படுகிறது.[2]  துவக்க நிலை கண்டுபிடிப்பு மருந்துப்பொருளானது, ஏற்கெனவே, நடைமுறையல் இருக்கும் மருந்துக் காரணிகளைப் புதிய நோய்க்குறியியல் சிகிச்சை செயல்மைறக்காக மறுபயன்பாடு செய்வதிலிருந்து வருவதாகவோ[3] அல்லது புதிய அல்லது ஏற்கெனவே நடைமுறையில் இருக்கக்கூடிய பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள், தாவரங்கள் இவற்றிலிருந்து பெறப்பட்ட இயற்கை விளைபொருட்களின் உயிரிய விளைவுகளை உற்றுநோக்குவதன் மூலமாகவோ நிகழலாம்.[4][5] கூடுதலாக, இத்தகு புதிய கண்டுபிடிப்புகள், சிறு மூலக்கூறு "துண்டுகள்" சிகிச்சைக்கான இலக்குகள் (நொதிகள், ஏற்பிகள், முதலியன) உடன் ஒட்டிக்கொள்ளும் போது ஏற்படும் கட்டமைப்பு மாறுதல்களை உற்றுநோக்குவதிலிருந்தும் உருவாகின்றன. இத்தகைய நிகழ்வுகளில் மூலக்கூறு துண்டுகள், வேதியியல்ரீதியான இன்னும் சிக்கலான தொகுப்பு முறைகளை உருவாக்கும் ஆரம்பப் புள்ளியாக செயல்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.acs.org/content/acs/en/careers/college-to-career/chemistry-careers/medicinal-chemistry.html
  2. Hughes, Jp; Rees, S; Kalindjian, Sb; Philpott, Kl (2011-03-01). "Principles of early drug discovery" (in en). British Journal of Pharmacology 162 (6): 1239–1249. doi:10.1111/j.1476-5381.2010.01127.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:1476-5381. பப்மெட்:21091654. பப்மெட் சென்ட்ரல்:3058157. http://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1476-5381.2010.01127.x/abstract. 
  3. Johnston, Kelly L.; Ford, Louise; Umareddy, Indira; Townson, Simon; Specht, Sabine; Pfarr, Kenneth; Hoerauf, Achim; Altmeyer, Ralf et al. (2014-12-01). "Repurposing of approved drugs from the human pharmacopoeia to target Wolbachia endosymbionts of onchocerciasis and lymphatic filariasis". International Journal for Parasitology: Drugs and Drug Resistance. Includes articles from two meetings: "Anthelmintics: From Discovery to Resistance", pp. 218--315, and "Global Challenges for New Drug Discovery Against Tropical Parasitic Diseases", pp. 316--357 4 (3): 278–286. doi:10.1016/j.ijpddr.2014.09.001. பப்மெட்:25516838. பப்மெட் சென்ட்ரல்:4266796. http://www.sciencedirect.com/science/article/pii/S2211320714000244. 
  4. Harvey, Alan L. (2008-10-01). "Natural products in drug discovery". Drug Discovery Today 13 (19–20): 894–901. doi:10.1016/j.drudis.2008.07.004. பப்மெட்:18691670. http://www.sciencedirect.com/science/article/pii/S1359644608002651. 
  5. Cragg, Gordon M.; Newman, David J. (2013-06-01). "Natural products: A continuing source of novel drug leads". Biochimica et Biophysica Acta (BBA) - General Subjects 1830 (6): 3670–3695. doi:10.1016/j.bbagen.2013.02.008. பப்மெட்:23428572. பப்மெட் சென்ட்ரல்:3672862. http://www.sciencedirect.com/science/article/pii/S0304416513000512. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மருந்தாக்க_வேதியியல்&oldid=2749688" இலிருந்து மீள்விக்கப்பட்டது