லூசினிக்கி அரங்கு

ஆள்கூறுகள்: 55°42′57.56″N 37°33′13.53″E / 55.7159889°N 37.5537583°E / 55.7159889; 37.5537583
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லூசினிக்கி அரங்கு
Luzhniki Stadium

UEFA 4/4 stars
இடம் காமோவ்னிக்கி மாவட்டம், மாஸ்கோ, உருசியா
அமைவு 55°42′57.56″N 37°33′13.53″E / 55.7159889°N 37.5537583°E / 55.7159889; 37.5537583
எழும்பச்செயல் ஆரம்பம் 1955
திறவு 31 சூலை 1956
சீர்படுத்தது 1996–1997, 2001–2004, 2013–2017
உரிமையாளர் மாஸ்கோ அரசு
ஆளுனர் லூசினிக்கி ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் JSC
தரை புல்
கட்டிட விலை 350 மில்லியன் (2013–17)[1]
முன்னாள் பெயர்(கள்) மத்திய லெனின் அரங்கு (1956–1992)
குத்தகை அணி(கள்) உருசிய தேசிய காற்பந்து அணி
அமரக்கூடிய பேர் 81,000
பரப்பளவு 105 x 68 மீட்டர்கள்

லூசினிக்கி அரங்கு (Luzhniki Stadium, உருசியம்: стадион «Лужники», பஒஅ[ஸ்தாஜியோன் லூஸ்னிக்கி]) என்பது உருசியாவின் தேசிய விளையாட்டரங்கம் ஆகும். இது தலைநகர் மாஸ்கோவில் அமைந்துள்ளது. மொத்த 81,000 இருக்கைகளைக் கொண்ட இவ்வரங்கு உருசியாவின் மிகப் பெரிய காற்பந்து விளையாட்டரங்கமும், ஐரோப்பாவில் உள்ள பெரிய விளையாட்டரங்குகளில் ஒன்றும் ஆகும். இது லூசினிக்கி ஒலிம்பிக் வளாகத்தின் ஒரு பகுதி ஆகும். மாஸ்கோ நகரின் மத்திய நிருவாக வட்டத்தில் காமோவ்னிக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

1980 ஒலிம்பிக் போட்டிகளின் போது லூசினிக்கி அரங்கு முக்கிய விளையாட்டரங்கமாகத் திகழ்ந்தது.[2] ஒலிம்பிக் ஆரம்ப நிகழ்வு, இறுதி நிகழ்வு, மற்றும் பல போட்டிகள் இங்கு நிகழ்ந்தன.[3] ஐகாசச இவ்வரங்கத்தை நான்காம் தரத்தில் நிர்ணயித்துள்ளது. இவ்வரங்கில் 1999 இல் ஐரோப்பியக் கிண்ண இறுதிப் போட்டி இடம்பெற்றது. 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளில் லூசினிக்கி அரங்கு முக்கிய விளையாட்டரங்காக அறிவிக்கப்பட்டது. இச்சுற்றின் இறுதிப் போட்டி உட்பட ஏழு போட்டிகள் இங்கு நடைபெறவிருக்கின்றன.

சோவியத் காலத்தில் மாஸ்கோ ஸ்பர்த்தாக் விளையாட்டுக் கழகத்தின் கால்பந்து விளையாட்டுகள் இவ்வரங்கிலேயே நடத்தப்பட்டு வந்தன. தற்போது உருசிய தேசிய காற்பந்து அணியின் விளையாட்டுகள் முக்கியமாக நடத்தப்படுகின்றன.[4]

1982 லூசினிக்கி பேரழிவு[தொகு]

லூசினிக்கி அரங்கில் 1982 அக்டோபர் 20 அன்று ஸ்பர்த்தாக், மற்றும் டச்சு ஆர்லெம் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு விளையாட்டுப் போட்டி ஒன்றின் போது ஏற்பட நெரிசலில் 66 பேர் உயிரிழந்தனர்.[5]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லூசினிக்கி_அரங்கு&oldid=3285512" இலிருந்து மீள்விக்கப்பட்டது