கடற்கரை மேலாண்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Oosterscheldekering (கீழைப் புயல் தடுப்பு அரண்) கடற்சுவர், நெதர்லாந்து.

கடற்கரை மேலாண்மை (Coastal management) என்பது வெள்ளப் பெருக்கு, அரிமானம் ஆகியவற்றில் இருந்து தற்காப்பு நடவடிக்கைகளும் நுட்பங்களும் ஆகும். இந்நுட்பங்கள் கரை அரிமானத்தை நிறுத்தி நிலத்தை மீட்கிறது.[1]

புவி நிலப் பரப்பில் கடற்கரை வட்டாரங்கள் 15% அளவுப் பரப்பில் அமைகின்றன. ஆனால் அவை 40% அளவு உலக மக்கள்தொகைக்கு உணவு அளிக்கின்றன. ஏறத்தாழ 1.2 பில்லியன் மக்க்கள் கடலில் இருந்து 100 கிமீ தொலைவுக்குள்ளேயேk வாழ்கின்றனர். இவர்களது சராசரி அடர்த்தி உலகச் சராசரி மக்கள் அடர்த்தியை விட மூன்று மடங்காகும்.[2] நான்கில் மூன்று பங்கு உலகின் மக்கள் தொகை 2025 இல் கடற்கரைப் பகுதிகளில் வாழ்வர் என்பதால்லிந்தச் சிறிய பகுதி மாந்தச் செயல்பாடுகள் கடற்கரைகள் மீது பெருந்தாக்கத்தை விளைவிக்கும். இப்பகுதிகளில் செழிப்பான வளங்கள் செறிந்துள்ளதால் ஏராளமான பொருள்களையும் சேவைகளையும் தரவல்லதாக அமைவதால் இவையே வளணிக, தொழிலகச் செயல்பாடுகளின் மையங்களாக விளங்குகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் அரைமடங்கு மக்கள்தொகையினர் கடற்கரையில் இருந்து 50 கிமீ தொலைவுக்குள்ளாகவே வாழ்கின்றனர். கடற்கரை வளங்கள் பெரும்பகுதி ஒன்றியத்தின் பொருள் வளத்தை உருவாக்குகின்றன. மீன்பிடித்தல், கப்பல் கட்டுதலும் வணிகமும், சுற்றுலா ஆகியவற்றைச் சார்ந்த தொழிலகங்கள் ஆகியன ஐரோப்பவின் 89,000 கிமீ கடற்கரைப் பகுதிக்குப் போட்டி போடுகின்றன. கடற்கரைப் பகுதிகள் ஐரோப்பாவின் மிகவும் விலைமிக்க இயற்கை வாழ்விடங்களாக விளங்குகிறது.

கடல்மட்ட உயர்வு வேகமாக முடுக்கப்படுவதால், கடல்மட்ட உயர்வுப் பாதுகாப்பு 21 ஆம் நூற்றாண்டில் முதன்மை வாய்ந்த பணியாகிவிடும். கடல்மட்ட உயர்வு மாற்றங்கள் கடற்கரைக்கும் கடற்கரைச் சூழலுக்கும் பேரழிவை உருவாக்கும். அலைகளாலும் ஓதங்களாலும் கடர்கரை படிவுகள் குலைக்கப்படுகின்றன.

வரலாறு[தொகு]

துறைமுகம் சார்ந்த கடற்கரைப் பொறியியல் கடல்போக்குவரத்து தொடங்கியதும் கி.மு 3500 இலேயே தொடங்கிவிட்டது. துறைமுக மேற்றளங்கள், அலைமுறிகள் போன்ற துறைமுக வேலைகள் கையாலேயே மிகப் பேரளவில் கட்டப்பட்டன.

