ஆற்றல் பானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆற்றல் பானம் (Energy drink)உடல் மற்றும் மனம் ஆகியவற்றைத் தூண்டக்கூடிய பொருட்களைக் கொண்டிருக்கும் ஒரு வகையான பானம் ஆகும். இது பொதுவாக காஃவீன் உட்பட, மன மற்றும் உடல் தூண்டுதலை அதிகப்படுத்துகிறது. ("ஆற்றல்" என சந்தைப்படுத்தப்படுகிறது, ஆனால் உணவு ஆற்றலில் இருந்து வேறுபட்டது) இந்த ஆற்றல் பானங்கள் கார்பனேற்றம் செய்யப்பட்டிருக்கலாம் அல்லது பல ஆற்றல் பானங்கள் சர்க்கரை அல்லது பிற இனிப்புகள், மூலிகைச் சாறுகள், டாரைன் மற்றும் அமினோ அமிலங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம். அவை ஆற்றல் உற்பத்தி பொருட்கள் என்ற பெரிய வகைப்பாட்டின் துணைக்குழு ஆகும். இதில் இனிப்புத் துண்டுகள் மற்றும் கூழ்மங்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் இருந்து வேறுபடுகின்றன. இத்தகைய பொருட்கள் விளையாட்டு செயல்திறனை அதிகரிக்க உதவுவதாக விளம்பரம் செய்யப்படுகின்றன.இவ்வகை ஆற்றல் பான விற்பனையில் பல்வேறு வர்த்தகரீதியிலான நிறுவனங்கள் சந்தையில் உள்ளன.

காப்பி, தேநீர் மற்றும் இதர இயற்கையாகவே காஃவீனேற்றப்பட்ட பானங்கள் வழக்கமாக ஆற்றல் பானங்களாக கருதப்படுவதில்லை. சில ஆல்ககால் கலந்த பானங்களான பக்ஃபாஸ்ட் டானிக் பழரசம் போன்றவை காஃவீன் மற்றும் இதர கிளர்ச்சியூட்டும் பொருட்களைக் கொண்டிருக்கின்றன. மாயோ கிளினிக்கின் கூற்றுப்படி, பொதுவான ஆரோக்கியமான வயதுவந்தோர் 400 மில்லி காஃவீனை தினமும் சாப்பிடுவது பாதுகாப்பானது. இது ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையத்தின் ஒரு குழுவினரால் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்தக் குழுவானது, ஒரு நாளைக்கு 400 மி.கி. வரை காஃவீன் உட்கொள்ளல் வயதுவந்தோருக்கு பாதுகாப்பான அளவு என்றும் முடிவெடுத்து அறிவித்துள்ளது. ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையத்தின் கூற்றுப்படி இது 4 கோப்பை காபி (90 மி.கி ஒன்று) அல்லது 5 திட்ட அளவு குவளைகள் (250 மி.லி) ஆற்றல் பானம் (80 மி.கி.) ஒவ்வொருவருக்கும் சமமானதாகும்.[1][2][3]

ஆற்றல் பானங்கள் காஃவீன் மற்றும் சர்க்கரை வழங்கும் விளைவுகளைக் கொண்டிருக்கின்றன. ஆனால், இத்தகைய ஆற்றல் பானங்களல் கலந்துள்ள மற்ற பொருட்களின் பல்வேறு வகைப்பாடுகள் ஏதாவது விளைவுகளைக் கொண்டுள்ளனவா என்பதற்கு சிறிதளவு ஆதாரங்கள் மட்டுமோ அல்லது ஆதாரங்கள் இல்லாத நிலையோ தான் காணப்படுகிறது.[4] பெரும்பாலான ஆற்றல் பானங்களின் விளைவுகளான, கவன அதிகரிப்பு, எதிர்வினை வேகம் போன்ற புலனுணர்வு சார்ந்த செயல்திறன்களில் ஏற்படும் மாற்றம் முதன்மையாக அவற்றில் கலந்துள்ள காஃவீனின் காரணமாக ஏற்படுபவையாகும்.[5] எனினும், இதர ஆய்வுகள் இத்தகைய ஆற்றல் பானங்கனினால் ஏற்படும் செயல்பாடுகளிலான முன்னேற்றமானது அவற்றில் கலந்துள்ள அனைத்து உட்பொருட்களின் காரணமாக ஏற்படுபவை என்று ஏற்றிச் சொல்கின்றன.[6] ஆற்றல் பானங்களின் விளம்பரங்கள் பொதுவாக தசை வலிமை மற்றும் நீடித்து நிலைக்கும் திறன் ஆகிவை அதிகரிப்பதாக உரைக்கின்றன. ஆனால், இந்த வகை முடிவுகளுக்கு எந்த வகை அறிவியல்பூர்வமான ஆதாரங்களும் அற்றவையாகும்.[7] ஆற்றல் பானங்களுடன் மதுப்பொருட்கள் இணைந்து பயன்படுத்தப்படும் போது, அதிகரிக்கப்பட்ட காய விகிதங்கள் போன்ற சில உடல் நலம் சார்ந்த அபாய விளைவுகளோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளன, மேலும், அளவுக்கதிகமான மற்றும் திரும்பத்திரும்ப நுகரப்படும் போது மாரடைப்பு மற்றும் உளவியல் சார்ந்த சில பிரச்சனைகளுக்கு வழி வகுக்கக்கூடும்.

