அட்லாண்டிக் சூறாவளி பருவங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அட்லாண்டிக் பெருங்கடலில் வெப்ப மண்டல தாழ்வழுத்தம் காரணமாக உருவாகும் புயல் சின்னம் வழுபெற்று இடி காற்றுடன் உருவாகும் சூராவளி வீசும் காலங்கள் அட்லாண்டிக் சூறாவளி பருவங்கள் ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நிகழும் ஒரு பருவ நிலை ஆகும். இது வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள நாடுகளை பாதிக்கிறது.இதனால் பெருத்த பொருள் சேதமும் சில உயி சேதமும் ஏற்படுகிறது.[1] அட்லாண்டிக் புயற்பருவம் என்பது பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் அட்லாண்டிக் பெருங்கடலில் சூறாவளி உருவாகும் காலத்தைக் குறிக்கும். அட்லாண்டிக் மற்றும் வட பசிபிக் பகுதியில் உள்ள வெப்ப மண்டலப் புயல்கள் அனைத்தும் சூறாவளி, வெப்பமண்டல புயல்கள் அல்லது வெப்ப மண்டல அழுத்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இப்பகுதியில் புயல் ஏற்படும் போது அது நேரடியாக அமெரிக்க மற்றும் கரீபிய நாடுகளைப் பாதிக்கின்றன. இப்புயல்கள் குறித்து முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையளித்தல், அவற்றை அளவிடுதல் உள்ளிட்ட பணிகள் 19-ம் நூற்றாண்டின் மையப்பகுதியில் இருந்து மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. தற்போதைய நிலையில் சூன் முதல் தேதியில் இருந்து நவம்பர் 15-ம் தேதி வரை அட்லாண்டிக் புயற்பருவம் நீடிக்கிறது. இப்புயல்கள் பற்றிய முன்னெச்சரிக்கை அளிக்கும் நடவடிக்கைகளை அமெரிக்க அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள என்.ஓ.ஏ.ஏ. எனப்படும் தேசிய கடல் மற்றும் தட்பவெப்பநிலை நிர்வாக அமைப்பு மேற்கொண்டுவருகிறது.

மேற்கோள்[தொகு]

  1. Atlantic Oceanographic and Meteorological Laboratory, Hurricane Research Division. "Frequently Asked Questions: When is hurricane season?". NOAA. Archived from the original on July 18, 2006. பார்க்கப்பட்ட நாள் July 25, 2006.