ஜீன் பால் கெட்டி அருங்காட்சியகம்

ஆள்கூறுகள்: 34°04′39″N 118°28′30″W / 34.07750°N 118.47500°W / 34.07750; -118.47500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜீன் பால் கெட்டி அருங்காட்சியகம்
ஜீன் பால் கெட்டி அருங்காட்சியகம் மற்றும் கெட்டி வில்லாவின் வான் காட்சி
Map
நிறுவப்பட்டது1974 (1974)
அமைவிடம்1200 கெட்டி மையம், லாஸ் ஏஞ்சலீஸ்; மற்றும் 17985 பசிபிக் கடற்கரை நெடுஞ்சாலை, லாஸ் ஏஞ்சலீஸ், கலிபோர்னியா
ஆள்கூற்று34°04′39″N 118°28′30″W / 34.07750°N 118.47500°W / 34.07750; -118.47500
வகைஓவியக் காட்சியகம்
வருனர்களின் எண்ணிக்கை2,023,467 (2016)[1]
இயக்குனர்திமோத்தி பாட்ஸ்
வலைத்தளம்www.getty.edu/museum/
கெட்டி அருங்காட்சியகத்தை ஆண்டிற்கு 1.08 மில்லியன் பார்வையிடுகின்றனர்.[2]

ஜீன் பால் கெட்டி அருங்காட்சியகம் (J. Paul Getty Museum), பொதுவாக கெட்டி எனப்படும் ஓவியக் காட்சியகம், ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் பிரண்ட்வுட் பகுதியில் கெட்டி மையம் மற்றும் கெட்டி வில்லா எனும் இரு வளாகங்களில் செயல்படுகிறது. இதன் நிறுவனர் ஜீன் பால் கெட்டி ஆவார்.

2016ல் மட்டும் கெட்டி அருங்காட்சியகத்தை இரண்டு மில்லியன் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர்.[1]

இவ்வருங்காட்சியகத்தில் மேற்குலகின் மத்திய காலம் முதல் தற்காலம் வரையிலான நெய்யோவியங்கள், கடிகாரங்கள் போன்றவைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இவ்வருங்காட்சியகத்தின் கெட்டி வில்லா வளாகத்தில், பண்டைய கிரேக்கம், பண்டைய ரோம் மற்றும் பண்டைய எரித்திரியா நாடுகளின் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[3]

வரலாறு[தொகு]

1974ல் ஜீன் பால் கெட்டி என்பவர் இவ்வருங்காட்சியகத்தை நிறுவினார். [4]1982ல் இவ்வருங்காட்சியகம் பார்வையாளர் கட்டணமாக 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாயாக ஈட்டியுள்ளது.[5]1983ல் முந்தைய மேற்கு ஜெர்மனி நாட்டின் 144 மத்திய காலத்திய ஒளிரும் சித்திரங்களை, கெட்டி அருங்காட்சியகம் விலைக்கு வாங்கி வைத்தது. [6]1997ல் இவ்வருங்காட்சியகம் தற்போதைய இடத்திற்கு மாற்றியது. கெட்டி அருங்காட்சியகம், ஊடாடும் மல்டிமீடியா தொழில்நுட்பங்களின் தொகுப்பானது, நிகழ்ச்சியைப் பற்றி பார்வையாளர்களுக்குத் தெரிவிக்கிறது.[7]

அருங்காட்சியகத்தின் முக்கிய கலைப்பொருட்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Visitor Figures 2016" (PDF). The Art Newspaper Review. April 2017. p. 14. பார்க்கப்பட்ட நாள் 23 March 2018.
  2. "The J. Paul Getty Trust". The Getty. J. Paul Getty Museum. Archived from the original on மே 26, 2015. பார்க்கப்பட்ட நாள் மே 19, 2015.
  3. "Visit the Getty". Getty.edu. பார்க்கப்பட்ட நாள் January 26, 2012.
  4. "THE GETTY VILLA TO OPEN JANUARY 28, 2006". Press Release. J. Paul Getty Trust. Archived from the original on ஏப்ரல் 19, 2019. பார்க்கப்பட்ட நாள் June 16, 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. McGill, Douglas C. (March 4, 1987). "Getty, The Art World's Big Spender". The New York Times. https://query.nytimes.com/gst/fullpage.html?res=9B0DE0DD133DF937A35750C0A961948260&sec=&spon=&pagewanted=all. பார்த்த நாள்: May 5, 2010. 
  6. Eric Pace (July 23, 1996), Peter Ludwig, 71, German Art Collector, Dies த நியூயார்க் டைம்ஸ்.
  7. "Getty Museum in Los Angeles, California". பார்க்கப்பட்ட நாள் 19 September 2022.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Getty Museum
என்பதில் ஊடகங்கள் உள்ளன.