பயன்படுத்துவதன் விளைவுகள்[தொகு]

ஆற்றல் பானங்கள், காஃவீனின் சுகாதார நலன்கள் சார்ந்த நன்மைகளை வழங்குவதோடு அவை கொண்டுள்ள மற்ற பொருட்களின் நன்மைகளையும் வழங்குவதாக சந்தைப்படுத்தப்படுகின்றன.[8] காஃவீன் கொண்டிருக்கும் ஆற்றல் பானங்கள் விழிப்புணர்வை மேம்படுத்துவதாக சுகாதார நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.[8] ஆல்ககால் பானங்கள் சேர்த்து ஆற்றல் பானங்கள் நுகர்வு பல கல்லூரி வளாகங்களில் ஒரு பொதுவான நிகழ்வு ஆகும்.[9] ஆல்கஹால் தொழிற்துறை சமீபத்தில் ஆல்கஹால் மற்றும் எரிசக்தி பானங்கள் சந்தைப்படுத்தல் ஒருங்கிணைப்புக்காக விமர்சிக்கப்பட்டது. கல்லூரி மாணவர்கள் ஆற்றல் பானங்களையும் மதுபானங்களையும் கலந்த கலவையைப் பயன்படுத்துவது, மாணவர்களிடையே மது சம்பந்தமான விளைவுகள் மற்றும் பல உடல்நல ஆபத்துக்களை ஏற்படுத்துபவையாக அமைந்து விடுகிறது.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. Preszler, Buss. "How much is too much?". Mayo Clinic. பார்க்கப்பட்ட நாள் 5 November 2014.
  2. Smith, Leesa (3 September 2014). "'My heart just hit the floor': A mother's pain after her son died from drinking FOUR energy drinks daily... as a doctor warns no more than two caffeinated beverages per day". Daily Mail Australia. பார்க்கப்பட்ட நாள் 3 September 2014. {{cite web}}: More than one of |author= and |last= specified (help)
  3. "Scientific Opinion on the safety of caffeine | Europäische Behörde für Lebensmittelsicherheit". www.efsa.europa.eu. பார்க்கப்பட்ட நாள் 2 January 2016.
  4. "Do energy drinks contain active components other than caffeine?". Nutr Rev 70 (12): 730–44. 2012. doi:10.1111/j.1753-4887.2012.00525.x. பப்மெட்:23206286. https://archive.org/details/sim_nutrition-reviews_2012-12_70_12/page/730. 
  5. Van Den Eynde, F; Van Baelen, PC; Portzky, M; Audenaert, K (2008). "The effects of energy drinks on cognitive performance". Tijdschrift voor psychiatrie 50 (5): 273–81. பப்மெட்:18470842. 
  6. Alford, C.; Cox, H.; Wescott, R. (1 January 2001). "The effects of red bull energy drink on human performance and mood". Amino Acids 21 (2): 139–150. doi:10.1007/s007260170021. பப்மெட்:11665810. 
  7. "Performance outcomes and unwanted side effects associated with energy drinks.". Nutr Rev 72 Suppl 1: 108–20. 2014. doi:10.1111/nure.12132. பப்மெட்:25293550. 
  8. 8.0 8.1 Meier, Barry (1 January 2013). "Energy Drinks Promise Edge, but Experts Say Proof Is Scant". த நியூயார்க் டைம்ஸ் (New York: NYTC). https://www.nytimes.com/2013/01/02/health/scant-proof-is-found-to-back-up-claims-by-energy-drinks.html. பார்த்த நாள்: 26 September 2014. 
  9. 9.0 9.1 O'Brien, Mary Claire; McCoy, Thomas P.; Rhodes, Scott D.; Wagoner, Ashley; Wolfson, Mark (2008). "Caffeinated Cocktails: Energy Drink Consumption". Academic Emergency Medicine 15 (5): 453–60. doi:10.1111/j.1553-2712.2008.00085.x. பப்மெட்:18439201. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆற்றல்_பானம்&oldid=3761215" இலிருந்து மீள்விக்கப்பட்டது