பண்டைய துறைமுகப் பணி எச்சங்கள் பல இடங்களில் இன்றும் காணப்படுகின்றன. பெரும்பாலான துறைமுகப் பணிகள் உரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு மறைந்துவிட்டன. பெரும்பாலான துறைமுக முயற்சிகள் துறைமுக்க் கட்டமைப்புகளை உருவாக்குவதிலேயே அமைந்தன. காயல்களின் நிறுவல் மட்டுமே துறைமுகம் சாராத பணியாகும். கடற்கரைப் பாதுகாப்பு இங்லகிலாந்திலும் நெதர்லாந்திலும் கி.பி ஆறாம் நூற்றாண்டு வாக்கிலோ அல்லது சற்றே அதற்கு முன்போ தோன்றியுள்ளது. நடுவண் தரைக்கடல் நீரோட்டங்களையும் காற்றுவீச்சின் போக்குகளையும் காற்று-அலை ஊடாட்டங்களையும் விளைவுகளையும் பண்டைய மக்கள் அறிந்திருந்தனர்.

உரோமர்கள் துறைமுக வடிவமைப்பில் பல் புதுமைகளைப் புகுத்தியுள்ளனர்ரவர்கள் நீரடியில் சுவர்கள் கட்டியுள்ளனர்; தின்ம அலைமுறிகளை கட்டியெழுப்பியுள்ளனர். மணல்படிவைத் தடுக்க அலைத்தெறிப்பு நிகழ்வைச் சில இடங்களில் பயன்படுத்தியுள்ளனர்.அலைகள் முதன்மை அலைமுறிவுப் பகுதிக்கு வருமுன்பே அலைகளை முறிக்க நீர்ப்ப்ரப்பளவு உயர அலைமுறிகளைக் கட்டியுள்ளனர். நெதர்லாந்தில் வெல்சன் துறைமுகத்தைப் பேண முதன்முதலாகத் தூர்வாரியுள்ளனர். திண்மக் குத்துச்சுவர்களுக்கு மாற்றாக திறந்த குத்தூண் கடல்மேடைகளைக் கட்டி வண்டல்படிவுச் சிக்கலைத் தீர்த்துள்ளனர்.

இடைக்காலம்[தொகு]

கடல் தாக்குதலால் மக்கள் பல கடற்கரை நகரங்களையும் துறைமுகங்களையும் துறந்து வெளியேறினர். பிற துறைமுகங்கள் இயற்கையான வண்டல்படிவாலும், கடல்நீர் கரியில் இருந்து முன்னேறியதாலும் பின்னேறியதாலும் அழிந்தன. வெனிசு நகரக் காயல் பகுதி மக்கள்தொகை குறைவாக இருந்து தொடர்ந்து முன்னேற்றமும் வளர்ச்சியும் கன்டுவந்த பகுதியாகு. இங்குக் கடர்கரைப் பாதுகாப்புப் பணிகள் படிமலர்ந்த வரலாற்றைக் குறிப்பிடும் எழுத்து வாயிலான ஆவணங்கள் கிடைக்கின்றன.

புத்தியற் காலம்[தொகு]

மறுமலர்ச்சிக்குப் பிறகு, துறைமுகம் கட்டும் உரோம அணுகுமுறையை தவிர வேறு குரிப்பிடும்படியான மேம்பாடேதும் நிகழவில்லை. பிறகு, 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நீராவிப் பொறி வழக்கில் வந்ததும், புது நிலங்களுக்கும் வணிகத் தடங்களுக்குமான தேடல் தொடங்கியதும், பிரித்தானியப் பேரரசு பல குடியேற்ற நாடுகளில் விரிவுற்றதும், வேறு காரணங்களாலும் கடல் வணிகத்திலும் துறைமுகப் பணிகளிலும் புதிய ஆர்வம் மேலிட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Coastal Zones".
  2. Small & Nicholls 2003.

தகவல் வாயில்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Coastal management
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
நிகழ்படங்கள்
படிமங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடற்கரை_மேலாண்மை&oldid=3580214" இலிருந்து மீள்விக்கப்பட்டது