எகிப்து தேசிய காற்பந்து அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எகிப்து
அடைபெயர்பாரோசு
(மிசிரி மொழி: الفراعنة El Phara'ena)
கூட்டமைப்புஎகிப்திய காற்பந்து சங்கம்
மண்டல கூட்டமைப்புவட ஆப்பிரிக்க காற்பந்து கூட்டமைப்புகளின் ஒன்றியம்
கண்ட கூட்டமைப்புஆகாகூ (ஆப்பிரிக்கா)
தன்னக விளையாட்டரங்கம்போர்க் அல் அராப் அரங்கு
பீஃபா குறியீடுEGY
பீஃபா தரவரிசை46 (17 மே 2018)
அதிகபட்ச பிஃபா தரவரிசை9 (சூலை – செப் 2010, திசம்பர் 2010)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை75 (மார்ச் 2013)
எலோ தரவரிசை52 (20 மார்ச் 2018)
அதிகபட்ச எலோ6 (ஆகத்து 2010)
குறைந்தபட்ச எலோ62 (9 மார்ச் 1986, 12 சூன் 1997)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 இத்தாலி 2–1 எகிப்து 
(பெல்ஜியம், 28 ஆகத்து 1920)
பெரும் வெற்றி
 எகிப்து 15–0 லாவோஸ் 
(ஜகார்த்தா, இந்தோனேசியா; 15 நவம்பர் 1963)[1]
பெரும் தோல்வி
 இத்தாலி 11–3 எகிப்து 
(ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து; 10 சூன் 1928)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்3 (முதற்தடவையாக 1934 இல்)
சிறந்த முடிவு13வது, 1934
ஆப்பிரிக்கக் கோப்பை
பங்கேற்புகள்23 (முதற்தடவையாக 1957 இல்)
சிறந்த முடிவுவாகையாளர்கள், 1957, 1959, 1986, 1998, 2006, 2008, 2010
கூட்டமைப்புகள் கோப்பை
பங்கேற்புகள்2 (முதற்தடவையாக 1999 இல்)
சிறந்த முடிவுகுழு நிலை, 1999, 2009

எகிப்து தேசிய காற்பந்து அணி (Egypt national football team, மிசிரி மொழி: مُنتخب مَــصـر), பன்னாட்டுக் கால்பந்துப் போட்டிகளில் எகிப்து நாட்டின் சார்பாகப் பங்கேற்கும் கால்பந்து அணியாகும். இதனை, எகிப்தியக் கால்பந்துச் சங்கம் நிர்வகிக்கிறது. 1921 ஆம் ஆண்டில் இச்சங்கம் உருவானது. இவ்வணி ஆரம்ப காலம் தொட்டு கெய்ரோ பன்னாட்டு அரங்கில் தனது உள்ளக விளையாட்டுகளை நடத்தியது. ஆனால் 2012 முதல் அலெக்சாந்திரியாவில் உள்ள போர்க் எல் அராப் அரங்கில் பெரும்பான்மையான போட்டிகளை நடத்துகிறது.

எகிப்து ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பையை ஏழு முறை வென்றுள்ளது. அத்துடன் பிஃபா உலகத் தரவரிசையில் ஒன்பதாவது நிலையிலும் வந்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் உலகின் முதல் 10 அணிகளில் இடம்பிடித்த மூன்று ஆப்பிரிக்க நாடுகளில் எகிப்தும் ஒன்றாகும். இருந்தாலும், உலக்க்கோப்பை போட்டிகளில் எகிப்து இதுவரை இரண்டு தடவைகளே விளையாடியுள்ளது. (1934, 1990), இவ்விரு தடவைகளிலும் எப்போட்டியிலும் வெற்றியடையவில்லை.

2017 ஆப்பிரிக்கக் கோப்பையில் எகிப்து இறுதிப் போட்டியில் கமரூன் அணியுடன் விளையாடித் தோற்று இரண்டாம் நிலைக்கு வந்தது.[2] இச்சுப்புப் போட்டியின் மூலம் எகிப்து 2017 பிஃபா உலகத் தரவரிசையில் 60 இல் இருந்து 19-ஆம் நிலைக்கு முன்னேறியது.

2017 அக்டோபர் 8 இல் எகிப்து 28 ஆண்டுகளின் பின்னர் 2018 உலகக் கோப்பையில் விளையாடத் தகுதி பெற்றது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.superkoora.com/ar/match/55084/stats[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "El-Hadary's heroics send Egypt to AFCON 2017 final". 2 February 2017.
  3. "Mohamed Salah brace sends Egypt to Russia". AfricanFootball.com. 8 October 2017. Archived from the original on 26 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 10 October 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]